3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ
فَنَادَتْهُ ஆகவேஅழைத்தா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் وَهُوَ قَآٮِٕمٌ அவர் நின்று தொழுதுகொண்டிருக்க يُّصَلِّىْ தொழுகிறார் فِى الْمِحْرَابِۙ மாடத்தில் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِيَحْيٰى யஹ்யாவைக் கொண்டு مُصَدِّقًۢا உண்மைப்படுத்துபவராக بِكَلِمَةٍ ஒரு வாக்கியத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَسَيِّدًا இன்னும் தலைவராக وَّحَصُوْرًا இன்னும் இன்பத்தைத் துறந்தவராக وَّنَبِيًّا இன்னும் நபியாக مِّنَ الصّٰلِحِيْنَ நல்லோரைச்சேர்ந்தவர்
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, வானவர் (மலக்கு)கள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் 'யஹ்யா' (எனும் மக)வைக் கொண்டு உமக்கு நன்மாராயம் கூறுகிறான்: அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக்கூடிய ஈஸா நபியை - முன்னறிக்கையாக) மெய்ப்பிப்பவராகவும், தலைவராகவும், ஒழுக்கநெறி பேணியவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர். 6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ நல்லோரில்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோரையும் (நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இவர்களில்) ஒவ்வொருவரும் நல்லவர்களில் உள்ளவராவார். 19:7 يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا
يٰزَكَرِيَّاۤ ஸகரிய்யாவே! اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி தருகிறோம் بِغُلٰمِ ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு اۨسْمُهٗ அதன் பெயர் يَحْيٰى ۙ யஹ்யா لَمْ نَجْعَلْ நாம் படைக்கவில்லை لَّهٗ அதற்கு مِنْ قَبْلُ இதற்கு முன் سَمِيًّا ஒப்பானவரை
19:7. "ஜகரிய்யாவே! ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்; அவருடைய பெயர் 'யஹ்யா' என்பதாகும்; இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). 19:12 يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ؕ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ
يٰيَحْيٰى யஹ்யாவே خُذِ பற்றிப் பிடிப்பீராக الْكِتٰبَ வேதத்தை بِقُوَّةٍ ؕ பலமாக وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْحُكْمَ ஞானத்தை صَبِيًّا ۙ சிறு குழந்தை
19:12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் (பற்றிப்) பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்); இன்னும், அவர் குழந்தையாக இருக்கும்போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம். 21:90 فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ
فَاسْتَجَبْنَا நாம் பதிலளித்தோம் لَهٗ அவருக்கு وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு يَحْيٰى யஹ்யாவை وَاَصْلَحْنَا இன்னும் சீர்படுத்தினோம் لَهٗ அவருக்கு زَوْجَهٗ ؕ அவருடைய மனைவியை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் يُسٰرِعُوْنَ விரைகின்றவர்களாக فِىْ الْخَيْـرٰتِ நன்மைகளில் وَ يَدْعُوْنَـنَا இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக رَغَبًا ஆர்வத்துடனும் وَّرَهَبًا ؕ பயத்துடனும் وَكَانُوْا இன்னும் இருந்தனர் لَنَا நம்மிடம் خٰشِعِيْنَ பணிவுள்ளவர்களாக
21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள்; இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள்; மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். Showing results 1 to 5 of 5