19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنَ النَّبِيّٖنَ நபிமார்களில் مِنْ ذُرِّيَّةِ சந்ததிகளில் اٰدَمَ ஆதமுடைய وَمِمَّنْ حَمَلْنَا இன்னும் நாம் ஏற்றியவர்களிலும் مَعَ نُوْحٍ நூஹூடன் وَّمِنْ ذُرِّيَّةِ சந்ததிகளிலும் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْرَآءِيْلَ இன்னும் இஸ்ராயீல் وَمِمَّنْ هَدَيْنَا நாம் நேர்வழிகாட்டி وَاجْتَبَيْنَا ؕ தேர்ந்தெடுத்தவர்கள் اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُ வசனங்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய خَرُّوْا விழுந்து விடுவார்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக وَّبُكِيًّا ۩ அழுதவர்களாக
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள். 20:115 وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا
وَلَـقَدْ عَهِدْنَاۤ திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம் اِلٰٓى اٰدَمَ ஆதமுக்கு مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَنَسِىَ மறந்து விட்டார் وَلَمْ نَجِدْ நாம் காணவில்லை لَهٗ அவரிடம் عَزْمًا உறுதியை
20:115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை. 20:116 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى
وَاِذْ சமயத்தை قُلْنَا நாம் கூறிய لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا நீங்கள் சிரம் தாழ்த்துங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا அவர்கள் சிரம் தாழ்த்தினர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰى மறுத்து விட்டான்
20:116. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான். 20:117 فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى
فَقُلْنَا ஆகவே நாம் கூறினோம் يٰۤاٰدَمُ ஆதமே اِنَّ நிச்சயமாக هٰذَا இவன் عَدُوٌّ எதிரி لَّكَ உமக்கு وَلِزَوْجِكَ இன்னும் உமது மனைவிக்கு فَلَا يُخْرِجَنَّكُمَا ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம் مِنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து فَتَشْقٰى நீர்சிரமப்பட்டுவிடுவீர்
20:117. அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். 20:120 فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான் اِلَيْهِ அவருக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் قَالَ கூறினான் يٰۤاٰدَمُ ஆதமே هَلْ اَدُلُّكَ நான் உமக்கு அறிவிக்கவா? عَلٰى شَجَرَةِ மரத்தையும் الْخُلْدِ நிரந்தரத்தின் وَمُلْكٍ ஆட்சியையும் لَّا يَبْلٰى அழியாத
20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான். 20:121 فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰىۖ
فَاَكَلَا ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர் مِنْهَا அதிலிருந்து فَبَدَتْ ஆகவே தெரியவந்தன لَهُمَا அவ்விருவருக்கும் سَوْاٰ تُہُمَا அவ்விருவரின் மறைவிடங்கள் وَطَفِقَا இன்னும் முற்பட்டனர் يَخْصِفٰنِ அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு عَلَيْهِمَا தங்கள் இருவர் மீது مِنْ وَّرَقِ இலைகளை الْجَـنَّةِ சொர்க்கத்தின் وَعَصٰۤى இன்னும் மாறுசெய்தார் اٰدَمُ ஆதம் رَبَّهٗ தன் இறைவனுக்கு فَغَوٰىۖ ஆகவே வழி தவறி விட்டார்
20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். 36:60 اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ
اَلَمْ اَعْهَدْ நான் கட்டளையிடவில்லையா? اِلَيْكُمْ உங்களுக்கு يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் மக்களே! اَنْ لَّا تَعْبُدُوا நீங்கள் வணங்காதீர்கள் என்று الشَّيْطٰنَۚ ஷைத்தானை اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரியாவான் مُّبِيْنٌ ۙ தெளிவான
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? Showing results 21 to 27 of 27