தேடல்


2:220
2:220 فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِؕ وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِؕ இன்னும் மறுமை وَ یَسْـَٔلُوْنَكَ இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ பற்றி الْیَتٰمٰی ؕ அநாதைகள் قُلْ கூறுவீராக اِصْلَاحٌ சீர்திருத்துவது لَّهُمْ அவர்களை خَيْرٌ ؕ மிக நன்றே وَاِنْ تُخَالِطُوْهُمْ இன்னும் அவர்களை நீங்கள் சேர்த்துக் கொண்டால் فَاِخْوَانُكُمْ‌ؕ உங்கள் சகோதரர்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் يَعْلَمُ அறிவான் الْمُفْسِدَ சீர்கெடுப்பவனை مِنَ இருந்து الْمُصْلِحِ‌ؕ சீர்செய்பவன் وَلَوْ شَآءَ (அவன்) நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَاَعْنَتَكُمْؕ சிரமப்படுத்தி இருப்பான்/உங்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
2:220. (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
تِلْكَ அந்த الرُّسُلُ தூதர்கள் فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ۘ சிலரை مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் كَلَّمَ பேசினான் اللّٰهُ‌ அல்லாஹ் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْ அவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕ பதவிகளால் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَ மர்யமுடைய மகன் الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்த(மான) وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلَ சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِ என்றாலும் اخْتَلَفُوْا வேறுபட்டார்கள் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் كَفَرَ‌ؕ நிராகரித்தார் وَلَوْ شَآءَ இன்னும் நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلُوْا அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்தே ஆவான் مَا எதை يُرِيْدُ‏ நாடுவான்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
4:90
4:90 اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقٰتَلُوْكُمْ‌‌ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَـكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் يَصِلُوْنَ சேருகிறார்கள் اِلٰى قَوْمٍۢ சமுதாயத்திடம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை اَوْ அல்லது جَآءُوْكُمْ உங்களிடம் வந்தனர் حَصِرَتْ நெருக்கடிக்குள்ளாகின صُدُوْر நெஞ்சங்கள் هُمْ அவர்களுடைய اَنْ يُّقَاتِلُو அவர்கள் போரிடுவது كُمْ உங்களிடம் اَوْ அல்லது يُقَاتِلُوْا அவர்கள் போரிடுவது قَوْمَهُمْ‌ ؕ தங்கள் சமுதாயத்திடம் وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது فَلَقٰتَلُو போரிட்டிருப்பார்கள் كُمْ‌ ۚ உங்களிடம் فَاِنِ اعْتَزَلُو அவர்கள் விலகினால் كُمْ உங்களை فَلَمْ يُقَاتِلُو அவர்கள் போரிடவில்லை كُمْ உங்களிடம் وَاَلْقَوْا இன்னும் சமர்ப்பித்தார்கள் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلَمَ ۙ சமாதானத்தை فَمَا جَعَلَ ஆக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سَبِيْلًا‏ ஒரு வழியை
4:90. ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
6:107
6:107 وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ‌ؕ وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا‌ ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكُوْا ؕ இணைவைத்திருக்க மாட்டார்கள் وَمَا இல்லை جَعَلْنٰكَ நாம் உம்மை ஆக்க عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا‌ ۚ காவலராக وَمَاۤ اَنْتَ இன்னும் நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ‏ பொறுப்பாளராக
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
6:112
6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا‌ ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஆக்கினோம் لِكُلِّ نَبِىٍّ ஒவ்வொரு நபிக்கும் عَدُوًّا எதிரிகளாக شَيٰطِيْنَ ஷைத்தான்களை الْاِنْسِ மனிதர்களில் وَالْجِنِّ இன்னும் ஜின்களில் يُوْحِىْ அறிவிக்கிறார் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருக்கு زُخْرُفَ الْقَوْلِ அலங்காரமான சொல்லாக غُرُوْرًا‌ ؕ ஏமாற்றுவதற்காக وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் مَا மாட்டார்கள் فَعَلُوْهُ‌ அதை அவர்கள் செய்திருக்க فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! وَمَا இன்னும் எதை يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
6:137
6:137 وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَـتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ؕ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே زَيَّنَ அலங்கரித்தன لِكَثِيْرٍ அதிகமானோருக்கு مِّنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில் قَـتْلَ கொல்வதை اَوْلَادِهِمْ தங்கள்குழந்தைகளை شُرَكَآؤُهُمْ அவர்களுடைய ஷைத்தான்கள் لِيُرْدُوْهُمْ அழிப்பதற்காக/அவர்களை وَلِيَلْبِسُوْا குழப்புவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا فَعَلُوْهُ ؕ அவர்கள் செய்யவில்லை/அதை فَذَرْهُمْ விடுங்கள்/அவர்களை وَمَا يَفْتَرُوْنَ‏ உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்
6:137. இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
6:148
6:148 سَيَـقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَاْسَنَا‌ ؕ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَـنَا ؕ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْـتُمْ اِلَّا تَخْرُصُوْنَ‏
سَيَـقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ اَشْرَكُوْا இணைவைப்பவர்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكْنَا இணைவைத்திருக்க மாட்டோம் وَلَاۤ اٰبَآؤُنَا இன்னும் எங்கள் மூதாதைகள் وَلَا حَرَّمْنَا இன்னும் தடை செய்திருக்க மாட்டோம் مِنْ شَىْءٍ‌ ؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறே كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் حَتّٰى இறுதியாக ذَاقُوْا சுவைத்தனர் بَاْسَنَا‌ ؕ நம் தண்டனையை قُلْ கூறுவீராக هَلْ عِنْدَكُمْ உங்களிடம் உண்டா? مِّنْ عِلْمٍ கல்வியில் ஏதும் فَتُخْرِجُوْ வெளிப்படுத்துங்கள் هُ அதை لَـنَا ؕ நமக்கு اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ சந்தேகம் وَاِنْ இல்லை اَنْـتُمْ நீங்கள் اِلَّا தவிர تَخْرُصُوْنَ‏ கற்பனை செய்கிறீர்கள்
6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:149
6:149 قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ‌ ۚ فَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ‏
قُلْ கூறுவீராக فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحُجَّةُ ஆதாரம் الْبَالِغَةُ‌ ۚ முழுமையானது فَلَوْ شَآءَ நாடியிருந்தால் لَهَدٰٮكُمْ நேர்வழி படுத்தியிருப்பான்/உங்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
6:149. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.
7:176
7:176 وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ‌ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ‌ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَرَفَعْنٰهُ உயர்த்தியிருப்போம்/அவனை بِهَا அவற்றைக் கொண்டு وَلٰـكِنَّهٗۤ என்றாலும்/நிச்சயமாக அவன் اَخْلَدَ நிரந்தரம் தேடினான் اِلَى الْاَرْضِ பூமியில் وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினான் هَوٰٮهُ‌ ۚ தன் ஆசையை فَمَثَلُهٗ ஆகவே அவனுடைய உதாரணம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று الْـكَلْبِ‌ ۚ நாய் اِنْ تَحْمِلْ நீர் துரத்தினால் عَلَيْهِ அதை يَلْهَثْ அது நாக்கைத் தொங்கவிடும் اَوْ அல்லது تَتْرُكْهُ நீர் விட்டு விட்டால்/அதை يَلْهَثْ ؕ அது நாக்கைத் தொங்கவிடும் ذٰ لِكَ مَثَلُ இது/உதாரணம் الْقَوْمِ மக்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا‌ ۚ நம் வசனங்களை فَاقْصُصِ விவரிப்பீராக الْقَصَصَ சரித்திரத்தை لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ‏ அவர்கள் சிந்திப்பதற்காக
7:176. நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
9:46
9:46 وَلَوْ اَرَادُوْا الْخُـرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰـكِنْ كَرِهَ اللّٰهُ انۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِيْنَ‏
وَلَوْ اَرَادُوْا அவர்கள் நாடியிருந்தால் الْخُـرُوْجَ வெளியேறுவதை لَاَعَدُّوْا ஏற்பாடு செய்திருப்பார்கள் لَهٗ அதற்கு عُدَّةً ஒரு தயாரிப்பை وَّلٰـكِنْ எனினும் كَرِهَ வெறுத்தான் اللّٰهُ அல்லாஹ் انۢبِعَاثَهُمْ அவர்கள் புறப்படுவதை فَثَبَّطَهُمْ ஆகவே தடுத்து விட்டான்/அவர்களை وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது اقْعُدُوْا தங்கி விடுங்கள் مَعَ உடன் الْقٰعِدِيْنَ‏ தங்குபவர்கள்
9:46. அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.