உடமை
2:155   وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏
2:155. நிச்சயமாக, நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; (நபியே!) பொறுமையுடையோருக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!
16:75   ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا‌ؕ هَلْ يَسْتَوٗنَ‌ؕ اَ لْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடைமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களும் கொடுத்திருக்கிறோம்; அவனும், அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கின்றான்; இவர்கள் (இருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.