இரண்டு நாள்கள்
2:203 وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍؕ فَمَنْ تَعَجَّلَ فِىْ يَوْمَيْنِ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۚ وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ ۙ لِمَنِ اتَّقٰى ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّکُمْ اِلَيْهِ تُحْشَرُوْنَ
2:203. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால், அவர்மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாரோ அவர்மீதும் குற்றமில்லை, (இது இறைவனை) அஞ்சிக்கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
41:9 قُلْ اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِىْ خَلَقَ الْاَرْضَ فِىْ يَوْمَيْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًاؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِيْنَۚ
41:9. "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து, அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள்தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
41:12 فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ۖ وَحِفْظًا ؕ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய காரியத்தை அறிவித்தான்: இன்னும், (உலகத்திற்கு) சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும், அதனைப் பாதுகாப்பாகவும் (ஆக்கினோம்); இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய இறைவனுடைய ஏற்பாடேயாகும்.