`இன்ஷா அல்லாஹ்' சொல்லுதல்
18:23 وَلَا تَقُوْلَنَّ لِشَا۟ىْءٍ اِنِّىْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۙ
18:23. (நபியே!) இன்னும், எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்" என்று நிச்சயமாகக் கூறாதீர்கள்.
18:24 اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّىْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا
18:24. "அல்லாஹ் நாடினால்" (என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்துவிடும்கால் உம் இறைவனை நினைவுபடுத்திக் கொள்வீராக! மேலும், "நேர்வழியால் இதைவிட மிக நெருங்கியதற்கு என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டப் போதுமானவன்" என்றும் கூறுவீராக!
68:18 وَلَا يَسْتَثْنُوْنَ
68:18. 'அல்லாஹ் நாடினால்' (இன்ஷா அல்லாஹ்) என்று அவர்கள் கூறவில்லை.