92. ஸூரத்துல் லைல்(இரவு)
மக்கீ, வசனங்கள்: 21

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
92:1
92:1 وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَغْشٰىۙ‏ மூடும் போது
92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
92:1. (அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
92:1. இரவின் மீது சத்தியமாக, அது மூடி மறைத்துக் கொள்ளும்போது!
92:1. இரவின்மீது சத்தியமாக – அது (தன் இருளால்) மூடிக்கொள்ளும்போது-
92:2
92:2 وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக اِذَا تَجَلّٰىۙ‏ அது வெளிப்படும் போது
92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:2. பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
92:2. பகலின் மீது சத்தியமாக, அது ஒளிரும் போது!
92:2. பகலின் மீது சத்தியமாக – அது தன் பிரகாசத்துடன் வெளிப்படும்போது –
92:3
92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏
وَمَا خَلَقَ படைத்தவன் மீது சத்தியமாக الذَّكَرَ ஆணை وَالْاُنْثٰٓىۙ‏ இன்னும் பெண்ணை
92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:3. ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
92:3. மேலும், ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
92:3. ஆணையும், பெண்ணையும் படைத்தவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக –
92:4
92:4 اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏
اِنَّ நிச்சயமாக سَعْيَكُمْ உங்கள் முயற்சி لَشَتّٰىؕ‏ பலதரப்பட்டதுதான்
92:4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
92:4. உண்மையில் உங்களுடைய முயற்சிகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
92:4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலதரப்பட்டதாகும்.
92:5
92:5 فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اَعْطٰى தர்மம் புரிந்தார் وَاتَّقٰىۙ‏ இன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்
92:5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:5. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
92:5. எனவே, எவர் (இறைவழியில்) பொருளை வழங்கினாரோ மேலும் (இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து) விலகியிருந்தாரோ
92:5. ஆகவே, எவர் (தன் செல்வத்தை நன்மையானவற்றுக்கு) வழங்கி இன்னும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து –
92:6
92:6 وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏
وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினார் بِالْحُسْنٰىۙ‏ மிக அழகியதை
92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:6. (இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கிறாரோ,
92:6. மேலும், நன்மையை உண்மையென ஏற்றுக்கொண்டாரோ,
92:6. இன்னும், (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களை (நல்ல காரியங்களென) உண்மையாக்கி வைக்கின்றாரோ அவர்
92:7
92:7 فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏
فَسَنُيَسِّرُهٗ அவருக்கு இலகுவாக்குவோம் لِلْيُسْرٰىؕ‏ சொர்க்கப் பாதையை
92:7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:7. அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் எளிதாக்கித் தருவோம்.
92:7. அவருக்கு இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
92:7. அவருக்கு இலேசானதற்கு (சுவர்க்கத்தின் வழியை) நாம் எளிதாக்கி வைத்தோம்.
92:8
92:8 وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏
وَاَمَّا مَنْۢ بَخِلَ ஆக யார்?/கஞ்சத்தனம் செய்தான் وَاسْتَغْنٰىۙ‏ இன்னும் தேவையற்றவனாகக் கருதினான்
92:8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:8. எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
92:8. எவர் கஞ்சத்தனம் செய்கின்றாரோ மேலும் (தன் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்தாரோ;
92:8. ஆகவே, எவர் உலோபத்தனமும் செய்து (அல்லாஹ்விடமிருக்கும் நற்பேறுகளை விட்டும் தன்னை) தேவையற்றவரா(கக் கருது)கிறாரோ-
92:9
92:9 وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
وَكَذَّبَ இன்னும் பொய்ப்பித்தான் بِالْحُسْنٰىۙ‏ மிக அழகியதை
92:9. இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ,
92:9. இன்னும் நன்மையைப் பொய்யென நிராகரித்தாரோ
92:9. (இம்மார்க்கத்திலுள்ள) நல்லவற்றை பொய்ப்படுத்தியும் வைத்தாரோ அவர்,
92:10
92:10 فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏
فَسَنُيَسِّرُهٗ அவனுக்கு இலகுவாக்குவோம் لِلْعُسْرٰىؕ‏ நரகத்தின் பாதையை
92:10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:10. அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
92:10. அவருக்கு கடினமான வழியில் செல்வதற்கு நாம் வகை செய்வோம்.
92:10. அப்போது அவருக்கு கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) நாம் எளிதாக்கி வைப்போம்.
92:11
92:11 وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏
وَمَا يُغْنِىْ இன்னும் பலனளிக்காது عَنْهُ அவனுக்கு مَالُهٗۤ அவனுடைய செல்வம் اِذَا تَرَدّٰىؕ‏ அவன்விழும்போது
92:11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:11. அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (ஒரு) பயனுமளிக்காது.
92:11. அவனுடைய செல்வம் அவன் அழிந்து விடும்போது அவனுக்கு என்ன பயன் அளிக்கப்போகின்றது?
92:11. மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது.
92:12
92:12 اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏
اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது لَـلْهُدٰىۖ‏ நேர்வழி காட்டுவதுதான்
92:12. நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:12. நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பது நம்மீதுதான் கடமையாகும்.
92:12. திண்ணமாக, வழிகாட்டுவது எமது பொறுப்பேயாகும்.
92:12. நிச்சயமாக நேர்வழி காட்டுதல் நம்மீது (பொறுப்பாக) இருக்கிறது.
92:13
92:13 وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக لَـنَا நமக்கே لَـلْاٰخِرَةَ மறுமை وَالْاُوْلٰى‏ இன்னும் இம்மை
92:13. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:13. நிச்சயமாக இம்மையும், மறுமையும் நமக்கே சொந்தமானவை!
92:13. மேலும், உண்மையில் மறுமை மற்றும் இம்மை இரண்டும் நமக்கே உரியனவாகும்.
92:13. நிச்சயமாக பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நமக்கே உரியவையாகும்.
92:14
92:14 فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏
فَاَنْذَرْتُكُمْ ஆகவே, உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன் نَارًا நெருப்பை تَلَظّٰى‌ۚ‏ கொழுந்துவிட்டெரிகின்றது
92:14. ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:14. (மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
92:14. எனவே, கொழுந்துவிட்டெரியும் நெருப்பைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கை செய்துவிட்டேன்.
92:14. ஆகவே, (மனிதர்களே!) கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்து விட்டேன்.
92:15
92:15 لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏
لَا يَصْلٰٮهَاۤ அதில் பற்றி எரிய மாட்டான் اِلَّا தவிர الْاَشْقَىۙ‏ பெரும் தீயவன்
92:15. மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
92:15. மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
92:15. ஆனால், அதில் யாரும் எரிந்துபோக மாட்டார்கள், பெரும் துர்ப்பாக்கியவானைத் தவிர!
92:15. மிக்க துர்பாக்கியமுடையவரைத்தவிர (மற்றெவரும்) அதில் புகமாட்டார்.
92:16
92:16 الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
الَّذِىْ எவன் كَذَّبَ பொய்ப்பித்தான் وَتَوَلّٰىؕ‏ இன்னும் புறக்கணித்தான்
92:16. எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
92:16. அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
92:16. அவர்கள் பொய்யென மறுத்தார்கள், புறக்கணித்தார்கள்.
92:16. அவர் எத்தகையவரென்றால் (நம் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை பொய்யாக்கி) புறக்கணித்தும் விட்டனர்.
92:17
92:17 وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
وَسَيُجَنَّبُهَا இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார் الْاَتْقَىۙ‏ அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர்
92:17. ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
92:17. இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
92:17. மேலும், அதனைவிட்டுத் தொலைவில் வைக்கப்படுவார், மிகுந்த இறையச்சம் உடையவர்.
92:17. மேலும், மிகுந்த பயபக்தியுடையவர் அதிலிருந்து வெகுதூரத்தில் ஆக்கப்படுவார்.
92:18
92:18 الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏
الَّذِىْ எவர் يُؤْتِىْ கொடுக்கிறார் مَالَهٗ தனது செல்வத்தை يَتَزَكّٰى‌ۚ‏ மனத்தூய்மையை நாடியவராக
92:18. (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:18. அவர் (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன் பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
92:18. அவரோ தூய நிலை அடையும் பொருட்டு தம் செல்வத்தை வழங்குகின்றார்
92:18. அவர் எத்தகையவரென்றால், (பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டவராக தன்னுடைய செல்வத்தை தர்மமாகக் கொடுப்பார்.
92:19
92:19 وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
وَمَا இன்னும் இல்லை لِاَحَدٍ ஒருவரின் عِنْدَهٗ அவரிடம் مِنْ نِّعْمَةٍ உபகாரம் ஏதும் تُجْزٰٓىۙ‏ கூலிகொடுக்கப்படும்
92:19. மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
92:19. தான் பதில் நன்மை செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் தன் மீது இருக்காது.
92:19. கைமாறு செய்யும் அளவுக்கு எவருக்கும் அவர் நன்றிக்கடன் படவில்லை.
92:19. (மனிதர்களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை.
92:20
92:20 اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏
اِلَّا தவிர ابْتِغَآءَ தேடுவதை وَجْهِ முகத்தை رَبِّهِ தன் இறைவனின் الْاَعْلٰى‌ۚ‏ மிக உயர்ந்தவனான
92:20. மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
92:20. இருப்பினும், மிக்க மேலான தன் இறைவனின் திருமுகத்தை விரும்பியே தவிர (வேறு எதற்காகவும் தானம் செய்ய மாட்டார்).
92:20. ஆனாலும், அவர் உயர்வுமிக்க தம் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே இதைச் செய்கின்றார்.
92:20. மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடியே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை).
92:21
92:21 وَلَسَوْفَ يَرْضٰى‏
وَلَسَوْفَ திட்டமாக يَرْضٰى‏ திருப்தியடைவார்
92:21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
92:21. (இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
92:21. மேலும், (அவரைக் குறித்து) அவசியம் அவன் திருப்தியடைவான்.
92:21. மேலும், (தம் இரட்சகனின் நற்கூலியைக் கொண்டு வெகுவிரைவில்) அவரும் திருப்தியடைவார்.