இன்பம்
2:36   فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ‌ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
2:36. இதன் பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழிதவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்திலிருந்து) வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் சுகம் அனுபவிப்பதும் உண்டு" என்று கூறினோம்.
2:236   لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً  ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ‌ۚ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَ عَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ‌ۚ مَتَاعًا ۢ بِالْمَعْرُوْفِ‌‌ۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ‏
2:236. பெண்களை நீங்கள் தீண்டாமலும் அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்யாமலும், (அவர்களை) நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டால் உங்கள்மீது குற்றமில்லை; ஆயினும், அவர்களுக்கு ஏதும் கொடுத்து பயனடையச் செய்யுங்கள்; வசதியுள்ளவர் அவருக்குரிய அளவும், வசதியற்றவர் அவருக்குரிய அளவும் நியாயமான முறையில் (அப்பெண்களுக்குக் கொடுத்துப்) பயனடையச் செய்யவேண்டும்; இது நல்லோர்மீது கடமையாகும்.
3:197   مَتَاعٌ قَلِيْلٌ ثُمَّ مَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمِهَادُ‏
3:197. (இது) மிகவும் அற்பசுகம்; பிறகு, அவர்கள் தங்குமிடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட தங்குமிடமுமாகும்.
7:24   قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ‌ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
7:24. (அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள்; உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்குப் பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.
11:3   وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ‌ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ‏
11:3. "நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அழகிய வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், நற்செயல் உடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) அவனுடைய வெகுமதியைக் கொடுப்பான்; ஆனால், நீங்கள் (நம்பிக்கை கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்."
16:80   وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْۢ بُيُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَـكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُيُوْتًا تَسْتَخِفُّوْنَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ اِقَامَتِكُمْ‌ۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰى حِيْنٍ‏
16:80. அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித் தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பயண நாளிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான்; வெள்ளாட்டின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் (அமைத்துத் தந்திருக்கிறான்).
16:117   مَتَاعٌ قَلِيْلٌ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
16:117. (இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
21:111   وَاِنْ اَدْرِىْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّـكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
21:111. "இன்னும் அது (வேதனையைப் பிற்படுத்தி வைத்திருப்பது) உங்களுக்குச் சோதனையாகவும், குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா? என்பதை நான் அறியமாட்டேன்."
36:44   اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰى حِيْنٍ‏
36:44. நம்முடைய அருளினாலும், சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காகவும் (விட்டு வைக்கப்பட்டாலன்றி).
56:73   نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَ‌ۚ‏
56:73. நாம் அதனை நினைவூட்டுவதாகவும் பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
79:33   مَتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
80:32   مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,