உரிமை
2:94   قُلْ اِنْ كَانَتْ لَـکُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ کُنْتُمْ صٰدِقِيْنَ‏
2:94. "அல்லாஹ்விடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) மற்ற மனிதர்களுக்கன்றி உங்களுக்கே சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக!
2:159   اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ‏
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
2:229   اَلطَّلَاقُ مَرَّتٰنِ‌ فَاِمْسَاكٌ ۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌ ۢ بِاِحْسَانٍ‌ ؕوَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ‌ؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖؕ‌ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ‌ۚ‌ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
2:229. (இத்தகைய) மீட்டுக் கொள்ளக்கூடிய விவாகரத்து இரண்டு முறைகள்தாம்; பின்னர், (தவணைக்குள்) முறைப்படி சேர்ந்துவாழலாம்; அல்லது நன்முறையில் விட்டுவிடலாம்; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சும்போது தவிர, நீங்கள் (மனைவியரான) அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; இன்னும், அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களிருவரும் நிலைநிறுத்தமாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை; இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; ஆகையால், அவற்றை மீறாதீர்கள்; எவரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறினால், நிச்சயமாக அவர்கள்தான் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
5:95   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ‌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ‌ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ‌ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ‏
5:95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை ஈடாகக் கொடுக்கவேண்டியது (அதற்கான) தண்டனையாகும்; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது (பரிகாரம் அளிக்க ஏதும் இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்கவேண்டும்; முன்னர் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான்; எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரைத் தண்டிப்பான்; அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.
5:116   وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏
5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (மறுமைநாளில்) கேட்கும்போது, (அதற்கு) அவர் "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்: என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறியமாட்டேன்: நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று கூறுவார்.
9:17   مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالْكُفْرِ‌ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏
9:17. இணைவைப்பவர்களுக்கு - (தங்கள்) நிராகரிப்புக்குத் தாங்களே சாட்சி சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை இவர்கள் பரிபாலனம் செய்ய எவ்விதத் தகுதியும் இல்லை; அவர்களுடைய (நற்) செயல்கள் (யாவும் பலன்தராது) அழிந்துவிட்டன; இன்னும், அவர்கள் நிரந்தரமாக நரகத்தில் தங்கிவிடுபவர்கள்.
16:71   وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ فِى الرِّزْقِ‌ۚ فَمَا الَّذِيْنَ فُضِّلُوْا بِرَآدِّىْ رِزْقِهِمْ عَلٰى مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَهُمْ فِيْهِ سَوَآءٌ‌ ؕ اَفَبِنِعْمَةِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏
16:71. அல்லாஹ் உங்களில் சிலரை, சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கின்றான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள் தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு (த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் - அவர்களும் அதில் சமமானவர்களாக இருக்க - கொடுத்துவிடுபவர்களாக இல்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் மறுக்கின்றனர்?
16:75   ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا‌ؕ هَلْ يَسْتَوٗنَ‌ؕ اَ لْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடைமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களும் கொடுத்திருக்கிறோம்; அவனும், அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கின்றான்; இவர்கள் (இருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
24:33   وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ ‌ؕ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
24:33. திருமணம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக்கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் அருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்; இன்னும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப்பத்திரம் விரும்பினால் - அவர்களில் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின், அவர்களுக்கு (உரிமைப்பத்திரம்) எழுதிக் கொடுங்கள்; இன்னும், (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக! மேலும், தங்கள் கற்பைப் பேணிக்கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அவர்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
30:28   ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ‌ؕ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِىْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِيْفَتِكُمْ اَنْفُسَكُمْ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக்கூறுகிறான்: உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் உங்களுடைய அடிமைகளிலிருந்து உங்களுக்குக் கூட்டாளிகள் (இருப்பதை நீங்கள் விரும்புவது) உண்டா? நீங்களும் (அவர்களும்) அதில் சமமாக இருந்து, உங்களை(ப் போன்ற சுதந்திரமான பங்காளிகளின் விருப்பு - வெறுப்புகளை) நீங்கள் பயப்படுவது போல் (அடிமைக் கூட்டாளிகளான) இவர்களை நீங்கள் பயப்படுவீர்களா? இவ்வாறாகவே, நாம் நம் அத்தாட்சிகளை விளங்கும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
36:71   اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
39:74   وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَـنَّةِ حَيْثُ نَشَآءُ ‌ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ‏
39:74. அதற்கு (சுவர்க்கவாசிகள்): "தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கிவைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்)பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தானே அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று அவர்கள் கூறுவார்கள்; எனவே, நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.