தேடல்


11:36
11:36 وَاُوْحِىَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‌ ۖ ‌ ۚ‏
وَاُوْحِىَ இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது اِلٰى نُوْحٍ நூஹுக்கு اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَنْ يُّؤْمِنَ அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார் مِنْ قَوْمِكَ உமது மக்களில் اِلَّا தவிர مَنْ قَدْ اٰمَنَ எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார் فَلَا تَبْتَٮِٕسْ ஆகவே நீர் கவலைப்படாதீர் بِمَا காரணமாக/எவை كَانُوْا இருந்தனர் يَفْعَلُوْنَ‌ ۖ ۚ‏ அவர்கள் செய்வார்கள்
11:36. மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
11:40
11:40 حَتّٰۤى اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ‌ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِيْلٌ‏
حَتّٰۤى இறுதியாக اِذَا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை وَفَارَ இன்னும் பொங்கியது التَّنُّوْرُۙ அடுப்பு قُلْنَا கூறினோம் احْمِلْ ஏற்றுவீராக فِيْهَا அதில் مِنْ இருந்து كُلٍّ எல்லாம் زَوْجَيْنِ இரு ஜோடியை اثْنَيْنِ இரண்டு وَاَهْلَكَ இன்னும் உமது குடும்பத்தை اِلَّا தவிர مَنْ எவர் سَبَقَ முந்தி விட்டது عَلَيْهِ அவர் மீது الْقَوْلُ வாக்கு وَمَنْ இன்னும் எவர் اٰمَنَ‌ؕ நம்பிக்கை கொண்டார் وَمَاۤ اٰمَنَ நம்பிக்கை கொள்ளவில்லை مَعَهٗۤ அவருடன் اِلَّا தவிர قَلِيْلٌ‏ குறைவானவர்கள்
11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
11:42
11:42 وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ‏
وَهِىَ அது (கப்பல்) تَجْرِىْ செல்கிறது بِهِمْ அவர்களைக்கொண்டு فِىْ مَوْجٍ அலையில் كَالْجِبَالِ மலைகளைப் போன்று وَنَادٰى இன்னும் சப்தமிட்டு அழைத்தார் نُوْحُ நூஹ் اۨبْنَهٗ தன் மகனை وَكَانَ இருந்தான் فِىْ مَعْزِلٍ ஒரு விலகுமிடத்தில் يّٰبُنَىَّ என் மகனே! ارْكَبْ பயணி مَّعَنَا எங்களுடன் وَلَا تَكُنْ ஆகிவிடாதே مَّعَ உடன் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
11:42. பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
11:45
11:45 وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ‏
وَنَادٰى அழைத்தார் نُوْحٌ நூஹ் رَّبَّهٗ தன் இறைவனை فَقَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنَّ நிச்சயமாக ابْنِىْ என் மகன் مِنْ اَهْلِىْ என் குடும்பத்திலுள்ளவன் وَاِنَّ நிச்சயமாக وَعْدَكَ உன் வாக்கு الْحَـقُّ உண்மையானது وَاَنْتَ நீ اَحْكَمُ மகா தீர்ப்பாளன் الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
11:45. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
11:46
11:46 قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ‌ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ‌‌ۖ فَلَا تَسْـــٴَـــلْنِ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنِّىْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ‏
قَالَ கூறினான் يٰـنُوْحُ நூஹே! اِنَّهٗ அவன் لَـيْسَ இல்லை مِنْ اَهْلِكَ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் ۚاِنَّهٗ நிச்சயமாக இது عَمَلٌ செயல் غَيْرُ அல்ல صَالِحٍ ۖ நல்ல(து) فَلَا تَسْـــٴَـــلْنِ என்னிடம் கேட்காதே مَا எதை لَـيْسَ இல்லை لَـكَ உமக்கு بِهٖ அதில் عِلْمٌ‌ ؕ ஞானம் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعِظُكَ உபதேசிக்கிறேன்/உமக்கு اَنْ تَكُوْنَ நீர் ஆகுவதை مِنَ الْجٰهِلِيْنَ‏ அறியாதவர்களில்
11:46. அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
11:48
11:48 قِيْلَ يٰـنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَيْكَ وَعَلٰٓى اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ‌ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏
قِيْلَ கூறப்பட்டது يٰـنُوْحُ நூஹே! اهْبِطْ நீர் இறங்குவீராக بِسَلٰمٍ பாதுகாப்புடன் مِّنَّا நமது وَبَرَكٰتٍ இன்னும் அருள்வளங்கள் عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اُمَمٍ உயிரினங்கள் مِّمَّنْ مَّعَكَ‌ؕ உம்முடன் இருக்கின்றவர்கள் وَاُمَمٌ இன்னும் சமுதாயங்கள் سَنُمَتِّعُهُمْ சுகமளிப்போம்/அவர்களுக்கு ثُمَّ பிறகு يَمَسُّهُمْ அடையும்/அவர்களை مِّنَّا நம்மிடமிருந்து عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
11:48. நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
11:89
11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ‌ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ‏
وَيٰقَوْمِ என் மக்களே لَا يَجْرِمَنَّكُمْ நிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம் شِقَاقِىْۤ என்மீதுள்ள விரோதம் اَنْ يُّصِيْبَكُمْ உங்களை அடைவதற்க்கு مِّثْلُ போன்ற مَاۤ எது اَصَابَ அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹூடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை هُوْدٍ ஹூதுடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை صٰلِحٍ‌ؕ ஸாலிஹ்வுடைய وَمَا இல்லை قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ‏ தூரமாக
11:89. “என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
14:9
14:9 اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ‌  ۛؕ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ‌ۛؕ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ‌ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ‏
اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? نَبَـؤُا சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் قَوْمِ மக்கள் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ‌  ۛؕ ஸமூது وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ ۛؕ அவர்களுக்குப் பின்னர் لَا அறியமாட்டார் يَعْلَمُهُمْ அவர்களை اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ் جَآءَتْهُمْ வந்தா(ர்க)ள்/அவர்களிடம் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய بِالْبَيِّنٰتِ தெளிவான சான்றுகளைக் கொண்டு فَرَدُّوْۤا திருப்பினர் اَيْدِيَهُمْ கைகளை/தங்கள் فِىْۤ اَفْوَاهِهِمْ தங்கள் வாய்களின் பக்கமே وَقَالُوْۤا இன்னும் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் كَفَرْنَا நிராகரித்தோம் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلْـتُمْ நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதைக் கொண்டு وَاِنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا تَدْعُوْنَـنَاۤ எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை اِلَيْهِ அதன் பக்கம் مُرِيْبٍ‏ ஆழமான சந்தேகம்
14:9. உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
17:3
17:3 ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ‌ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا‏
ذُرِّيَّةَ சந்ததிகளே مَنْ எவர்கள் حَمَلْنَا ஏற்றினோம் مَعَ نُوْحٍ‌ؕ நூஹூடன் اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருந்தார் عَبْدًا ஓர் அடியாராக شَكُوْرًا‏ அதிகம் நன்றி செலுத்துகிறவர்
17:3. நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
17:17
17:17 وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍ‌ؕ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏
وَكَمْ எத்தனை اَهْلَكْنَا அழித்தோம் مِنَ الْقُرُوْنِ தலைமுறைகளை مِنْۢ بَعْدِ பின்னர் نُوْحٍ‌ؕ நூஹூக்கு وَكَفٰى இன்னும் போதுமானவன் بِرَبِّكَ உம் இறைவனே بِذُنُوْبِ பாவங்களை عِبَادِهٖ தன் அடியார்களின் خَبِيْرًۢا ஆழ்ந்தறிபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
17:17. நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.