2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
وَاِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் فِىْ رَيْبٍ சந்தேகத்தில் مِّمَّا எதில் نَزَّلْنَا இறக்கினோம் عَلٰى மீது عَبْدِنَا நம் அடிமை فَاْتُوْا எனவே, வாருங்கள் بِسُوْرَةٍ ஓர் அத்தியாயத்தைக் கொண்டு مِّنْ مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் شُهَدَآءَكُمْ உங்கள் ஆதரவாளர்களை مِّنْ دُوْنِ அல்லாத اللّٰهِ அல்லாஹ் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
2:23. இன்னும், (முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையவர்களாக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மையாளர்களாகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்து இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். 3:86 كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
كَيْفَ எவ்வாறு يَهْدِى நேர்வழி செலுத்துவான் اللّٰهُ அல்லாஹ் قَوْمًا ஒரு கூட்டத்தை كَفَرُوْا நிராகரித்தார்கள் بَعْدَ பின்னர் اِيْمَانِهِمْ தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு وَشَهِدُوْۤا இன்னும் சாட்சி கூறினர் اَنَّ الرَّسُوْلَ நிச்சயமாக தூதர் حَقٌّ உண்மையானவர் وَّجَآءَهُمُ இன்னும் அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُؕ தெளிவான சான்றுகள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
3:86. தங்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து 'நிச்சயமாக இந்தத் தூதர் (முஹம்மது) உண்மையாளர்தான்!' என்று சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்ட பிறகு, நிராகரித்துவிட்ட கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அல்லாஹ் அநியாயக்காரக் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான். 3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
وَكَيْفَ எவ்வாறு تَكْفُرُوْنَ நிராகரிப்பீர்கள் وَاَنْـتُمْ நீங்களோ تُتْلٰى ஓதப்பட عَلَيْكُمْ உங்கள் மீது اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَفِيْكُمْ உங்களுடன் இருக்க رَسُوْلُهٗ ؕ அவனுடைய தூதர் وَمَنْ எவர் يَّعْتَصِمْ பலமாகப் பற்றிக் கொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வை فَقَدْ هُدِىَ திட்டமாக நேர்வழி காட்டப்படுவார் اِلٰى பக்கம் صِرَاطٍ ஒரு பாதை مُّسْتَقِيْمٍ நேரானது
3:101. மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக்காட்டப்படும் நிலையிலும், அவனுடைய தூதர் (முஹம்மது) உங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலையிலும் நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார். 3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ
وَمَا இல்லை مُحَمَّدٌ முஹம்மது اِلَّا தவிர رَسُوْلٌ ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِ அவருக்கு முன்னர் الرُّسُلُؕ தூதர்கள் افَا۟ٮِٕنْ مَّاتَ அவர் இறந்தால் اَوْ அல்லது قُتِلَ கொல்லப்பட்டால் انْقَلَبْتُمْ புரண்டு விடுவீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْؕ உங்கள் குதிங்கால்கள் وَمَنْ இன்னும் எவர் يَّنْقَلِبْ புரண்டு விடுவாரோ عَلٰى மீது عَقِبَيْهِ தன் குதிங்கால்கள் فَلَنْ يَّضُرَّ அறவே தீங்கு செய்யமுடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ؕ எதையும் وَسَيَجْزِى கூலி வழங்குவான் اللّٰهُ அல்லாஹ் الشّٰكِرِيْنَ நன்றி செலுத்துபவர்களுக்கு
3:144. முஹம்மது, தூதரே அன்றி (வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள்; அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிங்காலின் மீது (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும், தம் குதிங்கால்கள் மீது (புறங்காட்டித்) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் (நற்)கூலியை வழங்குவான். 3:153 اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
اِذْ சமயம் تُصْعِدُوْنَ வேகமாக ஓடுகிறீர்கள் وَلَا تَلْوٗنَ நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் عَلٰٓى اَحَدٍ ஒருவரையும் وَّالرَّسُوْلُ தூதர் يَدْعُوْكُمْ உங்களை அழைக்கிறார் فِىْۤ اُخْرٰٮكُمْ உங்களுக்குஇறுதியில் فَاَثَابَكُمْ உங்களுக்கு கூலியாக்கினான் غَمًّا ۢ துயரத்தை بِغَمٍّ துயரத்தின்காரணமாக لِّـكَيْلَا تَحْزَنُوْا நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே عَلٰى மீது مَا எது فَاتَكُمْ உங்களுக்கு தவறியது وَلَا مَاۤ اَصَابَكُمْؕ இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை
3:153. (நினைவுகூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இத்தூதர் (முஹம்மது) உங்களை அழைத்துக்கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப்பார்க்காமல் (மேட்டின் மீது) ஏறிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே, துக்கத்தின் மேல் துக்கத்தை உங்களுக்கு அவன் கொடுத்தான்; (ஏனெனில், கிடைக்க வேண்டியது) உங்களுக்குத் தவறிவிட்டதின் மீதும், உங்களுக்கு ஏற்பட்ட(துன்பத்)தின் மீதும் நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காக (இவ்வாறு துக்கத்தைக் கொடுத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான். 3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
فَبِمَا رَحْمَةٍ கருணையினால் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لِنْتَ மென்மையானீர் لَهُمْۚ அவர்களுக்கு وَلَوْ كُنْتَ நீர் இருந்திருந்தால் فَظًّا கடுகடுப்பானவராக غَلِيْظَ கடுமையானவராக الْقَلْبِ உள்ளம் لَانْفَضُّوْا பிரிந்திருப்பார்கள் مِنْ இருந்து حَوْلِكَ உம் சுற்றுப் புறம் فَاعْفُ ஆகவே மன்னிப்பீராக عَنْهُمْ அவர்களை وَاسْتَغْفِرْ இன்னும் மன்னிப்புத் தேடுவீராக لَهُمْ அவர்களுக்காக وَشَاوِرْهُمْ இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன் فِى الْاَمْرِۚ காரியத்தில் فَاِذَا عَزَمْتَ (நீர்) உறுதிசெய்தால் فَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى اللّٰهِؕ அல்லாஹ் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُتَوَكِّلِيْنَ நம்பிக்கை வைப்பவர்களை
3:159. அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் (முஹம்மதே!) அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்துகொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம்மைவிட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே, அவர்களின் (பிழைகளை) மன்னிப்பீராக! அவ்வாறே, அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! மேலும், சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! பின்னர், (அவை பற்றி) நீர் உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ், (தன்னையே) சார்ந்திருப்போரை நேசிக்கின்றான். 33:40 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
مَا كَانَ இருக்கவில்லை مُحَمَّدٌ முஹம்மது اَبَآ தந்தையாக اَحَدٍ ஒருவருக்கும் مِّنْ رِّجَالِكُمْ உங்கள் ஆண்களில் وَلٰـكِنْ என்றாலும் رَّسُوْلَ தூதராகவும் اللّٰهِ அல்லாஹ்வின் وَخَاتَمَ இறுதி முத்திரையாகவும் النَّبِيّٖنَ ؕ நபிமார்களின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا நன்கறிந்தவனாக
33:40. முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன். 47:2 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا الصّٰلِحٰتِ இன்னும் நன்மைகளை செய்தனர் وَاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் بِمَا نُزِّلَ இறக்கப்பட்டதை(யும்) عَلٰى مُحَمَّدٍ முஹம்மது நபியின் மீது وَّهُوَ அதுதான் الْحَقُّ உண்மையாகும் مِنْ رَّبِّهِمْۙ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த كَفَّرَ போக்கிவிடுவான் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَاَصْلَحَ இன்னும் சீர் செய்துவிடுவான் بَالَهُمْ அவர்களின் காரியத்தை
47:2. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது, அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கும் நிலையில் - நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான். 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًاسِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
مُحَمَّدٌ முஹம்மது رَّسُوْلُ اللّٰهِ ؕ அல்லாஹ்வின் தூதர் وَالَّذِيْنَ مَعَهٗۤ அவருடன் இருக்கின்றவர்கள் اَشِدَّآءُ கடினமானவர்கள் عَلَى الْكُفَّارِ நிராகரிப்பாளர்கள்மீது رُحَمَآءُ கருணையாளர்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் تَرٰٮهُمْ நீர் அவர்களைக்காண்பீர் رُكَّعًا ருகூஃசெய்தவர்களாக سُجَّدًا சுஜூது செய்தவர்களாக يَّبْتَغُوْنَ அவர்கள் விரும்புகிறார்கள் فَضْلًا அருளை(யும்) مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَرِضْوَانًا பொருத்தத்தையும் سِيْمَاهُمْ அவர்களின் தோற்றம் فِىْ وُجُوْهِهِمْ அவர்களின் முகங்களில் مِّنْ اَثَرِ அடையாளமாக السُّجُوْدِ ؕ சுஜூதின் ذٰ لِكَ இது مَثَلُهُمْ அவர்களின் தன்மையாகும் فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ தவ்றாத்தில் கூறப்பட்ட وَمَثَلُهُمْ இன்னும் அவர்களின் தன்மையாவது فِى الْاِنْجِيْلِ ۛۚ இன்ஜீலில் கூறப்பட்ட كَزَرْعٍ ஒரு விளைச்சலைப் போலாகும் اَخْرَجَ வெளியாக்கியது شَطْئَـهٗ தனது காம்பை فَاٰزَرَهٗ இன்னும் அதை பலப்படுத்தியது فَاسْتَغْلَظَ பிறகு அது தடிப்பமாக ஆனது فَاسْتَوٰى அது உயர்ந்து நின்று عَلٰى سُوْقِهٖ தனது தண்டின் மீது يُعْجِبُ கவர்கிறது الزُّرَّاعَ விவசாயிகளை لِيَـغِيْظَ அவன் ரோஷமூட்டுவதற்காக بِهِمُ அவர்கள் மூலமாக الْكُفَّارَ ؕ நிராகரிப்பாளர்களை وَعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنْهُمْ அவர்களில் مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا عَظِيْمًا மகத்தானகூலியையும்
48:29. முஹம்மது, அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்பாளர்கள் மீது கண்டிப்பானவர்கள்; தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்; ருகூஉ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது, அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே, தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்களுக்குரிய உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர், அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது; இவற்றைக்கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான்; ஆனால், அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். 57:28 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّـكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَـكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ۙۚ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! اتَّقُوا பயந்து கொள்ளுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاٰمِنُوْا இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِرَسُوْلِهٖ அவனது தூதரை يُؤْتِكُمْ உங்களுக்கு கொடுப்பான் كِفْلَيْنِ இரு மடங்கு பங்குகளை مِنْ رَّحْمَتِهٖ தனது கருணையிலிருந்து وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு نُوْرًا ஒளியை تَمْشُوْنَ நீங்கள் நடந்து செல்வீர்கள் بِهٖ அதன் மூலம் وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ۙۚ மகா கருணையாளன்
57:28. (தூதராக இருந்த ஈஸாவை) நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் (முஹம்மது) மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவன் தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக்கொண்டு நீங்கள் (நேர்வழியில்) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். Showing results 1 to 10 of 10