அசதி
2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
2:255. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) கடவுள் இல்லை: அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனைச் சிறுதூக்கமோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் அறிவான்; அவன் ஞானத்திலிருந்து அவன் நாடியதைத் தவிர (வேறு) எதனையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியாது; அவனுடைய 'குர்ஸிய்யு' வானங்களையும், பூமியையும் விட விசாலமாய் இருக்கின்றது; அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
9:120 مَا كَانَ لِاَهْلِ الْمَدِيْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ يَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَ لَا يَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّـفْسِهٖ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ لَا يُصِيْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَطَــٴُـــوْنَ مَوْطِئًا يَّغِيْظُ الْكُفَّارَ وَلَا يَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّيْلاً اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَۙ
9:120. மதீனா வாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் - அல்லாஹ்வின் தூதரைவிட்டு அவர்கள் பின்தங்குவதும், அவரின் உயிரைவிடத் தம் உயிர்களையே (பெரிதென) ஆசைவைப்பதும் தகுதியானதல்ல; இது ஏனென்றால், அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்), பசி, நிராகரிப்பவர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து, அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்செயலாகவே பதிவுசெய்யப்படுகின்றன; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கமாட்டான்.
35:35 اۨلَّذِىْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُـغُوْبٌ
35:35. "அவன் தன் அருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்: அதில், எந்த விதமான கஷ்டமும் எங்களைத் தீண்டுவதில்லை; அதில் எங்களை எந்தச் சோர்வும் தீண்டுவதில்லை" (என்றும் கூறுவார்கள்).
46:33 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ يَعْىَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ يُّحْیَِۧ الْمَوْتٰى ؕ بَلٰٓى اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து, இன்னும் அவற்றைப் படைத்ததால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அத்தகைய அல்லாஹ் - அவன் நிச்சயமாக மரணித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
50:38 وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍۖ وَّمَا مَسَّنَا مِنْ لُّغُوْبٍ
50:38. நிச்சயமாக நாம்தாம் வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.