தேடல்


2:125
2:125 وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَاَمْنًا ؕ وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏
وَاِذْ இன்னும் சமயம் جَعَلْنَا ஆக்கினோம் الْبَيْتَ (வீடு) கஅபாவை مَثَابَةً ஒரு திரும்புமிடமாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَاَمْنًا ؕ இன்னும் பாதுகாப்பாக وَاتَّخِذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள் مِنْ مَّقَامِ நின்ற இடத்தில் اِبْرٰهٖمَ இப்ராஹீம் مُصَلًّى‌ ؕ தொழுமிடத்தை وَعَهِدْنَآ இன்னும் கட்டளையிட்டோம் اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் اَنْ طَهِّرَا நீங்கள் இருவரும் சுத்தப்படுத்துங்கள் بَيْتِىَ என் வீட்டை لِلطَّآٮِٕفِيْنَ தவாஃப் சுற்றுபவர்களுக்கு وَالْعٰكِفِيْنَ இன்னும் தங்குபவர்கள் وَالرُّکَّعِ இன்னும் குனிபவர்கள் السُّجُوْدِ‏ சிரம் பணிபவர்கள்
2:125. (இதையும் எண்ணிப்பாருங்கள்: "கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இடமாகவும், இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்: இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்); இன்னும், "என் ஆலயத்தை சுற்றிவருபவர்கள், தங்கி இருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும்" என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.
2:127
2:127 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِذْ இன்னும் சமயம் يَرْفَعُ உயர்த்தினார் اِبْرٰهٖمُ இப்ராஹீம் الْقَوَاعِدَ அஸ்திவாரங்கள் مِنَ الْبَيْتِ வீட்டின் وَاِسْمٰعِيْلُؕ இன்னும் இஸ்மாயீல் رَبَّنَا எங்கள் இறைவா تَقَبَّلْ ஏற்றுக் கொள் مِنَّا ؕ எங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ மிக அறிந்தவன்
2:127. இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வாலயத்தின் அடித்தளத்தை உயர்த்தியபோது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்றும்).
2:133
2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
اَمْ அல்லது كُنْتُمْ இருந்தீர்கள் شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ போது حَضَرَ வந்தது يَعْقُوْبَ யஃகூபுக்கு الْمَوْتُۙ மரணம் اِذْ போது قَالَ கூறினார் لِبَنِيْهِ பிள்ளைகளை நோக்கி/தன் مَا யாரை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕ எனக்குப் பின்னர் قَالُوْا கூறினார்கள் نَعْبُدُ வணங்குவோம் اِلٰهَكَ கடவுளை/உம் وَاِلٰهَ இன்னும் கடவுளை اٰبَآٮِٕكَ மூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் اِلٰهًا ஒரு கடவுளை وَّاحِدًا ۖۚ ஒரே وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ‏ முஸ்லிம்கள்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அப்போது அவர் தம் குமாரர்களிடம், "எனக்குப்பின் நீங்கள் எதனை வணங்குவீர்கள்?" என்று கேட்டதற்கு, "உங்கள் இறைவனை - உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனான ஒரே இறைவனையே வணங்குவோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்களாக இருப்போம்" என்று கூறினர்.
2:140
2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰى‌ؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ‌ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் اِنَّ நிச்சயமாக اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَ இன்னும் சந்ததிகள் كَانُوْا இருந்தார்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰى‌ؕ கிறித்துவர்களாக قُلْ கூறுவீராக ءَاَنْتُمْ நீங்களா? اَعْلَمُ மிக அறிந்தவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ‌ ؕ அல்லாஹ்வா? وَمَنْ இன்னும் யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரர் مِمَّنْ எவரைவிட كَتَمَ மறைத்தார் شَهَادَةً சாட்சியத்தை عِنْدَهٗ தன்னிடத்தில் مِنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا பற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
2:140. "நிச்சயமாக இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் (அவர்களுடைய) சந்ததியினர் யாவரும் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: "நீங்கள் நன்கு அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவைப்பற்றிப் பராமுகமானவனாக இல்லை."
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவர்களின்) சந்ததியர் ஆகியோர் மீது அருளப்பட்டதையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம்; அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. இன்னும், இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் (நேர்வழியில் செலுத்தி, இவர்களில்) ஒவ்வொருவரையும் அகிலத்தாரை விட நாம் மேன்மையாக்கி வைத்தோம்.
14:39
14:39 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எத்தகையவன் وَهَبَ வழங்கினான் لِىْ எனக்கு عَلَى الْـكِبَرِ வயோதிகத்தில் اِسْمٰعِيْلَ இஸ்மாயீலை وَاِسْحٰقَ‌ؕ இன்னும் இஸ்ஹாக்கை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَسَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனையை
14:39. "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்."
19:54
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا‌ ۚ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் اِسْمٰعِيْلَ‌ இஸ்மாயீலை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صَادِقَ உண்மையாளராக الْوَعْدِ வாக்கில் وَكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا‌ ۚ‏ நபியாக
19:54. (நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
21:85
21:85 وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக وَاِدْرِيْسَ இத்ரீஸையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏ பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
21:85. இன்னும், இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் உள்ளவர்களே!
37:101
37:101 فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏
فَبَشَّرْنٰهُ ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம் بِغُلٰمٍ ஒரு குழந்தையைக்கொண்டு حَلِيْمٍ‏ மிக சகிப்பாளரான
37:101. எனவே, நாம் அவருக்குச் சகிப்புத்தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.