38:7 مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ۖۚ
مَا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِى الْمِلَّةِ மார்க்கத்தில் الْاٰخِرَةِ ۖۚ வேறு اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا اخْتِلَاقٌ ۖۚ கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர
38:7. “வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்). 45:7 وَيْلٌ لِّـكُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ
وَيْلٌ நாசம்தான் لِّـكُلِّ எல்லோருக்கும் اَفَّاكٍ பாவிகள் اَثِيْمٍۙ பொய் பேசுகின்ற
45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான். 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَا வேறு இல்லை هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நமது வாழ்க்கையை الدُّنْيَا உலக نَمُوْتُ மரணிக்கின்றோம் وَنَحْيَا இன்னும் வாழ்கின்றோம் وَمَا يُهْلِكُنَاۤ நம்மை அழிக்காது اِلَّا الدَّهْرُؕ காலத்தைத் தவிர وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِذٰلِكَ இதைப் பற்றி مِنْ عِلْمٍ ۚ அறிவு اِنْ هُمْ அவர்கள் இல்லை اِلَّا يَظُنُّوْنَ வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர
45:24. மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. 45:32 وَاِذَا قِيْلَ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّالسَّاعَةُ لَا رَيْبَ فِيْهَا قُلْتُمْ مَّا نَدْرِىْ مَا السَّاعَةُ ۙ اِنْ نَّـظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மையானது وَّالسَّاعَةُ இன்னும் மறுமை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهَا அதில் قُلْتُمْ நீங்கள் கூறுவீர்கள் مَّا نَدْرِىْ அறியமாட்டோம் مَا السَّاعَةُ ۙ மறுமை என்றால் என்ன? اِنْ نَّـظُنُّ நாங்கள் எண்ணவில்லை اِلَّا தவிர ظَنًّا ஒரு எண்ணமாகவே وَّمَا نَحْنُ بِمُسْتَيْقِنِيْنَ நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை
45:32. மேலும் “நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை” என்று கூறப்பட்ட போது; “(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்” என்று நீங்கள் கூறினீர்கள். 60:12 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِذَا جَآءَكَ உம்மிடம் வந்தால் الْمُؤْمِنٰتُ முஃமினான பெண்கள் يُبَايِعْنَكَ உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ அவர்கள் இணைவைக்க மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு شَيْــٴًــا எதையும் وَّلَا يَسْرِقْنَ இன்னும் திருட மாட்டார்கள் وَلَا يَزْنِيْنَ இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் وَلَا يَقْتُلْنَ இன்னும் கொலை செய்ய மாட்டார்கள் اَوْلَادَهُنَّ தங்கள் குழந்தைகளை وَلَا يَاْتِيْنَ இன்னும் கொண்டுவர மாட்டார்கள் بِبُهْتَانٍ ஒரு பொய்யை يَّفْتَرِيْنَهٗ அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர் بَيْنَ முன்னர் اَيْدِيْهِنَّ தங்கள் கைகள் وَاَرْجُلِهِنَّ இன்னும் தங்கள் கால்களுக்கு وَلَا يَعْصِيْنَكَ இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள் فِىْ مَعْرُوْفٍ நல்ல காரியங்களில் فَبَايِعْهُنَّ அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக! وَاسْتَغْفِرْ பாவமன்னிப்புக் கோருவீராக! لَهُنَّ அவர்களுக்காக اللّٰهَؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். Showing results 41 to 45 of 45