இளமை, இளைஞன் - இளைஞர்கள்
18:10 اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْـكَهْفِ فَقَالُوْا رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا
18:10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்தபோது அவர்கள், "எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை அளிப்பாயாக! இன்னும், நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" என்று கூறினார்கள்.
18:13 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّؕ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًىۖ
18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; தங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்தினோம்.
56:17 يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ
56:17. நிலையான இளமையுடைய சிறுவர்கள் (பணிபுரிய) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.
76:19 وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا
76:19. இன்னும், எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி(ச் சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் பரத்தப்பட்ட முத்துக்களாக அவர்களை நீர் எண்ணுவீர்.