இரும்பு
17:50   قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًا‏
17:50. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்."
18:96   اٰتُوْنِىْ زُبَرَ الْحَدِيْدِ‌ ؕ حَتّٰٓى اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْـفُخُوْا‌ ؕ حَتّٰٓى اِذَا جَعَلَهٗ نَارًا ۙ قَالَ اٰتُوْنِىْۤ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ؕ‏
18:96. "நீங்கள் இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்!" (என்றார்.) பிறகு, அவை இரு மலைகளுக்கிடையில் (உச்சிக்குச்) சமமாகும் போது, 'ஊதுங்கள்' என்றார். அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (உருக்கிய செம்பையும்) "என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் உருக்கிய செம்பை அதன் மீது ஊற்றுவேன்" என்றார்.
22:21   وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِيْدٍ‏
22:21. இன்னும், அவர்களுக்காக இரும்பினாலான சம்மட்டிகளும் உண்டு.
34:10   وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்: "மலைகளே! (அவர் தஸ்பீஹ் செய்யும்போது) அவருடன் சேர்ந்து நீங்களும் துதியுங்கள்: இன்னும், பறவைகளையும் (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்" என்றோம்); மேலும், நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
57:25   لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ۚ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏
57:25. நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன; (இவற்றின் மூலமாக) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவிசெய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்துகொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.