உயர்வு
2:47 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
2:47. இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையையும், அகிலத்தாரைவிட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூருங்கள்.
20:4 تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلَى ؕ
20:4. பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப்பட்டது.
27:63 اَمَّنْ يَّهْدِيْكُمْ فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَ الْبَحْرِ وَمَنْ يُّرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖؕ ءَاِلٰـهٌ مَّعَ اللّٰهِؕ تَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَؕ
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய அருள்மழைக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
80:14 مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.