உயிர்ப்பித்து எழுப்பப்படுதல்
6:29   وَقَالُوْۤا اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ‏
6:29. மேலும், "இது நம்முடைய உலக வாழ்வைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை: நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப்படமாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:36   اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ‌ ؕؔ وَالْمَوْتٰى يَـبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَؔ‏
6:36. (உமதழைப்பிற்கு) பதில் கூறுபவரெல்லாம் (உமக்கு) செவிசாய்ப்போர் தாம்; இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்கப்படுவார்கள்.
6:60   وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى‌ۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
6:60. அவன்தான் இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான்; இன்னும், நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும், குறிப்பிட்ட தவணை பூர்த்திசெய்யப்படுவதற்காக அதில் (பகலில்) உங்களை எழுப்புகிறான்; பின்னர், உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
7:167   وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ يَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ‌ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِيْعُ الْعِقَابِ ‌ ‌ۖۚ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏
7:167. (நபியே!) உம்முடைய இறைவன் - அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள் மீது (ஆதிக்கம் செலுத்துமாறு) மறுமை நாள் வரை, திண்ணமாக அவன் அனுப்புவான் என்று அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன்; மேலும், நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
11:7   وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; அவனுடைய 'அர்ஷ்' (அரியாசனம்) நீரின் மேல் இருந்தது; உங்களில் யார் செயலால் அழகானவர்? என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும், நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால் (அதற்கு) நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
15:36   قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
15:36. "என்னுடைய இறைவனே! (இறந்தவர்களான) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று (இப்லீஸ்) கூறினான்.
16:21   اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏
16:21. அவர்கள் இறந்தவர்களே - உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
16:38   وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ‌ۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُ‌ؕ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ‏
16:38. இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
16:84   وَيَوْمَ نَـبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِيْنَ كَفَرُوْا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏
16:84. ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக! அந்) நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகல் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது; இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளவும்) இடங்கொடுக்கப்படமாட்டார்கள்.
16:89   وَيَوْمَ نَـبْعَثُ فِىْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ‌ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِ ‌ؕ وَنَزَّلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ تِبْيَانًا لِّـكُلِّ شَىْءٍ وَّ هُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ‏
16:89. இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக சாட்சியை எழுப்பும் நாளில், உம்மை இம்மக்களுக்கு எதிராக சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கிவைத்திருக்கிறோம்.
17:49   وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
17:49. இன்னும், "(இறந்து) எலும்புகளாகவும், மக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
17:79   وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا‏
17:79. இன்னும், இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், (மகாமம் மஹ்மூதா என்னும்) புகழ் பெற்ற தலத்தில் உம்மை எழுப்பப் போகிறான்.
17:98   ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
17:98. அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து, "நாம் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கிப்போனவையாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்களே, அதற்காக அவர்களுடைய கூலி இதுதான்.
19:15   وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக!
19:33   وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
19:33. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்றும் (அக் குழந்தை) கூறியது.
22:5   يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ ؕ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ۚ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْۢ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا‌ ؕ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍۢ بَهِيْجٍ‏
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்களானால் - (அறிந்து கொள்ளுங்கள்!) நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக்கட்டியிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கர்ப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு, உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்; பின்பு, நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைகிறீர்கள்; அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரணிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவுபெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
22:7   وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ‏
22:7. (மறுமைநாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; சமாதிகளில் இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
23:16   ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ‏
23:16. பிறகு, மறுமை நாளன்று நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
23:82   قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ‏
23:82. "நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா, நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?" என்று அவர்கள் கூறினார்கள்.
23:100   لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
23:100. "நான் விட்டுவந்ததில் (இனி) நற்செயலைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்); அவ்வாறில்லை! நிச்சயமாக அது - அதை(ப் பற்றி) அவன் கூறுகின்ற ஒரு (வெறும்) வார்த்தையேயாகும்; அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது.
26:87   وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏
26:87. "இன்னும், அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!"
30:56   وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَ الْاِيْمَانَ لَقَدْ لَبِثْـتُمْ فِىْ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوْمِ الْبَـعْثِ فَهٰذَا يَوْمُ الْبَـعْثِ وَلٰـكِنَّكُمْ كُنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
30:56. ஆனால், எவர்களுக்குக் கல்வியும் (இறை) நம்பிக்கையும் கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்: "அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்த) நாள் வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரணித்தோர்) உயிர்பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்."
31:28   مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ‏
31:28. (மனிதர்களே!) உங்களைப் படைப்பதும், (நீங்கள் மரணித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரணித்தபின் உயிர்கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.
37:16   ءَاِذَا مِتْنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
37:16. "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா?" (என்றும் கேட்கின்றனர்.)
38:79   قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
38:79. "இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீ அவகாசம் கொடுப்பாயாக!" என்று அவன் கேட்டான்.
56:47   وَكَانُوْا يَقُوْلُوْنَ ۙ اَٮِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
56:47. மேலும், அவர்கள் "நாம் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக்கொண்டும் இருந்தனர்.
58:6   يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا‌ ؕ اَحْصٰٮهُ اللّٰهُ وَنَسُوْهُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‌‏
58:6. அல்லாஹ், அவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிப்பான்; அவர்கள் அவற்றை மறந்துவிட்ட போதிலும், அல்லாஹ் அவற்றைக் கணக்கெடுத்து வைத்திருக்கின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
58:18   يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ‏
58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க! நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
64:7   زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ يُّبْـعَـثُـوْا‌ ؕ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتُبْـعَـثُـنَّ ثُمَّ لَـتُنَـبَّـؤُنَّ بِمَا عَمِلْـتُمْ‌ؕ وَذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
64:7. (மரணித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; "அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்; பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள்: மேலும், அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
72:7   وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۙ‏
72:7. "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, 'அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பவே மாட்டான்' என்று எண்ணிக்கொண்டு இருந்தனர்."
82:4   وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ‏
82:4. மண்ணறைகள் புரட்டப்படும்போது,
83:4   اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
100:9   اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
100:9. அவன் அறிந்துகொள்ளவில்லையா? மண்ணறை (கப்ரு)களில் உள்ளவை எழுப்பப்படும்போது-