98. ஸூரத்துல் பய்யினா(தெளிவான ஆதாரம்)
மதனீ, வசனங்கள்: 8
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
98:1 لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَاْتِيَهُمُ الْبَيِّنَةُ ۙ
لَمْ يَكُنِ இருக்கவில்லை الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களாகிய وَالْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர் مُنْفَكِّيْنَ விலகியவர்களாக حَتّٰى வரை تَاْتِيَهُمُ தங்களிடம் வருகின்ற الْبَيِّنَةُ ۙ தெளிவான அத்தாட்சி
98:1. நிராகரிப்போராகிய வேதக்காரர்களும், இணைவைப்பவர்களும் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
98:1. இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்.
98:1. வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிவிடக்கூடியவராய் இருக்கவில்லை, தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை!
98:1. வேதக்காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்துவிட்டார்களே அத்தகையோர், தெளிவான ஆதாரம் அவர்களுக்கு வரும்வரை (நிராகரிப்பதை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை.
98:2 رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ
رَسُوْلٌ தூதர் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து يَتْلُوْا ஓதுகின்றார் صُحُفًا ஏடுகளை مُّطَهَّرَةً ۙ பரிசுத்தமான
98:2. (அத்தெளிவான ஆதாரம் -) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், (அவர்களுக்கு) பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக்காண்பிக்கிறார் (என்பது).
98:2. (அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்.
98:2. தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வரும்வரை!
98:2. (அத்தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து (வந்து)ள்ள தூதர்; (ஆவார். அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட) பரிசுத்த ஆகமங்களை அவர் ஓதிக்காண்பிக்கிறார்.
98:3 فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ؕ
فِيْهَا அவற்றில் كُتُبٌ சட்டங்கள் قَيِّمَةٌ ؕ நேரான
98:3. அவற்றில் நிலையான சட்டத்திட்டங்கள் உள்ளன.
98:3. (அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
98:3. அவற்றில் முற்றிலும் நேர்மையான நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டிருக்கும்.
98:3. அவற்றில் தீர்க்கமான சட்டதிட்டங்கள் உள்ளன.
98:4 وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ ؕ
وَمَا تَفَرَّقَ பிரியவில்லை الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ தங்களிடம் வந்தது الْبَيِّنَةُ ؕ தெளிவான சான்று
98:4. எனினும், வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
98:4. (அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்.
98:4. முன்பு வேதம் அருளப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்து) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்!
98:4. இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோர் - தெளிவான ஆதாரம் (நபியும் அவர் மூலமாக வேதமும்) தங்களுக்கு வந்த பின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை.
98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ۙ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ
وَمَاۤ اُمِرُوْۤا அவர்கள் ஏவப்படவில்லை اِلَّا தவிர لِيَعْبُدُوا வணங்குவதற்கு اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَ ۙ வழிபாட்டை حُنَفَآءَ இணைவைப்பை விட்டு விலகியவர்களாக وَيُقِيْمُوا இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவது الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوا இன்னும் அவர்கள் கொடுப்பது الزَّكٰوةَ ஸகாத்தை وَذٰلِكَ இன்னும் இதுதான் دِيْنُ மார்க்கம் الْقَيِّمَةِ ؕ நேரான
98:5. அல்லாஹ்வை அவனுக்காக வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அவர்கள் வணங்க வேண்டும்; மேலும், தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும்; மேலும், ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை; இதுதான் நிலையான மார்க்கமாகும்.
98:5. (எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
98:5. மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதையும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சரியான, நேரிய தீன் ஆகும்.
98:5. இன்னும், அல்லாஹ்வை – அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிறைவேற்றுவதற்காகவும் ஜகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவுமே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை; இன்னும், இதுதான் நேரான மார்க்கமாகும்.
98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் مِنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களாகிய وَ الْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர் فِىْ نَارِ நெருப்பில் جَهَنَّمَ நரகம் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا ؕ அதில் اُولٰٓٮِٕكَ هُمْ இவர்கள்தான் شَرُّ மகா தீயோர் الْبَرِيَّةِ ؕ படைப்புகளில்
98:6. நிச்சயமாக நிராகரிப்போராகிய வேதக்காரர்களும் இணைவைப்பவர்களும் நரக நெருப்பில் இருப்பார்கள்; அதில் நிரந்தரமாக இருப்பார்கள்; இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
98:6. ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.
98:6. வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக, நரக நெருப்பில்தான் வீழ்வார்கள்; அதில் நிரந்தரமாய் வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கீழ்த்தரமானவர்கள்.
98:6. (இந்த நபியின் வரவை எதிர்பார்த்தவர்களில்) வேதத்தையுடையோர்களிலும், இணைவைத்துக் கொண்டிருப்போரிலும், நிச்சயமாக (இவரை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், நரக நெருப்பில்தான் இருப்பார்கள்; அதில் (அவர்கள்) நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்; அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்.
98:7 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِۙ நற்செயல்களை اُولٰٓٮِٕكَ هُمْ அவர்கள்தான் خَيْرُ மிகச் சிறந்தோர் الْبَرِيَّةِ ؕ படைப்புகளில்
98:7. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ, அவர்கள்தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
98:7. ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
98:7. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.
98:7. நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
98:8 جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ
جَزَآؤُهُمْ அவர்களுடைய கூலி عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் تَجْرِىْ ஓடுகின்றன مِنْ تَحْتِهَا அவற்றின் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَاۤ அவற்றில் اَبَدًا ؕ எப்போதும் رَضِىَ திருப்தி அடைவான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களைப் பற்றி وَرَضُوْا இன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள் عَنْهُ ؕ அவனைப் பற்றி ذٰلِكَ இது لِمَنْ خَشِىَ பயந்தவருக்கு رَبَّهٗ தன் இறைவனை
98:8. அவர்களுடைய (நற்)கூலி அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள நிலையான சுவர்க்கச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றித் திருப்தி அடைந்தான்; அவர்களும் அவனைப் பற்றித் திருப்தி அடைவார்கள்; அது, எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ அவருக்கு உரியதாகும்.
98:8. அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
98:8. அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்.
98:8. அவர்களுடைய (நற்)கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும்.