இணைவைப்பதற்குரிய தண்டனை
2:221 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (நம்பிக்கையுள்ள பெண்களை) நீங்கள் திருமணம் செய்துவைக்காதீர்கள்; இணைவைக்கும் ஆண் அவன் உங்களைக் கவருபவனாக இருந்தபோதிலும், நம்பிக்கையுள்ள ஓர் அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை (நரக) நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால், அல்லாஹ்வோ தன் கட்டளையைக்கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் விளக்குகிறான்.
5:72 لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் திட்டமாக நிராகரித்துவிட்டனர்; ஆனால், மஸீஹ் கூறினார்: "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!" என்று; எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பானோ, அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாகத் தடுத்துவிட்டான்; மேலும், அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
22:33 لَـكُمْ فِيْهَا مَنَافِعُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ مَحِلُّهَاۤ اِلَى الْبَيْتِ الْعَتِيْقِ
22:33. (பலிப் பிராணிகளாகிய) அவற்றில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்குப் பயனடையுதல் உண்டு; அதன் பின்னர், (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் பூர்வீகமான ஆலயத்தின்பால் இருக்கிறது.
33:73 لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
33:73. எனவே, (இவ்வமானிதத்திற்கு மாறுசெய்யும்) நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும்; இணைவைப்பவர்களான ஆண்களையும், இணைவைப்பவர்களான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால், இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான்; அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
40:11 قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ
40:11. அதற்கவர்கள்: "எங்கள் இறைவனே! நீ எங்களை இரு முறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால், நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம்; எனவே, (இதிலிருந்து தப்பி) வெளியேற ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
40:12 ذٰ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ
40:12. (பதில் கூறப்படும்:) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே, அவனையே வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்தீர்கள், ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டபோது, (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே, இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மிக்க பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
41:6 قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ فَاسْتَقِيْمُوْۤا اِلَيْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ
41:6. "நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்; (ஆனால்) நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது; ஆகவே, அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக! இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள்; அன்றியும், இணைவைப்போருக்குக் கேடுதான்" என்று (நபியே!) நீர் கூறும்.
48:6 وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِؕ عَلَيْهِمْ دَآٮِٕرَةُ السَّوْءِ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَؕ وَسَآءَتْ مَصِيْرًا
48:6. அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும், இணைவைக்கும் ஆண்களையும், இணைவைக்கும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்வான்; (அவ்வேதனையின்) கேடு அவர்கள் மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான்; (அது தான்) செல்லும் இடங்களில் மிகவும் கெட்டது.