7:16 قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ
قَالَ கூறினான் فَبِمَاۤ காரணமாக اَغْوَيْتَنِىْ நீ வழிகெடுத்தாய்/என்னை لَاَقْعُدَنَّ நிச்சயமாக உட்காருவேன் لَهُمْ அவர்களுக்காக صِرَاطَكَ உன் பாதையில் الْمُسْتَقِيْمَۙ நேரானது
7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். 7:19 وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ
وَيٰۤاٰدَمُ ஆதமே اسْكُنْ வசித்திரு اَنْتَ நீ وَزَوْجُكَ இன்னும் உம் மனைவி الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَـكُلَا (இருவரும்)புசியுங்கள் مِنْ حَيْثُ இடத்தில் شِئْتُمَا (இருவரும்)நாடினீர்கள் وَلَا تَقْرَبَا (இருவரும்) நெருங்காதீர்கள் هٰذِهِ الشَّجَرَةَ இந்த மரத்தை فَتَكُوْنَا (இருவரும்) ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்
7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்). 7:26 يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் قَدْ திட்டமாக اَنْزَلْنَا இறக்கினோம் (படைத்தோம்) عَلَيْكُمْ உங்கள் மீது (உங்களுக்கு) لِبَاسًا ஆடையை يُّوَارِىْ மறைக்கின்ற(து) سَوْاٰتِكُمْ உங்கள் வெட்கத்தலங்களை وَرِيْشًا ؕ இன்னும் அலங்காரத்தை وَلِبَاسُ ஆடை التَّقْوٰى ۙ இறையச்சத்தின் ذٰ لِكَ அதுதான் خَيْرٌ ؕ மிகச் சிறந்தது ذٰ لِكَ இவை مِنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. 7:27 يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் لَا வேண்டாம் يَفْتِنَـنَّكُمُ உங்களை ஏமாற்றிவிட الشَّيْطٰنُ ஷைத்தான் كَمَاۤ போன்று اَخْرَجَ வெளியேற்றினான் اَبَوَيْكُمْ உங்கள் தாய் தந்தையை مِّنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து يَنْزِعُ கழட்டுகிறான் عَنْهُمَا அவ்விருவரை விட்டு لِبَاسَهُمَا அவ்விருவரின் ஆடையை لِيُرِيَهُمَا அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு سَوْءاٰتِهِمَا ؕ அவ்விருவருடைய வெட்கத்தலங்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் يَرٰٮكُمْ பார்க்கிறான்/உங்களை هُوَ அவன் وَقَبِيْلُهٗ இன்னும் அவனுடைய இனத்தார் مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஆக்கினோம் الشَّيٰطِيْنَ ஷைத்தான்களை اَوْلِيَآءَ நண்பர்களாக لِلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே خُذُوْا زِيْنَتَكُمْ அலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களை عِنْدَ இடம் كُلِّ எல்லாம் مَسْجِدٍ மஸ்ஜிது وَّكُلُوْا இன்னும் புசியுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் وَلَا تُسْرِفُوْا ۚ விரயம் செய்யாதீர்கள் اِنَّهٗ நிச்சயம் அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْرِفِيْنَ விரயம் செய்பவர்களை
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 7:35 يٰبَنِىْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே اِمَّا يَاْتِيَنَّكُمْ நிச்சயமாக வந்தால் / உங்களிடம் رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَقُصُّوْنَ விவரித்தவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْۙ என் வசனங்களை فَمَنِ எவர்(கள்) اتَّقٰى அஞ்சினார்(கள்) وَاَصْلَحَ இன்னும் சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். 7:172 وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰى ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ
وَ اِذْ சமயம் اَخَذَ எடுத்தான் رَبُّكَ உம் இறைவன் مِنْۢ بَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளில் مِنْ ظُهُوْرِهِمْ இருந்து/முதுகுகள்/அவர்களுடைய ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை وَ اَشْهَدَهُمْ இன்னும் சாட்சியாக்கினான் / அவர்களை عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ ۚ அவர்கள் اَلَسْتُ நான் இல்லையா? بِرَبِّكُمْ ؕ உங்கள் இறைவனாக قَالُوْا கூறினர் بَلٰى ۛۚ ஏன் இல்லை شَهِدْنَا ۛۚ நாங்கள் சாட்சி கூறினோம் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாமல் இருப்பதற்காக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் عَنْ هٰذَا இதை விட்டு غٰفِلِيْنَ ۙ கவனமற்றவர்களாக
7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். 17:61 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًا ۚ
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ தவிர اِبْلِيْسَ இப்லீஸ் قَالَ கூறினான் ءَاَسْجُدُ நான் சிரம் பணிவதா? لِمَنْ எவருக்கு خَلَقْتَ நீ படைத்தாய் طِيْنًا ۚ மண்ணிலிருந்து
17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான். 17:70 وَلَـقَدْ كَرَّمْنَا بَنِىْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا
وَلَـقَدْ திட்டவட்டமாக كَرَّمْنَا நாம் கண்ணியப்படுத்தினோம் بَنِىْۤ சந்ததிகளை اٰدَمَ ஆதமுடைய وَحَمَلْنٰهُمْ இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை فِى الْبَرِّ கரையில் وَالْبَحْرِ இன்னும் கடலில் وَرَزَقْنٰهُمْ இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு مِّنَ இருந்து الطَّيِّبٰتِ நல்லவை وَفَضَّلْنٰهُمْ இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை عَلٰى விட كَثِيْرٍ அதிகமானது مِّمَّنْ எவற்றிலிருந்து خَلَقْنَا நாம் படைத்தோம் تَفْضِيْلًا மேன்மையாக
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். 18:50 وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖؕ اَفَتَـتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗۤ اَوْلِيَآءَ مِنْ دُوْنِىْ وَهُمْ لَـكُمْ عَدُوٌّ ؕ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا
وَاِذْ قُلْنَا நாம் கூறிய சமயம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا ஆகவே சிரம் பணிந்தனர் اِلَّاۤ தவிர اِبْلِيْسَؕ இப்லீஸ் كَانَ இருந்தான் مِنَ الْجِنِّ ஜின்களில் ஒருவனாக فَفَسَقَ மீறினான் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهٖؕ தன் இறைவனின் اَفَتَـتَّخِذُوْنَهٗ எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை وَذُرِّيَّتَهٗۤ இன்னும் அவனது சந்ததியை اَوْلِيَآءَ நண்பர்களாக مِنْ دُوْنِىْ என்னையன்றி وَهُمْ அவர்களோ لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ ؕ எதிரிகள் بِئْسَ மிக கெட்டவன் لِلظّٰلِمِيْنَ தீயவர்களுக்கு بَدَلًا மாற்றம்
18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும். Showing results 11 to 20 of 27