2:124 وَاِذِ ابْتَلٰٓى اِبْرٰهٖمَ رَبُّهٗ بِكَلِمٰتٍ فَاَتَمَّهُنَّ ؕ قَالَ اِنِّىْ جَاعِلُكَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنْ ذُرِّيَّتِىْ ؕ قَالَ لَا يَنَالُ عَهْدِى الظّٰلِمِيْنَ
وَاِذِ இன்னும் சமயம் ابْتَلٰٓى சோதித்தான் اِبْرٰهٖمَ இப்ராஹீமை رَبُّهٗ அவருடைய இறைவன் بِكَلِمٰتٍ கட்டளைகளைக் கொண்டு فَاَتَمَّهُنَّ ؕ ஆகவே நிறைவு செய்தார்/அவற்றை قَالَ கூறினான் اِنِّىْ நிச்சயமாக நான் جَاعِلُكَ ஆக்குகிறேன்/ உன்னை لِلنَّاسِ மனிதர்களுக்கு اِمَامًا ؕ தலைவராக قَالَ கூறினார் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِىْ ؕ என் சந்ததிகள் قَالَ கூறினான் لَا يَنَالُ அடையாது عَهْدِى என் வாக்குறுதி الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை
2:124. (இன்னும், இதையும் எண்ணிப் பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகள் கொண்டு சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; "நிச்சயமாக நான் உம்மை மக்களுக்குத் தலைவராக ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம், "என் சந்ததியினரிலும் (தலைவர்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்; "என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது" என்று கூறினான். 2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ
وَاِذْ இன்னும் சமயம் جَعَلْنَا ஆக்கினோம் الْبَيْتَ (வீடு) கஅபாவை مَثَابَةً ஒரு திரும்புமிடமாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَاَمْنًا ؕ இன்னும் பாதுகாப்பாக وَاتَّخِذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் مِنْ مَّقَامِ நின்ற இடத்தில் اِبْرٰهٖمَ இப்ராஹீம் مُصَلًّى ؕ தொழுமிடத்தை وَعَهِدْنَآ இன்னும் கட்டளையிட்டோம் اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் اَنْ طَهِّرَا நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள் بَيْتِىَ என் வீட்டை لِلطَّآٮِٕفِيْنَ தவாஃப் சுற்றுபவர்களுக்கு وَالْعٰكِفِيْنَ இன்னும் தங்குபவர்கள் وَالرُّکَّعِ இன்னும் குனிபவர்கள் السُّجُوْدِ சிரம் பணிபவர்கள்
2:125. (இதையும் எண்ணிப்பாருங்கள்: "கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்: இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்); இன்னும், "என் ஆலயத்தை சுற்றிவருபவர்கள், தங்கி இருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். 2:126 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ قَالَ وَمَنْ كَفَرَ فَاُمَتِّعُهٗ قَلِيْلًا ثُمَّ اَضْطَرُّهٗۤ اِلٰى عَذَابِ النَّارِؕ وَبِئْسَ الْمَصِيْرُ
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு هٰذَا இதை بَلَدًا ஒரு பட்டணமாக اٰمِنًا பாதுகாப்பளிக்கக் கூடியது وَّارْزُقْ இன்னும் உணவளி اَهْلَهٗ அதனுடையவர்களில் مِنَ இருந்து الثَّمَرٰتِ கனிகளில் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَالْيَوْمِ الْاٰخِرِؕ இன்னும் இறுதி நாளை قَالَ கூறினான் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரிப்பார் فَاُمَتِّعُهٗ சுகம்அனுபவிக்கவைப்பேன்/அவரை قَلِيْلًا கொஞ்சம் ثُمَّ பிறகு اَضْطَرُّهٗۤ அவரை நிர்ப்பந்திப்பேன் اِلٰى عَذَابِ வேதனையின் பக்கம் النَّارِؕ நரகம் وَبِئْسَ அது கெட்டது الْمَصِيْرُ செல்லுமிடத்தால்
2:126. (இன்னும் நினைவுகூருங்கள்:) இப்ராஹீம்: "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குக் கனிவர்க்கங்களைக் கொண்டு உணவளிப்பாயாக!" என்று கூறினார்; அதற்கு (இறைவன்) கூறினான்: "(ஆம்!) யார் நிராகரித்தானோ அவனுக்கும் சிறிதுகாலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன்; பின்னர், அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்ப்பந்திப்பேன் - அவன் சேருமிடம் மிகவும் கெட்டதே." 2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ
وَاِذْ இன்னும் சமயம் يَرْفَعُ உயர்த்தினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் الْقَوَاعِدَ அஸ்திவாரங்கள் مِنَ الْبَيْتِ வீட்டின் وَاِسْمٰعِيْلُؕ இன்னும் இஸ்மாயீல் رَبَّنَا எங்கள் இறைவா تَقَبَّلْ ஏற்றுக் கொள் مِنَّا ؕ எங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ மிக அறிந்தவன்
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வாலயத்தின் அடித்தளத்தை உயர்த்தியபோது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்றும்). 2:130 وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ وَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ
وَمَنْ இன்னும் யார் يَّرْغَبُ வெறுப்பார் عَنْ விட்டு مِّلَّةِ மார்க்கத்தை اِبْرٰهٖمَ இப்ராஹீமுடைய اِلَّا தவிர مَنْ எவன் سَفِهَ மடையனாக ஆனான் نَفْسَهٗ ؕ அவனே وَلَقَدِ திட்டவட்டமாக اصْطَفَيْنٰهُ தேர்ந்தெடுத்தோம்/அவரை فِى الدُّنْيَا ۚ இவ்வுலகில் وَاِنَّهٗ நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَ நல்லோரில்தான்
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? - தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். 2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ
وَوَصّٰى இன்னும் உபதேசித்தார் بِهَآ அதை اِبْرٰهٖمُ இப்ராஹீம் بَنِيْهِ பிள்ளைகளுக்கு/தன் وَ يَعْقُوْبُؕ இன்னும் யஃகூப் يٰبَنِىَّ என் பிள்ளைகளே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اصْطَفٰى தேர்ந்தெடுத்தான் لَكُمُ உங்களுக்கு الدِّيْنَ மார்க்கத்தை فَلَا تَمُوْتُنَّ எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள் اِلَّا தவிர وَاَنْـتُمْ நீங்கள் இருக்கவே مُّسْلِمُوْنَؕ முஸ்லிம்களாக
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு உபதேசம் செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான்; நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்." 2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
اَمْ அல்லது كُنْتُمْ இருந்தீர்கள் شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ போது حَضَرَ வந்தது يَعْقُوْبَ யஃகூபுக்கு الْمَوْتُۙ மரணம் اِذْ போது قَالَ கூறினார் لِبَنِيْهِ பிள்ளைகளை நோக்கி/தன் مَا யாரை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕ எனக்குப் பின்னர் قَالُوْا கூறினார்கள் نَعْبُدُ வணங்குவோம் اِلٰهَكَ கடவுளை/உம் وَاِلٰهَ இன்னும் கடவுளை اٰبَآٮِٕكَ மூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் اِلٰهًا ஒரு கடவுளை وَّاحِدًا ۖۚ ஒரே وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ முஸ்லிம்கள்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அப்போது அவர் தம் குமாரர்களிடம், "எனக்குப்பின் நீங்கள் எதனை வணங்குவீர்கள்?" என்று கேட்டதற்கு, "உங்கள் இறைவனை - உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனான ஒரே இறைவனையே வணங்குவோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்களாக இருப்போம்" என்று கூறினர். 2:135 وَقَالُوْا کُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى تَهْتَدُوْا ؕ قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் کُوْنُوْا ஆகிவிடுங்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى கிறித்துவர்களாக تَهْتَدُوْا ؕ நேர்வழி பெறுவீர்கள் قُلْ கூறுவீராக بَلْ மாறாக مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهٖمَ இப்ராஹீமின் حَنِيْفًا ؕ இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَ இன்னும் அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில்
2:135. "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; "அப்படியல்ல! நேரான வழியைச் சார்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்); அவர் இணை வைப்பவர்களில் இருந்தவரல்லர்" என்று (நபியே) நீர் கூறுவீராக! 2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், நாங்கள் அவனுக்கே வழிப்படுகிறோம்" என்று (நம்பிக்கை கொண்டோரே!) நீங்களும் கூறுங்கள். 2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰىؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் اِنَّ நிச்சயமாக اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَ இன்னும் சந்ததிகள் كَانُوْا இருந்தார்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰىؕ கிறித்துவர்களாக قُلْ கூறுவீராக ءَاَنْتُمْ நீங்களா? اَعْلَمُ மிக அறிந்தவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ ؕ அல்லாஹ்வா? وَمَنْ இன்னும் யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரர் مِمَّنْ எவரைவிட كَتَمَ மறைத்தார் شَهَادَةً சாட்சியத்தை عِنْدَهٗ தன்னிடத்தில் مِنَ اللّٰهِؕ அல்லாஹ்வின் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا பற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
2:140. "நிச்சயமாக இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் (அவர்களுடைய) சந்ததியினர் யாவரும் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: "நீங்கள் நன்கு அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை." Showing results 1 to 10 of 75