தேடல்


2:31
2:31 وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلٰٓٮِٕكَةِ فَقَالَ اَنْۢبِـــٴُـوْنِىْ بِاَسْمَآءِ هٰٓؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَعَلَّمَ இன்னும் கற்பித்தான் اٰدَمَ ஆதமுக்கு الْاَسْمَآءَ பெயர்களை كُلَّهَا எல்லாவற்றையும்/ அவை ثُمَّ பிறகு عَرَضَهُمْ வைத்தான்/அவற்றை عَلَى முன் الْمَلٰٓٮِٕكَةِ வானவர்கள் فَقَالَ இன்னும் கூறினான் اَنْۢبِـُٔوْنِیْ அறிவியுங்கள்/எனக்கு بِاَسْمَآءِ பெயர்களை هٰٓؤُلَآءِ இவற்றின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
2:33
2:33 قَالَ يٰٓـاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ فَلَمَّآ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآٮِٕهِمْۙ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ اِنِّىْٓ اَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۙ وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏
قَالَ கூறினான் يٰٓـاٰدَمُ ஆதமே اَنْۢبِئْهُمْ அவர்களுக்கு அறிவிப்பீராக بِاَسْمَآٮِٕهِمْ‌ۚ அவற்றின் பெயர்களை فَلَمَّآ போது اَنْۢبَاَهُمْ அவர்களுக்கு அறிவித்தார் بِاَسْمَآٮِٕهِمْۙ பெயர்களை/அவற்றின் قَالَ கூறினான் اَلَمْ اَقُلْ நான் கூறவில்லையா? لَّـكُمْ உங்களுக்கு اِنِّىْٓ நிச்சயமாக நான் اَعْلَمُ அறிவேன் غَيْبَ மறைவானவற்றை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِۙ இன்னும் பூமி وَاَعْلَمُ இன்னும் அறிவேன் مَا எதை تُبْدُوْنَ வெளிப்படுத்துகிறீர்கள் وَمَا இன்னும் எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَكْتُمُوْنَ‏ மறைக்கிறீர்கள்
2:33. ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
2:34
2:34 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى وَاسْتَكْبَرَ  وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
وَاِذْ சமயம் قُلْنَا கூறினோம் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْٓا ஆகவே சிரம் பணிந்தார்கள் اِلَّاۤ தவிர اِبْلِيْسَؕ இப்லீஸ் اَبٰى மறுத்தான் وَاسْتَكْبَرَ  இன்னும் பெருமையடித்தான் وَكَانَ இன்னும் ஆகிவிட்டான் مِنَ الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களில்
2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
2:35
2:35 وَقُلْنَا يٰٓـاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏
وَقُلْنَا இன்னும் கூறினோம் یٰۤاٰدَمُ ஆதமே اسْكُنْ வசிப்பீராக اَنْتَ நீர் وَزَوْجُكَ இன்னும் உம் மனைவி الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَكُلَا இன்னும் இருவரும் சாப்பிடுங்கள் مِنْهَا அதிலிருந்து رَغَدًا தாராளமாக حَيْثُ விதத்தில் شِئْتُمَا இருவரும் நாடினீர்கள் وَلَا تَقْرَبَا இன்னும் இருவரும் நெருங்காதீர்கள் هٰذِهِ இந்த الشَّجَرَةَ மரத்தை فَتَكُوْنَا இருவரும் ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
2:35. மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
2:37
2:37 فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
فَتَلَقّٰٓى பெற்றார் اٰدَمُ ஆதம் مِنْ இருந்து رَّبِّهٖ தம் இறைவன் كَلِمٰتٍ (சில) வாக்கியங்களை فَتَابَ ஆகவே மன்னித்தான் عَلَيْهِ‌ؕ அவரை اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
3:33
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰۤى தேர்ந்தெடுத்தான் اٰدَمَ ஆதமை وَنُوْحًا இன்னும் நூஹை وَّاٰلَ இன்னும் குடும்பத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் وَاٰلَ عِمْرٰنَ இன்னும் இம்ரானின் குடும்பத்தை عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:59
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّ நிச்சயமாக مَثَلَ உதாரணம் عِيْسٰى ஈஸாவின் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று اٰدَمَ‌ؕ ஆதம் خَلَقَهٗ அவரைப் படைத்தான் مِنْ இருந்து تُرَابٍ மண் ثُمَّ பிறகு قَالَ கூறினான் لَهٗ அவருக்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ ஆகிவிட்டார்
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
5:27
5:27 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ‏
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்கள் முன் نَبَاَ செய்தியை ابْنَىْ இரு மகன்களின் اٰدَمَ ஆதமுடைய بِالْحَـقِّ‌ۘ உண்மையில் اِذْ போது قَرَّبَا குர்பானி கொடுத்தனர் قُرْبَانًا ஒரு குர்பானியை فَتُقُبِّلَ ஏற்றுக் கொள்ளப்பட்டது مِنْ இருந்து اَحَدِهِمَا அவ்விருவரில் ஒருவர் وَلَمْ يُتَقَبَّلْ ஏற்கப்படவில்லை مِنَ இருந்து الْاٰخَرِؕ மற்றவர் قَالَ என்றார் لَاَقْتُلَـنَّكَ‌ؕ நிச்சயமாக உன்னைக்கொல்வேன் قَالَ கூறினார் اِنَّمَا يَتَقَبَّلُ ஏற்பதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் مِنَ الْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
7:11
7:11 وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ‌ ۖ  فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் ثُمَّ பிறகு صَوَّرْنٰكُمْ வடிவமைத்தோம்/உங்களை ثُمَّ பிறகு قُلْنَا கூறினோம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ‌ ۖ  ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர لَمْ يَكُنْ அவன் ஆகவில்லை مِّنَ السّٰجِدِيْنَ‏ சிரம் பணிந்தவர்களில்
7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:12
7:12 ‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
قَالَ கூறினான் مَا எது? مَنَعَكَ உம்மை தடுத்தது اَلَّا تَسْجُدَ நீ சிரம் பணியாதிருக்க اِذْ போது اَمَرْتُكَ‌ ؕ உனக்கு கட்டளையிட்டேன் قَالَ கூறினான் اَنَا நான் خَيْرٌ மேலானவன் مِّنْهُ‌ ۚ அவரைவிட خَلَقْتَنِىْ என்னை படைத்தாய் مِنْ نَّارٍ நெருப்பால் وَّخَلَقْتَهٗ இன்னும் படைத்தாய்/அவரை مِنْ طِيْنٍ‏ களிமண்ணால்
7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.