தேடல்


9:40
9:40 اِلَّا تَـنْصُرُوْهُ فَقَدْ نَصَرَهُ اللّٰهُ اِذْ اَخْرَجَهُ الَّذِيْنَ كَفَرُوْا ثَانِىَ اثْنَيْنِ اِذْ هُمَا فِى الْغَارِ اِذْ يَقُوْلُ لِصَاحِبِهٖ لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلَيْهِ وَاَ يَّدَهٗ بِجُنُوْدٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِيْنَ كَفَرُوا السُّفْلٰى‌ ؕ وَكَلِمَةُ اللّٰهِ هِىَ الْعُلْيَا ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
اِلَّا تَـنْصُرُوْ நீங்கள் உதவவில்லையெனில் هُ அவருக்கு فَقَدْ نَصَرَ உதவிசெய்துவிட்டான் هُ அவருக்கு اللّٰهُ அல்லாஹ் اِذْ اَخْرَجَهُ போது/வெளியேற்றினார்(கள்)/அவரை الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் ثَانِىَ ஒருவராக اثْنَيْنِ இருவரில் اِذْ போது هُمَا அவ்விருவரும் فِى الْغَارِ குகையில் اِذْ போது يَقُوْلُ கூறுகிறார் لِصَاحِبِهٖ தன் தோழருக்கு لَا تَحْزَنْ கவலைப்படாதே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَنَا‌ ۚ நம்முடன் فَاَنْزَلَ ஆகவே, இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَكِيْنَـتَهٗ தன் அமைதியை عَلَيْهِ அவர் மீது وَاَ يَّدَهٗ இன்னும் பலப்படுத்தினான் / அவரை بِجُنُوْدٍ படைகளைக்கொண்டு لَّمْ تَرَوْهَا நீங்கள் பார்க்கவில்லை / அவற்றை وَجَعَلَ இன்னும் ஆக்கினான் كَلِمَةَ வார்த்தையை الَّذِيْنَ எவர்களின் كَفَرُوا நிராகரித்தனர் السُّفْلٰى‌ ؕ மிகத் தாழ்ந்ததாக وَكَلِمَةُ வார்த்தை اللّٰهِ அல்லாஹ்வின் هِىَ அதுதான் الْعُلْيَا ؕ மிக உயர்வானது وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
10:38
10:38 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمْ அல்லது يَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் افْتَـرٰٮهُ‌ ؕ இதை இட்டுக்கட்டினார் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِسُوْرَةٍ ஒர் அத்தியாயத்தைக் கொண்டு مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் مَنِ எவர் اسْتَطَعْتُمْ சாத்தியமானீர்கள் مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மை சொல்பவர்களாக
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
11:50
11:50 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ‏
وَاِلٰى இடம் عَادٍ ஆது اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا‌ ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர مُفْتَرُوْنَ‏ புனைபவர்களாகவே
11:50. “ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
11:61
11:61 ‌وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏
وَاِلٰى இன்னும் இடம் ثَمُوْدَ ஸமூது اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய صٰلِحًا‌ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ் مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி هُوَ அவனே اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து وَاسْتَعْمَر வசிக்க வைத்தான் َكُمْ உங்களை فِيْهَا அதில் فَاسْتَغْفِرُوْ ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் هُ அவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ‌ ؕ அவன் பக்கம் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் قَرِيْبٌ மிகச் சமீபமானவன் مُّجِيْبٌ‏ பதிலளிப்பவன்
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
11:84
11:84 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ‌ؕ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ‌ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ‏
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا‌ ؕ ஷுஐபை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி وَلَا تَـنْقُصُوا குறைக்காதீர்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ‌ இன்னும் நிறுவையில் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/ உங்களை بِخَيْرٍ நல்லதொரு வசதியில் وَّاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் مُّحِيْطٍ‏ சூழக்கூடியது
11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
17:94
17:94 وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰٓى اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا‏
وَمَا مَنَعَ தடுக்கவில்லை النَّاسَ மனிதர்களை اَنْ يُّؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கைகொள்வது اِذْ போது جَآءَهُمُ அவர்களுக்கு வந்தது الْهُدٰٓى நேர்வழி اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا அவர்கள் கூறியது اَبَعَثَ அனுப்பினானா? اللّٰهُ அல்லாஹ் بَشَرًا மனிதரை رَّسُوْلًا‏ தூதராக
17:94. மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.
17:95
17:95 قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤٮِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَٮِٕنِّيْنَ لَـنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَـكًا رَّسُوْلًا‏
قُلْ கூறுவீராக لَّوْ كَانَ இருந்திருந்தால் فِى الْاَرْضِ பூமியில் مَلٰۤٮِٕكَةٌ வானவர்கள் يَّمْشُوْنَ நடக்கின்றனர் مُطْمَٮِٕنِّيْنَ நிம்மதியானவர்களாக لَـنَزَّلْنَا இறக்கியிருப்போம் عَلَيْهِمْ அவர்களிடம் مِّنَ இருந்து السَّمَآءِ வானம் مَلَـكًا வானவரை رَّسُوْلًا‏ ஒரு தூதராக
17:95. (நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
19:54
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا‌ ۚ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் اِسْمٰعِيْلَ‌ இஸ்மாயீலை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صَادِقَ உண்மையாளராக الْوَعْدِ வாக்கில் وَكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا‌ ۚ‏ நபியாக
19:54. (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
20:13
20:13 وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى‏
وَاَنَا நான் اخْتَرْتُكَ உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் فَاسْتَمِعْ ஆகவே செவிமடுப்பீராக لِمَا يُوْحٰى‏ வஹீ அறிவிக்கப்படுபவற்றை
20:13. இன்னும் “நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
20:41
20:41 وَاصْطَنَعْتُكَ لِنَفْسِى‌ۚ‏
وَاصْطَنَعْتُكَ இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் لِنَفْسِى‌ۚ‏ எனக்காகவே
20:41. இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.