தேடல்


7:65
7:65 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ‏
وَاِلٰى عَادٍ اَخَا ‘ஆது’க்கு/சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا‌ ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பிவைத்தோம்); அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" என்று கேட்டார்.
11:50
11:50 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ‏
وَاِلٰى இடம் عَادٍ ஆது اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا‌ ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர مُفْتَرُوْنَ‏ புனைபவர்களாகவே
11:50. 'ஆது' சமூகத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனையன்றி (வேறு) எந்தக் கடவுளும் உங்களுக்கு இல்லை; நீங்கள் கற்பனை செய்பவர்களே தவிர வேறில்லை."
11:53
11:53 قَالُوْا يٰهُوْدُ مَا جِئْتَـنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتٰـرِكِىْۤ اٰلِهَـتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَـكَ بِمُؤْمِنِيْنَ‏
قَالُوْا கூறினர் يٰهُوْدُ ஹூதே! مَا جِئْتَـنَا நம்மிடம் நீ வரவில்லை بِبَيِّنَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு وَّمَا இன்னும் இல்லை نَحْنُ நாங்கள் بِتٰـرِكِىْۤ விடுபவர்களாக اٰلِهَـتِنَا தெய்வங்களை/எங்கள் عَنْ قَوْلِكَ உம் சொல்லுக்காக وَمَا இன்னும் இல்லை نَحْنُ நாங்கள் لَـكَ உம்மை بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
11:53. (அதற்கு) அவர்கள்: "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டுவரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டுவிடுபவர்களும் அல்லர்; நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்கள்.
11:60
11:60 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ‌ؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ‏
وَاُتْبِعُوْا இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள் فِىْ هٰذِهِ الدُّنْيَا இந்த உலகத்தில் لَعْنَةً சாபத்தை وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕ இன்னும் மறுமையில் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக عَادًا ஆது كَفَرُوْا நிராகரித்தனர் رَبَّهُمْ‌ؕ தங்கள் இறைவனுக்கு اَلَا அறிந்துகொள்ளுங்கள்! بُعْدًا கேடுதான் لِّعَادٍ ஆதுக்கு قَوْمِ மக்கள் هُوْدٍ‏ ஹூதுடைய
11:60. எனவே, இவ்வுலகிலும், மறுமைநாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் அவர்கள் தொடரப்பட்டனர்; அறிந்துகொள்வீர்களாக! நிச்சயமாக ஆது கூட்டத்தார் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள்; அறிந்துகொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்குக் கேடுதான்.
11:89
11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ‌ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ‏
وَيٰقَوْمِ என் மக்களே لَا يَجْرِمَنَّكُمْ நிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம் شِقَاقِىْۤ என்மீதுள்ள விரோதம் اَنْ يُّصِيْبَكُمْ உங்களை அடைவதற்க்கு مِّثْلُ போன்ற مَاۤ எது اَصَابَ அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹூடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை هُوْدٍ ஹூதுடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை صٰلِحٍ‌ؕ ஸாலிஹ்வுடைய وَمَا இல்லை قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ‏ தூரமாக
11:89. "என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹுடைய சமூகத்தவரையும், அல்லது ஹூதுடைய சமூகத்தவரையும், அல்லது ஸாலிஹுடைய சமூகத்தவரையும் பிடித்துக்கொண்டது போன்ற (வேதனையான)து, உங்களையும் பிடித்துக்கொள்வதற்கு உங்களைத் திண்ணமாகத் தூண்டவேண்டாம்; லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!"
26:124
26:124 اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! لَهُمْ அவர்களுக்கு اَخُوْ சகோதரர் هُمْ அவர்களது هُوْدٌ ஹூது اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
26:124. அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது: "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது:
46:21
46:21 وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக اَخَا சகோதரரை عَادٍؕ ஆது சமுதாயத்தின் اِذْ اَنْذَرَ அவர் எச்சரித்த சமயத்தை قَوْمَهٗ தனது மக்களை بِالْاَحْقَافِ மணல் பாங்கான இடத்தில் وَقَدْ திட்டமாக خَلَتِ சென்றுள்ளனர் النُّذُرُ எச்சரிப்பாளர்கள் مِنْۢ بَيْنِ يَدَيْهِ இவருக்கு முன்னரும் وَمِنْ خَلْفِهٖۤ இவருக்கு பின்னரும் اَلَّا تَعْبُدُوْۤا நீங்கள் வணங்காதீர்கள் اِلَّا اللّٰهَ ؕ அல்லாஹ்வை அன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ தண்டனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ பெரிய(து)
46:21. மேலும், ஆது சமூகத்தாரின் சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறைத் தூதர்கள்) வந்திருக்கிறார்கள்; (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள்! நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!