16:62 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ مَا يَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَـتُهُمُ الْـكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰىؕ لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَ اَنَّهُمْ مُّفْرَطُوْنَ
وَيَجْعَلُوْنَ இன்னும் ஆக்குகின்றனர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا எதை يَكْرَهُوْنَ வெறுக்கின்றனர் وَتَصِفُ இன்னும் வர்ணிக்கின்றன اَلْسِنَـتُهُمُ நாவுகள்/அவர்களின் الْـكَذِبَ பொய்யை اَنَّ நிச்சயமாக لَهُمُ தங்களுக்கு الْحُسْنٰىؕ சொர்க்கம், மிக அழகியது لَا جَرَمَ கண்டிப்பாக اَنَّ நிச்சயம் لَهُمُ இவர்களுக்கு النَّارَ நரகம்தான் وَ اَنَّهُمْ இன்னும் நிச்சயம் இவர்கள் مُّفْرَطُوْنَ விடப்படுபவர்கள்
16:62. (இன்னும்) தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. 16:72 وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ படைத்தான் لَـكُمْ உங்களுக்காக مِّنْ இருந்து اَنْفُسِكُمْ உங்களில் اَزْوَاجًا மனைவிகளை وَّ جَعَلَ இன்னும் படைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ இருந்து اَزْوَاجِكُمْ உங்கள் மனைவிகள் بَنِيْنَ ஆண் பிள்ளைகளை وَحَفَدَةً இன்னும் பேரன்களை وَّرَزَقَكُمْ இன்னும் உணவளித்தான்/உங்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِؕ நல்லவற்றிலிருந்து اَفَبِالْبَاطِلِ ?/பொய்யை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் وَبِنِعْمَتِ இன்னும் அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வின் هُمْ يَكْفُرُوْنَۙ அவர்கள் நிராகரிக்கின்றனர்
16:72. இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? 21:5 بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَـرٰٮهُ بَلْ هُوَ شَاعِرٌ ۖۚ فَلْيَاْتِنَا بِاٰيَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ
بَلْ மாறாக قَالُوْۤا கூறினர் اَضْغَاثُ பயமுறுத்துகின்ற اَحْلَامٍۢ கனவுகள் بَلِ மாறாக افْتَـرٰٮهُ இதை இட்டுக்கட்டுகிறார் بَلْ மாறாக هُوَ இவர் شَاعِرٌ ۖۚ ஒரு கவிஞர் فَلْيَاْتِنَا ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை كَمَاۤ போன்று اُرْسِلَ அனுப்பப்பட்டது الْاَوَّلُوْنَ முந்தியவர்கள்
21:5. அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர். 21:18 بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ
بَلْ மாறாக نَـقْذِفُ எறிகிறோம் بِالْحَـقِّ சத்தியத்தை عَلَى الْبَاطِلِ அசத்தியத்தின் மீது فَيَدْمَغُهٗ அது அதை உடைத்து விடுகிறது فَاِذَا அப்போது هُوَ அது زَاهِقٌ ؕ அழிந்து விடுகிறது وَلَـكُمُ உங்களுக்கு الْوَيْلُ நாசம்தான் مِمَّا تَصِفُوْنَ வர்ணிப்பதால்
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். 23:91 مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ
مَا اتَّخَذَ ஏற்படுத்திக் கொள்ளவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْ وَّلَدٍ எந்த ஒரு குழந்தையையும் وَّمَا كَانَ இருக்கவில்லை مَعَهٗ அவனுடன் مِنْ اِلٰهٍ எந்தக் கடவுளும் اِذًا அப்படி இருந்திருந்தால் لَّذَهَبَ கொண்டு சென்று விடுவார்கள் كُلُّ ஒவ்வொரு اِلٰهٍۢ கடவுளும் بِمَا خَلَقَ இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள் وَلَعَلَا بَعْضُهُمْ தான் படைத்ததை عَلٰى بَعْضٍؕ சிலர் மீது سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يَصِفُوْنَۙ அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
23:91. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன். 27:60 اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآٮِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَـكُمْ اَنْ تُـنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ يَّعْدِلُوْنَ ؕ
اَمَّنْ ?/எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَاَنْزَلَ இன்னும் அவன் இறக்கினான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً ۚ மழையை فَاَنْۢبَتْنَا நாம் முளைக்க வைத்தோம் بِهٖ அதன்மூலம் حَدَآٮِٕقَ தோட்டங்களை ذَاتَ بَهْجَةٍ ۚ அழகிய காட்சியுடைய مَا كَانَ முடியாது لَـكُمْ உங்களால் اَنْ تُـنْۢبِتُوْا நீங்கள் முளைக்க வைக்க شَجَرَهَا ؕ அதன் மரங்களை ءَاِلٰـهٌ (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! مَّعَ اللّٰهِ ؕ அல்லாஹ்வுடன் بَلْ மாறாக هُمْ அவர்கள் قَوْمٌ மக்கள் يَّعْدِلُوْنَ ؕ இணைவைக்கின்றனர்
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். 32:3 اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰٮهُۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? افْتَرٰٮهُۚ இதை அவர் இட்டுக் கட்டினார் என்று بَلْ மாறாக هُوَ இதுதான் الْحَقُّ உண்மையா(ன வேதமா)கும் مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக قَوْمًا ஒரு சமுதாயத்தை مَّاۤ اَتٰٮهُمْ அவர்களிடம் வராத مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பவர் எவரும் مِّنْ قَبْلِكَ இதற்கு முன்னர் لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
32:3. ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்). 37:149 فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۙ
فَاسْتَفْتِهِمْ ஆகவே, அவர்களிடம் கேட்பீராக! اَلِرَبِّكَ உமது இறைவனுக்கு الْبَنَاتُ பெண் பிள்ளைகளும் وَلَهُمُ அவர்களுக்கு الْبَنُوْنَۙ ஆண் பிள்ளைகளுமா
37:149. (நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று. 37:151 اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مِّنْ اِفْكِهِمْ தங்களது பெரும் பொய்யில் لَيَقُوْلُوْنَۙ அவர்கள் கூறுகின்றனர்
37:151. “அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.” 37:158 وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ
وَجَعَلُوْا அவர்கள் ஏற்படுத்தினர் بَيْنَهٗ அவனுக்கு இடையில் وَبَيْنَ இன்னும் இடையில் الْجِنَّةِ ஜின்களுக்கு نَسَبًا ؕ ஓர் உறவை وَلَقَدْ திட்டவட்டமாக عَلِمَتِ அறிந்து கொண்டனர் الْجِنَّةُ ஜின்கள் اِنَّهُمْ நிச்சயமாக தாங்கள் لَمُحْضَرُوْنَۙ ஆஜர்படுத்தப்படுவோம்
37:158. அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். Showing results 31 to 40 of 45