உடன்படிக்கை
2:235 وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَکْنَنْتُمْ فِىْٓ اَنْفُسِكُمْؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰـكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ
2:235. (இவ்வாறு இத்தா இருக்கும் பெண்ணுடன் திருமணம் செய்யக்கருதி) பேச்சுவார்த்தை நடத்துவதை நீங்கள் (மறைமுகமாக) எடுத்துக்கூறுவதிலோ, அல்லது உங்களது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள்மீது குற்றமில்லை; (ஏனெனில், நீங்கள் தவணை- இத்தா- முடிந்தபின்) அவர்களை நிச்சயமாக நினைவுகூர்வீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்திருக்கின்றான்; ஆதலால், (திருமணம் பற்றி) கண்ணியமான சொல்லைச் சொல்வதைத் தவிர, இரகசியமாக அவர்களுக்கு நீங்கள் (எதுவும்) வாக்களிக்காதீர்கள், இன்னும், விதியாக்கப்பட்ட (இத்தாவான)து அதனுடைய தவணையை அடையும் வரை திருமணபந்தத்தை உறுதிசெய்துவிடாதீர்கள்; அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
2:237 وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰىؕ وَ لَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
2:237. ஆயினும், அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அவர்களுடைய மஹரை நிர்ணயம் செய்திருக்க அவர்களை நீங்கள் விவாகரத்து செய்வீர்களாயின், நீங்கள் குறிப்பிட்டிருந்த மஹர் தொகையில் பாதி (அவர்களுக்கு) உண்டு - அவர்களோ அல்லது எவர் கையில் (அத்) திருமணபந்தமிருக்கிறதோ, அவர் (முழுமையும்) மன்னித்துவிட்டாலன்றி; ஆனால், (இவ் விஷயத்தில்) நீங்கள் விட்டுக்கொடுப்பது இறையச்சத்திற்கு மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்துகொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்(த்துக் கூலிகொடு)ப்பவனாக இருக்கின்றான்.
4:33 وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
4:33. இன்னும், பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் செல்கின்ற (செல்வத்)திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை, ஒவ்வொருவருக்கும், நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்துகொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான்.
5:1 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ اُحِلَّتْ لَـكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ
5:1. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் செய்துகொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள்மீது ஓதிக்காட்டப்படுகின்றவற்றைத் தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன; ஆனால், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவதை ஆகுமாக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்); நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
5:89 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்; எனினும், (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே, சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு, பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது, அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்; அல்லது, ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால், (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால் இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவன் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.