தேடல்


2:183
2:183 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَيْکُمُ உங்கள் மீது الصِّيَامُ நோன்பு کَمَا போன்று كُتِبَ கடமையாக்கப்பட்டது عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِکُمْ உங்களுக்கு முன்னர் لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:183. நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.
2:184
2:184 اَيَّامًا مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ‌ؕ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍؕ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ؕ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّـکُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
اَيَّامًا நாட்களில் مَّعْدُوْدٰتٍؕ எண்ணப்பட்ட(வை) فَمَنْ எவர் كَانَ இருந்தார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ اَيَّامٍ நாட்களில் اُخَرَ‌ؕ மற்ற(வை) وَعَلَى இன்னும் மீது الَّذِيْنَ எவர்கள் يُطِيْقُوْنَهٗ அதற்கு சிரமப்படுகிறார்கள் فِدْيَةٌ பரிகாரம் طَعَامُ உணவு مِسْكِيْنٍؕ ஓர் ஏழையின் فَمَنْ எவர் تَطَوَّعَ உபரியாகச் செய்வார் خَيْرًا நன்மையை فَهُوَ அது خَيْرٌ நன்மை لَّهٗ ؕ அவருக்கு وَاَنْ تَصُوْمُوْا இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது خَيْرٌ மிகச் சிறந்தது لَّـکُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
2:184. (இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர்) அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும்; எனினும், அதற்கு சக்தி பெற்றிருப்போர் (அதற்குப்) பரிகாரமாக, ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்; எனினும், எவரேனும் உபரியாக நன்மைசெய்தால் அது அவருக்கு நல்லது – ஆயினும், நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.
2:185
2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
شَهْرُ மாதம் رَمَضَانَ ரமழான் الَّذِىْٓ எது اُنْزِلَ இறக்கப்பட்டது فِيْهِ அதில் الْقُرْاٰنُ அல்குர்ஆன் هُدًى நேர்வழியாக لِّلنَّاسِ மக்களுக்கு وَ بَيِّنٰتٍ இன்னும் சான்றுகளாக مِّنَ الْهُدٰى நேர்வழியின் وَالْفُرْقَانِۚ இன்னும் பிரித்தறிவிப்பது فَمَنْ எவர் شَهِدَ தங்கி இருப்பார் مِنْكُمُ உங்களிலிருந்து الشَّهْرَ அம்மாதத்தில் فَلْيَـصُمْهُ ؕ அவர் அதில் நோன்பிருக்கவும் وَمَنْ இன்னும் எவர் کَانَ இருப்பார் مَرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் فَعِدَّةٌ கணக்கிடவும் مِّنْ இருந்து اَيَّامٍ நாட்கள் اُخَرَؕ மற்ற(வை) يُرِيْدُ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் بِکُمُ உங்களுக்கு الْيُسْرَ இலகுவை وَلَا يُرِيْدُ இன்னும் நாடமாட்டான் بِکُمُ உங்களுக்கு الْعُسْرَ சிரமத்தை وَلِتُکْمِلُوا இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக الْعِدَّةَ எண்ணிக்கையை وَلِتُکَبِّرُوا இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக اللّٰهَ அல்லாஹ்வை عَلٰى مَا هَدٰٮكُمْ உங்களை நேர்வழி நடத்தியதற்காக وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக்கூடியதாகவும், (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவேண்டும். எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பை) மற்ற நாட்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறான்; உங்களுக்குச் சிரமமானதை அவன் நாடவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
2:187
2:187 اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْۚ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ؕ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِؕ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
اُحِلَّ அனுமதிக்கப்பட்டுள்ளது لَـکُمْ உங்களுக்கு لَيْلَةَ இரவில் الصِّيَامِ நோன்பு الرَّفَثُ சேர்வது اِلٰى نِسَآٮِٕكُمْ‌ؕ உங்கள் மனைவிகளுடன் هُنَّ அவர்கள் (பெண்கள்) لِبَاسٌ ஆடை لَّـكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ இன்னும் நீங்கள்(ஆண்கள்) لِبَاسٌ ஆடை لَّهُنَّ ؕ அவர்களுக்கு (பெண்களுக்கு) عَلِمَ அறிவான் اللّٰهُ அல்லாஹ் اَنَّکُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تَخْتَانُوْنَ ஏமாற்றுகிறீர்கள் اَنْفُسَکُمْ உங்களை فَتَابَ عَلَيْكُمْ ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான் وَعَفَا இன்னும் மன்னித்தான் عَنْكُمْۚ உங்களை فَالْـــٰٔنَ ஆகவே இப்போது بَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேருங்கள் وَابْتَغُوْا இன்னும் தேடுங்கள் مَا எதை کَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَكُلُوْا இன்னும் உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் حَتّٰى يَتَبَيَّنَ தெளிவாகும் வரை لَـكُمُ உங்களுக்கு الْخَـيْطُ நூல் الْاَبْيَضُ வெள்ளை مِنَ இருந்து الْخَـيْطِ நூல் الْاَسْوَدِ கருப்பு مِنَ الْفَجْرِ‌ؕ அதிகாலையில் ثُمَّ பிறகு اَتِمُّوا முழுமையாக்குங்கள் الصِّيَامَ நோன்பை اِلَى الَّيْلِ‌ۚ இரவு வரை وَلَا تُبَاشِرُوْهُنَّ அவர்களுடன் சேராதீர்கள் وَاَنْـتُمْ போது/நீங்கள் عٰكِفُوْنَ தங்கியிருக்கிறீர்கள் فِى الْمَسٰجِدِؕ மஸ்ஜிதுகளில் تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ அல்லாஹ்வுடைய فَلَا تَقْرَبُوْهَا ؕ எனவே அவற்றை நெருங்காதீர்கள் كَذٰلِكَ அவ்வாறே يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் اٰيٰتِهٖ தன் வசனங்களை لِلنَّاسِ மக்களுக்கு لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
2:187. நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நிச்சயமாக நீங்கள் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்: அவன் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்று, உங்களை விட்டும் (அப்பாவத்தை) மன்னித்துவிட்டான்; எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்; இன்னும், அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவுவரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும், நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அவற்றை (மீற) நெருங்காதீர்கள்; (தன்னை) அஞ்சுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய சான்றுகளை மனிதர்களுக்குத் தெளிவாக்குகின்றான்.
2:196
2:196 وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاَتِمُّوا இன்னும் முழுமையாக்குங்கள் الْحَجَّ ஹஜ்ஜை وَالْعُمْرَةَ இன்னும் உம்றாவை لِلّٰهِؕ அல்லாஹ்வுக்காக فَاِنْ اُحْصِرْتُمْ நீங்கள் தடுக்கப்பட்டால் فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமாகியது مِنَ இருந்து الْهَدْىِ‌ۚ பலி(கள்) وَلَا تَحْلِقُوْا இன்னும் சிரைக்காதீர்கள் رُءُوْسَكُمْ உங்கள் தலைகளை حَتّٰى வரை يَبْلُغَ அடைகிறது الْهَدْىُ பலி مَحِلَّهٗ ؕ தன் இடத்தை فَمَنْ இன்னும் எவர் كَانَ இருக்கிறார் مِنْكُمْ உங்களில் مَّرِيْضًا நோயாளியாக اَوْ அல்லது بِهٖۤ அவருக்கு اَذًى ஓர் இடையூறு/காயம், சிரங்கு مِّنْ رَّاْسِهٖ அவருடையதலையில் فَفِدْيَةٌ ஆகவே பரிகாரம் مِّنْ இருந்து صِيَامٍ நோன்பு اَوْ அல்லது صَدَقَةٍ தர்மம் اَوْ அல்லது نُسُكٍ ۚ பலி فَاِذَآ اَمِنْتُمْ நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் فَمَنْ இன்னும் எவர் تَمَتَّعَ சுகம் அனுபவித்தார் بِالْعُمْرَةِ உம்றாவைக் கொண்டு اِلَى الْحَجِّ ஹஜ்ஜு வரை فَمَا எது اسْتَيْسَرَ சாத்தியமானது مِنَ இருந்து الْهَدْیِ ۚ பலி பிராணி فَمَنْ எனவே எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ ஆகவே நோன்பு ثَلٰثَةِ மூன்று اَیَّامٍ நாள்கள் فِى الْحَجِّ ஹஜ்ஜில் وَسَبْعَةٍ இன்னும் ஏழு اِذَا رَجَعْتُمْؕ நீங்கள் திரும்பினால் تِلْكَ அவை عَشَرَةٌ பத்து كَامِلَةٌ  ؕ முழுமையான ذٰلِكَ இது لِمَنْ எவருக்கு لَّمْ يَكُنْ இருக்கவில்லை اَهْلُهٗ அவருடைய குடும்பம் حَاضِرِىْ வசிப்பவர்களாக الْمَسْجِدِ அல் மஸ்ஜிது الْحَـرَامِ‌ؕ புனிதமான وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاعْلَمُوْٓا இன்னும் அறிந்துகொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ மிகக்கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்திசெய்யுங்கள், (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பலிப் பிராணிகளில் (உங்களுக்கு) சாத்தியமானது (அதற்குப் பகரமாகும்); அந்தப் பலிப்பிராணி தனது இடத்தை அடைவதற்குமுன் உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது அவருடைய தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடியதோ இருந்தால், (தலை முடியை இறக்கிக்கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும்; அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்; அல்லது பலி கொடுத்தல் வேண்டும்; பின்னர் (பகைவர் பற்றிய அச்சம், நோய் போன்ற தடைகளை விட்டும்) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால், (மக்கா சென்றபின், உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு, ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலிப்பிராணியிலிருந்து எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும்: (அவ்வாறு பலி கொடுக்கும் வசதியைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்றல் வேண்டும்; இவை முழுமையான பத்தாகும்; இ(ந்தச் சலுகையான)து எவருடைய குடும்பம் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் - ஆகவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
4:92
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌ ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ ஒரு நம்பிக்கையாளருக்கு اَنْ يَّقْتُلَ அவர் கொல்வது مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை اِلَّا தவிர خَطَـــٴًــا‌ ۚ தவறுதலாக وَمَنْ எவராவது قَتَلَ கொன்றால் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை خَطَـــٴًــا தவறுதலாகவே فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مُّؤْمِنَةٍ நம்பிக்கையாளரான وَّدِيَةٌ இன்னும் நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى இடம் اَهْلِهٖۤ அவருடைய குடும்பத்தார் اِلَّاۤ தவிர اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ அவர்கள் தானமாக்குவது فَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍ ஒரு சமுதாயம் சேர்ந்தவராக عَدُوٍّ எதிரி لَّـكُمْ உங்கள் وَهُوَ அவர் مُؤْمِنٌ நம்பிக்கையாளர் فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ؕ நம்பிக்கையாளரான وَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍۢ ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை فَدِيَةٌ நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى اَهْلِهٖ அவருடைய குடும்பத்தாரிடம் وَ تَحْرِيْرُ இன்னும் உரிமையிடுவது வேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ۚ நம்பிக்கையாளரான فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ நோன்பிருத்தல் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து تَوْبَةً மன்னிப்புக் கோரி مِّنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:92. தவறாக அன்றி, ஒரு நம்பிக்கையாளனுக்கு பிறிதொரு நம்பிக்கையாளனைக் கொலைசெய்வது ஆகுமானதல்ல: உங்களில் எவரேனும் ஒரு நம்பிக்கையாளனைத் தவறாகக் கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும், அவனுடைய குடும்பத்தார்பால் நஷ்டஈடும் ஒப்படைத்தலாகும்; (அவனுடைய குடும்பத்தாராகிய) அவர்கள் (நஷ்டஈட்டுத் தொகையை மன்னித்து அதை) தர்மமாக விட்டாலொழிய; (கொல்லப்பட்ட) அவன் உங்கள் விரோதியின் சமூகத்தாரில் உள்ளவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தால், அவனுடைய குடும்பத்தாரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படுதலாகும்; இன்னும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புவைக்க வேண்டும்: அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
5:89
5:89 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ‌ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ‌ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ‌ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ‌ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
لَا மாட்டான் يُؤَاخِذُكُمُ உங்களை தண்டிக்க اللّٰهُ அல்லாஹ் بِاللَّغْوِ வீணானதற்காக فِىْۤ இல் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்கள் وَلٰـكِنْ எனினும் يُّؤَاخِذُكُمْ உங்களைத் தண்டிப்பான் بِمَا எதற்காக عَقَّدْتُّمُ உறுதிப்படுத்தினீர்கள் الْاَيْمَانَ‌ ۚ சத்தியங்களை فَكَفَّارَتُهٗۤ அதற்குப் பரிகாரம் اِطْعَامُ உணவளிப்பது عَشَرَةِ பத்து مَسٰكِيْنَ ஏழைகளுக்கு مِنْ இருந்து اَوْسَطِ நடுத்தரமானது مَا எது تُطْعِمُوْنَ உணவளிக்கிறீர்கள் اَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்திற்கு اَوْ அல்லது كِسْوَتُهُمْ அவர்களுக்கு ஆடையளிப்பது اَوْ அல்லது تَحْرِيْرُ விடுதலையிடுவது رَقَبَةٍ‌ ؕ ஓர் அடிமை فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லையெனில் فَصِيَامُ நோன்பிருத்தல் ثَلٰثَةِ மூன்று اَيَّامٍ‌ ؕ நாட்களுக்கு ذٰ لِكَ இது كَفَّارَةُ பரிகாரம் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்களின் اِذَا حَلَفْتُمْ‌ ؕ நீங்கள் சத்தியம் செய்தால் وَاحْفَظُوْۤا காப்பாற்றுங்கள் اَيْمَانَكُمْ‌ ؕ உங்கள் சத்தியங்களை كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்; எனினும், (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே, சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு, பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது, அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்; அல்லது, ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால், (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால் இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவன் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
5:95
5:95 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ‌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ‌ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ‌ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் الصَّيْدَ வேட்டையை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ‌ ؕ இஹ்ராமுடையவர்கள் وَمَنْ எவர் قَتَلَهٗ கொன்றார்/அதை مِنْكُمْ உங்களில் مُّتَعَمِّدًا வேண்டுமென்றே (நாடியவராக) فَجَزَآءٌ தண்டனை مِّثْلُ ஒப்பானது مَا எது قَتَلَ கொன்றார் مِنَ இருந்து النَّعَمِ கால்நடைகள் يَحْكُمُ தீர்ப்பளிப்பர் بِهٖ அதற்கு ذَوَا عَدْلٍ நேர்மையான இருவர் مِّنْكُمْ உங்களில் هَدْيًاۢ பலியாக بٰلِغَ அடையக் கூடியது الْـكَعْبَةِ கஅபா اَوْ அல்லது كَفَّارَةٌ பரிகாரம் طَعَامُ உணவளிப்பது مَسٰكِيْنَ ஏழைகள் اَوْ அல்லது عَدْلُ சமமானது ذٰ لِكَ அது صِيَامًا நோன்பால் لِّيَذُوْقَ அவன் அனுபவிப்பதற்காக وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهٖ‌ ؕ செயல் / தனது عَفَا மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَمَّا سَلَفَ‌ ؕ முன் நடந்தவற்றை وَمَنْ எவன் عَادَ மீண்டான் فَيَنْتَقِمُ தண்டிப்பான் اللّٰهُ அல்லாஹ் مِنْهُ‌ ؕ அவனை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍ‏ தண்டிப்பவன்
5:95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை ஈடாகக் கொடுக்கவேண்டியது (அதற்கான) தண்டனையாகும்; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது (பரிகாரம் அளிக்க ஏதும் இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்கவேண்டும்; முன்னர் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான்; எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரைத் தண்டிப்பான்; அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.
9:112
9:112 اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
اَلتَّاۤٮِٕبُوْنَ திருந்தியவர்கள் الْعٰبِدُوْنَ வணக்கசாலிகள் الْحٰمِدُوْنَ புகழ்பவர்கள் السّاۤٮِٕحُوْنَ நோன்புநோற்பவர்கள் الرّٰكِعُوْنَ குனிபவர்கள் السّٰجِدُوْنَ சிரம் பணிபவர்கள் الْاٰمِرُوْنَ ஏவக்கூடியவர்கள் بِالْمَعْرُوْفِ நன்மையை وَالنَّاهُوْنَ இன்னும் தடுக்கக்கூடியவர்கள் عَنِ الْمُنْكَرِ பாவத்தை விட்டு وَالْحٰــفِظُوْنَ இன்னும் பாதுகாப்பவர்கள் لِحُدُوْدِ வரம்புகளை, சட்டங்களை اللّٰه ؕ அல்லாஹ்வுடைய وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
9:112. மன்னிப்புக் கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், ஸஜ்தா செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையைவிட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
33:35
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
اِنَّ الْمُسْلِمِيْنَ நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் وَالْمُسْلِمٰتِ இன்னும் முஸ்லிமான பெண்கள் وَالْمُؤْمِنِيْنَ இன்னும் முஃமினான ஆண்கள் وَالْمُؤْمِنٰتِ இன்னும் முஃமினான பெண்கள் وَالْقٰنِتِيْنَ இன்னும் பணிவான ஆண்கள் وَالْقٰنِتٰتِ இன்னும் பணிவான பெண்கள் وَالصّٰدِقِيْنَ இன்னும் உண்மையான ஆண்கள் وَالصّٰدِقٰتِ இன்னும் உண்மையான பெண்கள் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையான ஆண்கள் وَالصّٰبِرٰتِ இன்னும் பொறுமையான பெண்கள் وَالْخٰشِعِيْنَ இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள் وَالْخٰشِعٰتِ இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள் وَالْمُتَصَدِّقِيْنَ இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள் وَ الْمُتَصَدِّقٰتِ இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள் وَالصَّآٮِٕمِيْنَ இன்னும் நோன்பாளியான ஆண்கள் وَالصّٰٓٮِٕمٰتِ இன்னும் நோன்பாளியான பெண்கள் وَالْحٰفِظِيْنَ இன்னும் பேணுகின்ற ஆண்கள் فُرُوْجَهُمْ இன்னும் தங்கள் மறைவிடங்களை وَالْحٰـفِظٰتِ இன்னும் பேணுகின்ற பெண்கள் وَالذّٰكِرِيْنَ இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّ الذّٰكِرٰتِ ۙ இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள் اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا கூலியையும் عَظِيْمًا‏ மகத்தான
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.