இரகசியம்
16:77   وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
16:77. மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) மறுமையின் விஷயம் இமை கொட்டி விழிப்பதுபோல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
20:103   يَّتَخَافَـتُوْنَ بَيْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا‏
20:103. "நீங்கள் பத்து (நாட்களுக்கு) மேல் (பூமியில்) தங்கியதில்லை" என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக்கொள்வார்கள்.
58:8   اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نُهُوْا عَنِ النَّجْوٰى ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَيَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللّٰهُۙ وَيَقُوْلُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ‌ؕ حَسْبُهُمْ جَهَنَّمُ‌ۚ يَصْلَوْنَهَا‌ۚ فَبِئْسَ الْمَصِيْرُ‏
58:8. இரகசியம் பேசுவதை விட்டுத் தடுக்கப்பட்டிருந்தும் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன்பால் மீண்டு பாவத்தையும், வரம்பு மீறுதலையும், தூதருக்கு மாறுசெய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர், அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக்கொண்டு (ஸலாம்) முகமன் கூறவில்லையோ, அதைக் கொண்டு முகமன் கூறுகிறார்கள்; பிறகு, அவர்கள் தங்களுக்குள் "நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை" என்றும் கூறிக்கொள்கின்றனர்; நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள்; மீளும் தலத்தில் அது மிகக்கெட்டதாகும்.
58:9   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَـتَـنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰى‌ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
58:9. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக்கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால், நன்மையையும், இறையச்சத்தையும் கொண்டு இரகசியம் பேசிக்கொள்ளுங்கள். மேலும், எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
58:12   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
58:12. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தானதர்மத்தை முற்படுத்துங்கள்; இது உங்களுக்கு நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும்; ஆனால், (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் (வசதி) பெற்றிராவிடின், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.