உட்கார்ந்திருப்பவர்கள்
4:95   لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً‌  ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًا ۙ‏
4:95. நம்பிக்கை கொண்டவர்களில் (நோய், பலவீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்த இடையூறுமின்றி வீட்டில் உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய செல்வங்களாலும், தங்களுடைய உயிர்களாலும், அல்லாஹ்வின் பாதையில் போர்புரிபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்களுடைய செல்வங்களாலும் தங்களுடைய உயிர்களாலும் போர்செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கிவைத்துள்ளான். எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான். ஆனால், போர் புரிவோருக்கோ (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான (நற்)கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
4:140   وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏
4:140. (நம்பிக்கையாளர்களே!) "அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்) நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில், அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்" என்று (இவ்)வேதத்தில் உங்களுக்கு (கட்டளையை அல்லாஹ்வாகிய) அவன் இறக்கியுள்ளான்; (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்க்கிறவனாயிருக்கிறான்.
5:24   قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا‌ فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ‏
5:24. அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும்வரை நாங்கள் ஒருபோதும் அதில் நுழையவேமாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் சென்று இருவருமே போர்செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
7:16   قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ‏
7:16. "நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.
7:86   وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا‌ ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْ‌وَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ‏
7:86. மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் (வழிப்போக்கர்களை) பயமுறுத்துகிறவர்களாகவும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் - அவன் மீது நம்பிக்கை கொண்டோரைத் தடுப்பவர்களாகவும் அதில் (அல்லாஹ்வின் பாதையில்) கோணலைத் தேடக்கூடியவர்களாகவும் உட்காராதீர்கள்; குறைவானவர்களாக நீங்கள் இருந்தபோது அவன் உங்களை அதிகமாக ஆக்கிவைத்ததையும் நினைவு கூருங்கள்; குழப்பம் செய்துகொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக! (என்றும் கூறினார்.)
9:83   فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰى طَآٮِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَـاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِىَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِىَ عَدُوًّا‌ ؕ اِنَّكُمْ رَضِيْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلـِفِيْنَ‏
9:83. (நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பிவருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டுவர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் "நீங்கள் ஒரு போதும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும், என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள்; ஏனெனில், நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தம் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத்தான் பொருந்திக் கொண்டீர்கள்; எனவே, (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே உட்கார்ந்து விடுங்கள்" என்று கூறுவீராக!
9:90   وَ جَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِيْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
9:90. கிராமவாசிகளில் சிலர் உம்மிடம் புகல்சொல்லிக்கொண்டு, (போரில் கலந்துகொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்படவேண்டுமென்று (கேட்க) வந்தனர்: இன்னும், அல்லாஹ்விடமும் அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள்: அவர்களில் நிராகரித்தவர்களை வெகுவிரைவில் நோவினைசெய்யும் வேதனை வந்தடையும்.
85:6   اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌ ۙ‏
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்தபோது,