36:58 سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ
سَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் قَوْلًا கூறப்படும் مِّنْ رَّبٍّ இறைவன் புறத்தில் رَّحِيْمٍ மகா கருணையாளன்
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு. 38:32 فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ
فَقَالَ அவர் கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَحْبَبْتُ பிரியம் வைத்து விட்டேன் حُبَّ பிரியத்தை الْخَيْرِ செல்வத்தின் عَنْ ذِكْرِ தொழுவதை விட்டு رَبِّىْۚ என் இறைவனை حَتّٰى இறுதியாக تَوَارَتْ மறைந்து விட்டது بِالْحِجَابِ திரையில்
38:32. “நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார். 41:2 تَنْزِيْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِيْمِۚ
تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதமாகும் مِّنَ الرَّحْمٰنِ பேரன்பாளனிடமிருந்து الرَّحِيْمِۚ பேரருளாளன்
41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது; 42:19 اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُۚ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
اَللّٰهُ அல்லாஹ்தான் لَطِيْفٌۢ மிக கருணையும் தயவும் உடையவன் بِعِبَادِهٖ தன் அடியார்கள் மீது يَرْزُقُ உணவளிக்கின்றான் مَنْ يَّشَآءُۚ தான் நாடுகின்றவர்களுக்கு وَهُوَ அவன்தான் الْقَوِىُّ மிக வலிமை உள்ளவன் الْعَزِيْزُ மிகைத்தவன்
42:19. அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். 42:23 ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰىؕ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
ذٰ لِكَ இது الَّذِىْ எது يُبَشِّرُ நற்செய்தி கூறுகின்றான் اللّٰهُ அல்லாஹ் عِبَادَهُ தன் அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை قُلْ கூறுவீராக! لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ நான் உங்களிடத்தில் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக اَجْرًا எந்த கூலியையும் اِلَّا الْمَوَدَّةَ அன்பைத் தவிர فِى الْقُرْبٰىؕ உறவினால் உள்ள وَمَنْ يَّقْتَرِفْ யார் செய்வாரோ حَسَنَةً அழகிய அமலை نَّزِدْ அதிகப்படுத்துவோம் لَهٗ அவருக்கு فِيْهَا அதில் حُسْنًا ؕ அழகை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرٌ நன்றியறிபவன்
42:23. ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். 57:9 هُوَ الَّذِىْ يُنَزِّلُ عَلٰى عَبْدِهٖۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لِّيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் يُنَزِّلُ இறக்குகின்றான் عَلٰى عَبْدِهٖۤ தனது அடியார் மீது اٰيٰتٍۭ அத்தாட்சிகளை بَيِّنٰتٍ தெளிவான(வை) لِّيُخْرِجَكُمْ உங்களை வெளியேற்றுவதற்காக مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِؕ வெளிச்சத்தின் பக்கம் وَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِكُمْ உங்கள் மீது لَرَءُوْفٌ மிக இரக்கமுடையவனும் رَّحِيْمٌ கருணையாளனும்
57:9. அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன். 59:22 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ கடவுள் اِلَّا هُوَ ۚ அவனைத் தவிர عٰلِمُ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவானவற்றை(யும்) وَالشَّهَادَةِ ۚ هُوَ வெளிப்படையானவற்றையும்/அவன்தான் الرَّحْمٰنُ பேரருளாளன் الرَّحِيْمُ பேரன்பாளன்
59:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். 85:14 وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ
وَهُوَ இன்னும் அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الْوَدُوْدُۙ மகா நேசன்
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். Showing results 21 to 28 of 28