உலோபித்தனம்
3:180 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
3:180. அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்தவைகளில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ணவேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்களோ அதை மறுமைநாளில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக அணிவிக்கப்படுவார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் அனந்தர உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.
4:37 اۨلَّذِيْنَ يَـبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا ۚ
4:37. அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி ஏவி, அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; இன்னும், (அத்தகைய) நிராகரிப்போருக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
9:76 فَلَمَّاۤ اٰتٰٮهُمْ مِّنْ فَضْلِهٖ بَخِلُوْا بِهٖ وَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ
9:76. (அவ்வாறே) அவன், அவர்களுக்குத் தன் அருளிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாகப் பின்வாங்கிவிட்டனர்.
47:37 اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوْا وَيُخْرِجْ اَضْغَانَكُمْ
47:37. அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு உங்களை வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்திவிடுவான்.
47:38 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ۚ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ ؕ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ۚ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
47:38. அறிந்துகொள்க! நீங்கள்தாம் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யுமாறு அழைக்கப்படுகிறீர்கள்; ஆனால், உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்: எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான்; அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன்; நீங்களோ தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள்; எனவே, (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை (உங்கள் இடத்தில்) அவன் மாற்றிவிடுவான்; பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
57:24 اۨلَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ
57:24. அவர்கள் எத்தகையோரென்றால், (தாமும்) கஞ்சத்தனம் செய்வதுடன், பிற மனிதர்களுக்கும் கஞ்சத்தனத்தை ஏவுகின்றனர்; இன்னும், எவன் (தன் மீதுள்ள கடமைகளை) புறக்கணிக்கின்றானோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் அவனே (எவரிடமும்) தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
92:8 وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ
92:8. ஆனால், எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வின் அருளை விட்டும்) தன்னைத் தேவையற்றவனாக(க் கருது)கிறானோ,