உதயம்
6:77 فَلَمَّا رَاَالْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّىْ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ رَبِّىْ لَاَ كُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآ لِّيْنَ
6:77. பின்னர், சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார்; ஆனால், அது மறைந்தபோது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழிதவறிய கூட்டத்தினரில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
6:78 فَلَمَّا رَاٰ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّىْ هٰذَاۤ اَكْبَرُۚ فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ
6:78. பின்னர், சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது: "இதுவே என் இறைவன்; இது மிகப்பெரியது" என்று அவர் கூறினார்; அதுவும் மறைந்தபோது அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைவிட்டு நிச்சயமாக நான் விலகிக் கொண்டவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
18:17 وَتَرَى الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِيْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِىْ فَجْوَةٍ مِّنْهُ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ ؕ مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِيًّا مُّرْشِدًا
18:17. சூரியன் உதயமாகும்போது (அவர்கள்மீது படாமல்) அது, அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது, அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் விசாலமான இடத்தில் இருக்கின்றனர்: இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர்வழிபெற்றவராவார்: இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர்வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவேமாட்டீர்.
18:90 حَتّٰٓى اِذَابَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۙ
18:90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை அடைந்தபோது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அதனை விட்டுக் (காத்துக் கொள்ளும்) எந்தத் தடுப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தவில்லை.
50:39 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوْبِۚ
50:39. எனவே, (நபியே) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக! இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் துதிப்பீராக!
97:5 سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.