உயிரற்றவை
2:173 اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுக்கப்பட்டதையும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது தடைசெய்திருக்கிறான்; ஆனால், எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனுமாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
6:145 قُل لَّاۤ اَجِدُ فِىْ مَاۤ اُوْحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ
6:145. (நபியே) நீர் கூறும்: "தானாக இறந்ததாக அல்லது ஓட்டப்பட்ட இரத்தமாக அல்லது பன்றியின் மாமிசமாக உள்ளதைத் தவிர (வேறதனையும்) உண்பவருக்கு அது உண்ண தடுக்கப்பட்டதாக எனக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை: ஏனெனில், நிச்சயமாக அது அசுத்தமானதாகும்; அல்லது அதை அல்லாஹ் அல்லாதவருக்காக பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டு)ள்ள பாவமான (உண)வைத் தவிர (வேறெதுவும் தடுக்கப்படவில்லை): ஆகவே, எவரேனும் வரம்பை மீறாமலும், பாவம் செய்யாதவராகவும் நிர்ப்பந்திக்கப்பட்டு (புசித்து)விட்டால் - அப்போது (அவர் மீது குற்றமாகாது: ஏனெனில்,) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெரும் கருணை உடையோனாகவும் இருக்கின்றான்."
10:31 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَؕ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ
10:31. உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறவனும், உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துகிறவனும் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று (நபியே!) நீர் கேளும்; உடனே அவர்கள், "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின், (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?" என்று நீர் கேட்பீராக!
30:19 يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَيُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே, (மரணித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.