இணைவைக்கப்படுபவர்களின் நிலை
4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கமாட்டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, அவர் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார்.
4:116 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا
4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவ)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.