7:73 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوْا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ اَ لِيْمٌ
وَاِلٰى ثَمُوْدَ ‘ஸமூது’க்கு اَخَاهُمْ அவர்களுடைய சகோதரர் صٰلِحًا ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوْا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவன் هٰذِهٖ இது نَاقَةُ ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வுடைய لَـكُمْ உங்களுக்கு اٰيَةً ஓர் அத்தாட்சியாக فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது மேயும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَلَا تَمَسُّوْهَا அதை தொடாதீர்கள் بِسُوْٓءٍ தீமையைக் கொண்டு فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தும்
7:73. 'ஸமூது' கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர், (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; (இதற்காக) நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; இது அல்லாஹ்வின் ஒட்டகமாகும்; உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (இது வந்துள்ளது); எனவே, இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விட்டுவிடுங்கள்; அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள்; (அப்படிச் செய்தால்) அப்போது உங்களை நோவினை செய்யும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். 7:75 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتُضْعِفُوْا பலவீனர்களாக கருதப்பட்டனர் لِمَنْ எவருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் اَتَعْلَمُوْنَ அறிவீர்களா? اَنَّ صٰلِحًا நிச்சயமாக ஸாலிஹ் مُّرْسَلٌ அனுப்பப்பட்டவர் مِّنْ رَّبِّهٖؕ தன் இறைவனிடமிருந்து قَالُـوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلَ அனுப்பப்பட்டார் بِهٖ அதைக் கொண்டு مُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்டவர்கள்
7:75. அவருடைய சமூகத்தாரிலிருந்து (நம்பிக்கை கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்ட அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நிச்சயமாக 'ஸாலிஹ்' அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் - எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(ந்தத் தூ)தை நம்புகிறவர்களே!" என்று (பதில்) கூறினார்கள். 7:77 فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَ قَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ
فَعَقَرُوا ஆகவே அறுத்தனர் النَّاقَةَ பெண் ஒட்டகத்தை وَعَتَوْا இன்னும் மீறினர் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَ قَالُوْا இன்னும் கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே ائْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ அச்சுறுத்துகிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில்
7:77. பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள், (ஸாலிஹை நோக்கி): "ஸாலிஹே! நீர் (இறைவனின்) தூதரில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள். 7:79 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ
فَتَوَلّٰى திரும்பினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسَالَةَ தூதை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ உபதேசித்தேன் لَـكُمْ உங்களுக்கு وَلٰـكِنْ எனினும் لَّا تُحِبُّوْنَ நீங்கள் நேசிப்பதில்லை النّٰصِحِيْنَ உபதேசிப்பவர்களை
7:79. அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எத்திவைத்து, உங்களுக்கு (நற்)போதனையும் செய்தேன்; ஆனால், நீங்கள் (நற்)போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார். 11:61 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًاۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ
وَاِلٰى இன்னும் இடம் ثَمُوْدَ ஸமூது اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய صٰلِحًاۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ் مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி هُوَ அவனே اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து وَاسْتَعْمَر வசிக்க வைத்தான் َكُمْ உங்களை فِيْهَا அதில் فَاسْتَغْفِرُوْ ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் هُ அவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ ؕ அவன் பக்கம் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் قَرِيْبٌ மிகச் சமீபமானவன் مُّجِيْبٌ பதிலளிப்பவன்
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்); அவர் சொன்னார்: "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான்; எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும், அவன் பக்கமே மீளுங்கள்; நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்." 11:62 قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
قَالُوْا கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே قَدْ كُنْتَ திட்டமாகநீர்இருந்தீர் فِيْنَا எங்களில் مَرْجُوًّا ஆதரவுக்குரியவராக قَبْلَ முன்பு هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை اَنْ نَّـعْبُدَ நாங்கள் வணங்குவதை விட்டு مَا يَعْبُدُ எதை வணங்குவார் اٰبَآؤُنَا மூதாதைகள்/எங்கள் وَاِنَّنَا நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا இருந்து/எவை تَدْعُوْ அழைக்கிறீர் نَاۤ எங்களை اِلَيْهِ எதன் பக்கம் مُرِيْبٍ மிக ஆழமான சந்தேகம்
11:62. அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? மேலும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள். 11:66 فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِٮِٕذٍؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
فَلَمَّا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் صٰلِحًـا ஸாலிஹை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ مِّنَّا நமது அருளைக் கொண்டு وَمِنْ இன்னும் இருந்து خِزْىِ இழிவு يَوْمِٮِٕذٍؕ அந்நாளின் اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் الْقَوِىُّ பலமிக்கவன் الْعَزِيْزُ மிகைத்தவன்
11:66. நமது கட்டளை வந்தபோது ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம்; மேலும், அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக உமது இறைவன் அவனே வல்லமை மிக்கவன்; மிகைத்தவன். 11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ
وَيٰقَوْمِ என் மக்களே لَا يَجْرِمَنَّكُمْ நிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம் شِقَاقِىْۤ என்மீதுள்ள விரோதம் اَنْ يُّصِيْبَكُمْ உங்களை அடைவதற்க்கு مِّثْلُ போன்ற مَاۤ எது اَصَابَ அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹூடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை هُوْدٍ ஹூதுடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை صٰلِحٍؕ ஸாலிஹ்வுடைய وَمَا இல்லை قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ தூரமாக
11:89. "என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹுடைய சமூகத்தவரையும், அல்லது ஹூதுடைய சமூகத்தவரையும், அல்லது ஸாலிஹுடைய சமூகத்தவரையும் பிடித்துக்கொண்டது போன்ற (வேதனையான)து, உங்களையும் பிடித்துக்கொள்வதற்கு உங்களைத் திண்ணமாகத் தூண்டவேண்டாம்; லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!" 26:142 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَۚ
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு اَخُوْهُمْ அவர்களது சகோதரர் صٰلِحٌ ஸாலிஹ் اَلَا تَتَّقُوْنَۚ நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
26:142. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ், "நீங்கள் (இறைவனை) அஞ்சமாட்டீர்களா?" என்று கூறியபோது (அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள்). 27:45 وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوْا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ நாம் அனுப்பினோம் اِلٰى ثَمُوْدَ ஸமூது (மக்களு)க்கு اَخَا சகோதரர் هُمْ அவருடைய صٰلِحًا ஸாலிஹை اَنِ اعْبُدُوْا நீங்கள்வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை فَاِذَا هُمْ ஆனால், அவர்கள் அப்போது فَرِيْقٰنِ இரண்டு பிரிவுகளாக يَخْتَصِمُوْنَ தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
27:45. தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: 'நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்' (என்று போதிக்குமாறு) அனுப்பினோம். ஆனால், அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்துகொள்ளலானார்கள். Showing results 1 to 10 of 13