10:16 قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَاۤ اَدْرٰٮكُمْ بِهٖ ۖ فَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
قُلْ கூறுவீராக لَّوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا நான் ஓதியிருக்கவும் மாட்டேன் تَلَوْتُهٗ இதை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَاۤ இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான் اَدْرٰٮكُمْ உங்களுக்கு بِهٖ ۖ இதை فَقَدْ لَبِثْتُ திட்டமாக வசித்துள்ளேன் فِيْكُمْ உங்களுடன் عُمُرًا ஒரு (நீண்ட) காலம் مِّنْ قَبْلِهٖ ؕ இதற்கு முன்னர் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 10:99 وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ
وَلَوْ شَآءَ நாடினால் رَبُّكَ உம் இறைவன் لَاٰمَنَ நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்) مَنْ فِى الْاَرْضِ பூமியிலுள்ளவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் جَمِيْعًا ؕ அனைவரும் اَفَاَنْتَ நீர்? تُكْرِهُ நிர்ப்பந்திப்பீர் النَّاسَ மக்களை حَتّٰى يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவதற்கு مُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? 11:34 وَلَا يَنْفَعُكُمْ نُصْحِىْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْؕ هُوَ رَبُّكُمْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَؕ
وَلَا يَنْفَعُكُمْ உங்களுக்கு பலனலிக்காது نُصْحِىْۤ என் நல்லுபதேசம் اِنْ اَرَدْتُّ நான் நாடினால் اَنْ اَنْصَحَ நான் நல்லுபதேசம்புரிய لَكُمْ உங்களுக்கு اِنْ كَانَ اللّٰهُ இருந்தால்/அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் اَنْ يُّغْوِيَكُمْؕ உங்களை அவன் வழிகெடுக்க هُوَ அவன் رَبُّكُمْ உங்கள் இறைவன் وَاِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَؕ நீங்கள் திருப்பப்படுவீர்கள்
11:34. “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்). 11:118 وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَـعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் لَجَـعَلَ ஆக்கியிருப்பான் النَّاسَ மக்களை اُمَّةً وَّاحِدَةً ஒரே வகுப்பினராக وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். 13:31 وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰى ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًا ؕ اَفَلَمْ يَايْــٴَــسِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًا ؕ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَاْتِىَ وَعْدُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ
وَلَوْ اَنَّ قُرْاٰنًا வேதம்/இருந்தால் سُيِّرَتْ நகர்த்தப்பட்டது بِهِ அதைக் கொண்டு الْجِبَالُ மலைகள் اَوْ அல்லது قُطِّعَتْ துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் بِهِ அதைக் கொண்டு الْاَرْضُ பூமி اَوْ அல்லது كُلِّمَ பேச வைக்கப்பட்டிருந்தால்... بِهِ அதைக் கொண்டு الْمَوْتٰى ؕ மரணித்தவர்கள் بَلْ மாறாக لِّلّٰهِ அல்லாஹ்வுக்குரியனவே الْاَمْرُ அதிகாரம் جَمِيْعًا ؕ அனைத்தும் اَفَلَمْ يَايْــٴَــسِ அறியவில்லையா? الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டனர் اَنْ لَّوْ يَشَآءُ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَهَدَى நேர்வழி படுத்தியிருப்பான் النَّاسَ மக்களை جَمِيْعًا ؕ அனைவரை وَلَا يَزَالُ தொடர்ந்து இருக்கும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் تُصِيْبُهُمْ அடையும்/அவர்களை بِمَا காரணமாக صَنَعُوْا செய்தனர் قَارِعَةٌ ஒரு திடுக்கம் اَوْ அல்லது تَحُلُّ நீர் இறங்குவீர் قَرِيْبًا அருகாமையில் مِّنْ دَارِهِمْ அவர்களின் ஊருக்கு حَتّٰى இறுதியாக يَاْتِىَ வரும் وَعْدُ வாக்குறுதி اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் الْمِيْعَادَ வாக்குறுதியை
13:31. நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான். 16:35 وَقَالَ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ فَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
وَقَالَ கூறினர்(கள்) الَّذِيْنَ எவர்கள் اَشْرَكُوْا இணைவைத்தனர் لَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا عَبَدْنَا வணங்கியிருக்க மாட்டோம் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ شَىْءٍ எதையும் نَّحْنُ நாங்களும் اٰبَآؤُنَا எங்கள் وَلَا حَرَّمْنَا இன்னும் தடுத்திருக்க மாட்டோம் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ شَىْءٍؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறே فَعَلَ செய்தார்(கள்) الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் فَهَلْ عَلَ ?/மீது الرُّسُلِ தூதர்கள் اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைப்பது الْمُبِيْنُ தெளிவாக
16:35. “அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை). 16:93 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَلَـتُسْــٴَــلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَـعَلَكُمْ உங்களை ஆக்கியிருப்பான் اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே وَّلٰـكِنْ எனினும் يُّضِلُّ வழிகெடுக்கின்றான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகின்றான் وَيَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ؕ எவரை/நாடுகின்றான் وَلَـتُسْــٴَــلُنَّ நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள் عَمَّا எதைப்பற்றி كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ செய்வீர்கள்
16:93. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள். 18:77 فَانْطَلَقَا حَتّٰۤى اِذَاۤ اَتَيَاۤ اَهْلَ قَرْيَةِ ۨاسْتَطْعَمَاۤ اَهْلَهَا فَاَبَوْا اَنْ يُّضَيِّفُوْهُمَا فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ فَاَقَامَهٗ ؕ قَالَ لَوْ شِئْتَ لَـتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا
فَانْطَلَقَا ஆகவே, இருவரும் சென்றனர் حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَتَيَاۤ அவ்விருவரும்வரவே اَهْلَ قَرْيَةِ ஓர் ஊராரிடம் ۨاسْتَطْعَمَاۤ அவ்விருவரும் உணவு கேட்டார்கள் اَهْلَهَا அவ்வூராரிடம் فَاَبَوْا அவர்கள் மறுத்தனர் اَنْ يُّضَيِّفُوْ அவர்கள் விருந்தளிக்க هُمَا அவ்விருவருக்கும் فَوَجَدَا அவ்விருவரும் கண்டனர் فِيْهَا அங்கு جِدَارًا ஒரு சுவற்றை يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ விழ இருக்கும் فَاَقَامَهٗ ؕ அவர் நிறுத்தினார் / அதை قَالَ கூறினார் لَوْ شِئْتَ நீ நாடியிருந்தால் لَـتَّخَذْتَ எடுத்திருக்கலாமே عَلَيْهِ அதற்காக اَجْرًا ஒரு கூலியை
18:77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார். 23:24 فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يُرِيْدُ اَنْ يَّـتَفَضَّلَ عَلَيْكُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً ۖۚ مَّا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ ۚ
فَقَالَ கூறினர் الْمَلَؤُا தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய மக்களில் مَا இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர بَشَرٌ மனிதரே مِّثْلُكُمْ ۙ உங்களைப் போன்ற يُرِيْدُ அவர் நாடுகிறார் اَنْ يَّـتَفَضَّلَ மேன்மை அடைய عَلَيْكُمْ ؕ உங்கள் மீது وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً ۖۚ வானவர்களை مَّا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِىْۤ اٰبَآٮِٕنَا எங்கள் மூதாதைகளில் الْاَوَّلِيْنَ ۚ முன்னோர்களான
23:24. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள். 25:51 وَلَوْ شِئْنَا لَبَـعَثْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ نَّذِيْرًا ۖ
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَبَـعَثْنَا அனுப்பியிருப்போம் فِىْ كُلِّ ஒவ்வொரு قَرْيَةٍ ஊரிலும் نَّذِيْرًا ۖ ஓர் எச்சரிப்பாளரை
25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம். Showing results 11 to 20 of 29