இறைநம்பிக்கையாளன்
2:221   وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏
2:221. (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (நம்பிக்கையுள்ள பெண்களை) நீங்கள் திருமணம் செய்துவைக்காதீர்கள்; இணைவைக்கும் ஆண் அவன் உங்களைக் கவருபவனாக இருந்தபோதிலும், நம்பிக்கையுள்ள ஓர் அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை (நரக) நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால், அல்லாஹ்வோ தன் கட்டளையைக்கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் விளக்குகிறான்.
4:92   وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌ ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
4:92. தவறாக அன்றி, ஒரு நம்பிக்கையாளனுக்கு பிறிதொரு நம்பிக்கையாளனைக் கொலைசெய்வது ஆகுமானதல்ல: உங்களில் எவரேனும் ஒரு நம்பிக்கையாளனைத் தவறாகக் கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும், அவனுடைய குடும்பத்தார்பால் நஷ்டஈடும் ஒப்படைத்தலாகும்; (அவனுடைய குடும்பத்தாராகிய) அவர்கள் (நஷ்டஈட்டுத் தொகையை மன்னித்து அதை) தர்மமாக விட்டாலொழிய; (கொல்லப்பட்ட) அவன் உங்கள் விரோதியின் சமூகத்தாரில் உள்ளவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ அந்தச் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தால், அவனுடைய குடும்பத்தாரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படுதலாகும்; இன்னும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புவைக்க வேண்டும்: அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:93   وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏
4:93. எவனேனும் ஒருவன், ஒரு நம்பிக்கையாளனை வேண்டுமென்றே கொலைசெய்வானாயின், அவனுடைய கூலி நரகமே ஆகும்; அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்; அல்லாஹ் அவன்மீது கோபம் கொள்கிறான்; இன்னும், அவனைச் சபிக்கிறான்; அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கின்றான்.
4:94   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا‌ ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ‌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
4:94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால் (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் நம்பிக்கையாளர்களா? அல்லது மற்றவர்களா? என்பதைத்) தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்; (அவர்களில், தாம் நம்பிக்கையாளர்கள் என்பதை அறிவிக்கும்பொருட்டு) உங்களுக்கு ஸலாம் (முகமன்) கூறியவரை, இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான (அழியக் கூடிய) பொருட்களை அடையும் பொருட்டு, 'நீ நம்பிக்கையாளனல்லன்' என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறேதான் (எதிரிகளுக்குப் பயந்துகொண்டு) இருந்தீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு உபகாரம் செய்தான்; எனவே, (மேலே கூறியவாறு போர்முனையில்) நீங்கள் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:124   وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا‏
4:124. ஆகவே, ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் யார் நம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயல்கள் செய்கிறாரோ - அத்தகையோர் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும், அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
9:10   لَا يَرْقُبُوْنَ فِىْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً‌ ؕ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ‏
9:10. அவர்கள் எந்த நம்பிக்கையாளரின் விஷயத்திலும் உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள்; மேலும், அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.
16:97   مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌ ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
16:97. ஆணாயினும், பெண்ணாயினும் அவர் நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும், (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
17:1   سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
17:1. தன்னுடைய அடியாரை ஓரிரவில் (கஃபாவாகிய) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவுப் பயணம் செய்வித்த ஒருவன் (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால், அதனைச் சுற்றியுள்ள பகுதியை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
20:75   وَمَنْ يَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓٮِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰىۙ‏
20:75. ஆனால், எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்த நிலையில் அவனிடம் வருகிறாரோ, அத்தகையோருக்கு மேலான பதவிகள் உண்டு.
20:112   وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا‏
20:112. எவர் நம்பிக்கையாளராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் (தமக்கு) அநீதியையோ (தமக்குரிய) கூலியில் குறைவையோ பயப்படமாட்டார்.
21:94   فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖ‌ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ‏
21:94. எனவே, எவர் நம்பிக்கையாளராக நல்ல செயல்களைச் செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகிவிடாது; நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
32:18   اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا‌ ؕ لَا يَسْتَوٗنَؔ‏
32:18. எனவே, (அத்தகைய) நம்பிக்கையாளர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
33:36   وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு - நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறுசெய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
40:28   وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ‌ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்த, நம்பிக்கை கொண்ட மனிதர் ஒருவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வேதான்!" என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? மேலும், அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்துள்ளார்; எனவே, அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால், அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
40:40   مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ‏
40:40. "எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்: எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ நம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயலைச் செய்கிறாரோ - அத்தகையோர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பர்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்."
64:2   هُوَ الَّذِىْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
64:2. (மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தான்: உங்களில் நிராகரிப்பவரும் உண்டு; உங்களில் நம்பிக்கையாளரும் உண்டு; இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.
71:28   رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏
71:28. என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும், நீ மன்னிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே!" (என்றும் கூறினார்).