உணர்வு
3:118   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்களைத் தவிர வேறெவரையும் உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்: ஏனெனில், பிறர் உங்களுக்குத் தீமைசெய்வதில் சிறிதும் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகிவிட்டது; அவர்களின் நெஞ்சங்கள் மறைத்துவைத்திருப்பதோ மிகப்பெரியதாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டோம்; நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருந்தால் (இதை அறிந்துகொள்வீர்கள்).
40:67   هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ؕ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும், பின் இரத்தக் கட்டியிலிருந்தும் (உருவாக்கி), உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர்; இன்னும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
56:62   وَلَـقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏
56:62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்; எனவே, (அதிலிருந்து நினைவுகூர்ந்து) நீங்கள் படிப்பினை பெறவேண்டாமா?
89:23   وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏
89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டுவரப்படும் போது - அந்நாளில் மனிதன் (அல்லாஹ்வுக்கு மாற்றமாக, தான் நடந்ததை) நினைவுகூர்வான்; அந்த (நாளில்) நினைவுகூர்வதால் அவனுக்கு என்ன பலன்?