87. ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
87:1
87:1 سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏
سَبِّحِ துதித்து தூய்மைப் படுத்துவீராக اسْمَ பெயரை رَبِّكَ உம் இறைவனின் الْاَعْلَىۙ‏ மிக உயர்ந்தவனாகிய
87:1. (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:1. (நபியே!) மிக மேலான உமது இறைவனின் திருப்பெயரை நீர் புகழ்ந்து துதி செய்வீராக;
87:1. (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
87:1. (நபியே!) மிக உயர்வானவனாகிய உமதிரட்சகனின் பெயரை நீர் (புகழ்ந்து) துதி செய்வீராக!
87:2
87:2 الَّذِىْ خَلَقَ فَسَوّٰى ۙ‏
الَّذِىْ خَلَقَ அவன்தான் படைத்தான் فَسَوّٰى ۙ‏ இன்னும் ஒழுங்கு படுத்தினான்
87:2. அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:2. அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
87:2. அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்;
87:2. அவன் எத்தகையவனென்றால், அவனே (படைப்பினங்களனைத்தையும்) படைத்து பிறகு (அவற்றைச்) செவ்வையாக்கினான்.
87:3
87:3 وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى ۙ‏
وَالَّذِىْ قَدَّرَ அவன்தான் நிர்ணயம் செய்தான் فَهَدٰى ۙ‏ இன்னும் வழிகாட்டினான்
87:3. மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
87:3. அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.
87:3. மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான்.
87:3. இன்னும், அவன் எத்தகையவனென்றால், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) நிர்ணயம் செய்து பிறகு (அவற்றை அடைய) நேர்வழி காட்டினான்.
87:4
87:4 وَالَّذِىْۤ اَخْرَجَ الْمَرْعٰى ۙ‏
وَالَّذِىْۤ اَخْرَجَ அவன்தான் வெளியாக்கினான் الْمَرْعٰى ۙ‏ பசுமையான புல்லை
87:4. அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:4. அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.
87:4. மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான்.
87:4. இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சலுக்குரியவற்றை வெளியாக்கினான்.
87:5
87:5 فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰىؕ‏
فَجَعَلَهٗ இன்னும் அதை ஆக்கினான் غُثَآءً சருகாக اَحْوٰىؕ‏ கருத்த (காய்ந்த)
87:5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:5. பின்னர் அவற்றை உலர்ந்த சருகுகளாக ஆக்குகிறான்.
87:5. பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான்.
87:5. பின்னர் அவைகளை உலர்ந்த கருத்த கூளங்களாக ஆக்கினான்.
87:6
87:6 سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ‏
سَنُقْرِئُكَ உமக்குக் கற்பிப்போம் فَلَا تَنْسٰٓىۙ‏ ஆகவே நீர் மறக்க மாட்டீர்
87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:6. (நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர்.
87:6. (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்;
87:6. (நபியே! நம் வசனங்களை) நாம் உம்மை ஓதிடச் செய்வோம்; பிறகு நீர் மறக்கமாட்டீர்.
87:7
87:7 اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىؕ‏
اِلَّا தவிர مَا شَآءَ நாடியதை اللّٰهُ‌ؕ அல்லாஹ் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَعْلَمُ அறிவான் الْجَهْرَ வெளிப்படையானதை وَمَا يَخْفٰىؕ‏ இன்னும் மறைந்திருப்பதை
87:7. அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:7. அல்லாஹ் நாடினாலே தவிர. நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்.
87:7. ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான்.
87:7. அல்லாஹ் நாடியதைத் தவிர; நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்.
87:8
87:8 وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰى ‌ۖ‌ۚ‏
وَنُيَسِّرُكَ உமக்கு இலகுவாக்குவோம் لِلْيُسْرٰى ۖ‌ۚ‏ சொர்க்கப் பாதையை
87:8. அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:8. சொர்க்கப் பாதையை நாம் உமக்கு எளிதாக்கித் தருவோம்.
87:8. மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம்.
87:8. மேலும், (ஈருலக நன்மைகளைச் செய்ய) இலகுவானதன் பால் உமக்கு நாம் எளிதாக்குவோம்.
87:9
87:9 فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ‏
فَذَكِّرْ ஆகவே, அறிவுரை கூறுவீராக اِنْ نَّفَعَتِ பலனளித்தால் الذِّكْرٰىؕ‏ அறிவுரை
87:9. ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:9. ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கின்ற வரை நீர் உபதேசித்துக் கொண்டே வருவீராக.
87:9. எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்!
87:9. ஆகவே, நல்லுபதேசம் (ஜனங்களுக்குப்) பயனளிக்குமாயின் நீர் (உபதேசித்து) நினைவுபடுத்துவீராக!
87:10
87:10 سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ‏
سَيَذَّكَّرُ அறிவுரை பெறுவார் مَنْ எவர் يَّخْشٰىۙ‏ பயப்படுகிறார்
87:10. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:10. நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவர், (இதைக் கொண்டு) நல்லறிவை அடைவார்.
87:10. எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.
87:10. (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றவர் (இதனைக்கொண்டு) உபதேசத்தைப் பெறுவார்.
87:11
87:11 وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ‏
وَيَتَجَنَّبُهَا இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான் الْاَشْقَىۙ‏ பெரும் துர்ப்பாக்கியவான்
87:11. ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:11. துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.
87:11. ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான்.
87:11. மிகுந்த துர்பாக்கியமுடையவனோ, அதிலிருந்து விலகிக் கொள்வான்.
87:12
87:12 الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏
الَّذِىْ எவன் يَصْلَى பற்றி எரிவான் النَّارَ நெருப்பில் الْكُبْرٰى‌ۚ‏ மாபெரும்
87:12. அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:12. (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.
87:12. அவன் பெரும் நெருப்பில் நுழைவான்;
87:12. அவன் எத்தகையவனென்றால் (நரகத்தின்) பெரும் நெருப்பில் அவன் நுழைவான்.
87:13
87:13 ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏
ثُمَّ பிறகு لَا يَمُوْتُ மரணிக்கவும் மாட்டான் فِيْهَا அதில் وَلَا يَحْيٰىؕ‏ இன்னும் வாழவும் மாட்டான்
87:13. பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.
87:13. பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்!
87:13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான், வாழவுமாட்டான்.
87:14
87:14 قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏
قَدْ திட்டமாக اَفْلَحَ வெற்றி பெற்றார் مَنْ எவர் تَزَكّٰىۙ‏ பரிசுத்தமடைந்தார்
87:14. தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:14. எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.
87:14. நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு
87:14. பரிசுத்தமடைந்தவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்.
87:15
87:15 وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏
وَذَكَرَ இன்னும் நினைவு கூர்ந்தார் اسْمَ பெயரை رَبِّهٖ தன் இறைவனின் فَصَلّٰى‌ ؕ‏ இன்னும் தொழுதார்
87:15. மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:15. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
87:15. மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர்.
87:15. மேலும், அவர் தன் இரட்சகனின் பெயரைக் கூறி பிறகு தொழுதார்.
87:16
87:16 بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ۖ‏
بَلْ மாறாக تُؤْثِرُوْنَ தேர்ந்தெடுக்கிறீர்கள் الْحَيٰوةَ வாழ்வை الدُّنْيَا ۖ‏ உலக(ம்)
87:16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:16. ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள்.
87:16. எனினும், நீங்களோ இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள்.
87:17
87:17 وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰىؕ‏
وَالْاٰخِرَةُ மறுமையோ خَيْرٌ மிகச் சிறந்தது وَّ اَبْقٰىؕ‏ இன்னும் என்றும் நிலையானது
87:17. ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:17. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
87:17. உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
87:17. மறுமையின் வாழ்க்கைதான் மிகச் சிறந்ததும், மிக்க நிலையானதுமாகும்.
87:18
87:18 اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَفِى الصُّحُفِ வேதங்களிலும் الْاُوْلٰىۙ‏ முந்திய
87:18. நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:18. நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,
87:18. நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது;
87:18. நிச்சயமாக இது முன்னுள்ள ஆகமங்களில் இருக்கிறது. (அதுவே)
87:19
87:19 صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى‏
صُحُفِ வேதங்களாகிய اِبْرٰهِيْمَ இப்றாஹீமுடைய وَمُوْسٰى‏ இன்னும் மூஸாவுடைய
87:19. இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
87:19. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கிறது.
87:19. இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!
87:19. இப்றாஹீம் மூஸாவுடைய ஆகமங்களிலும் இருக்கிறது.