உறவினர்கள்
2:177   لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால், புண்ணியம் உடையவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும், வானவர்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, செல்வத்தைத் தம் விருப்பத்தின் மீது உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் யாசிப்பவர்களுக்கும், அடிமைகளின் மீட்புக்காகக் கொடுத்தவரும்; இன்னும், தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து, இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், பொறுமையுடன் இருந்தவர்களுமாவர்; அத்தகையோர்தாம் உண்மையாளர்கள்; இன்னும், அவர்கள்தாம் (இறைவனை) அஞ்சியவர்கள்.
4:8   وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
4:8. பாகப்பிரிவினை செய்யும்போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்துவிடுவார்களானால் அவர்களுக்கும் அச்சொத்திலிருந்து வழங்குங்கள்; மேலும், அவர்களிடம் கனிவான சொல்லைக் கூறுங்கள்.
4:36   وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏
4:36. மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுடன் எதனையும் இணையாக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டைவீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவனாக, பெருமை உடையவனாக இருப்பவனை நேசிப்பதில்லை.
5:106   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ‌ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى‌ ۙ وَلَا نَـكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ‏
5:106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து, அவர் மரண சாஸனம் செய்யும் நேரத்தில் உங்களிலிருந்து நீதியுடைய இருவர் உங்களுக்கு மத்தியில் சாட்சியாக இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரணத்துன்பம் ஏற்பட்டால் உங்களையல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக்கொள்ளவும்: இவ்விருவரும் அதனை சொற்ப கிரயத்திற்கு நாங்கள் விற்று விடமாட்டோம்! (எவருக்கு சாட்சியம் கூறுகின்றோமோ) அவர்கள், (எங்களுடைய) பந்துக்களாக இருந்த போதிலும், சரியே! இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம்! (அவ்வாறு செய்திருந்தால்) அப்பொழுது நிச்சயமாக பாவிகளில் உள்ளவர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
6:152   وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ ۚ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏
6:152. அநாதையின் பொருளை அவன் பருவம் அடையும் வரையில், அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதமாக நிறைவாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது - (அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய) உறவினராக இருந்தபோதிலும், நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வின் உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்; நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு இவற்றை ஏவுகிறான்.
8:41   وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
8:41. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (போரில்) பெற்ற வெற்றிப் பொருட்களிலிருந்து நிச்சயமாக ஐந்தில் ஒருபங்கு அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும், (சத்தியத்துக்கும், அசத்தியத்துக்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ருப் போரின்) நாளில் - இரு படையினர் சந்தித்துக்கொண்ட நாளில், நம் அடியாரின் மீது நாம் இறக்கிவைத்த (உதவி முதலிய)வற்றின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், (மேற்கூறியது பற்றி) உறுதியாக அறிந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
9:113   مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ‏
9:113. இணைவைப்பவர்களுக்காக - அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்று தெளிவானபின், மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
16:90   اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
16:90. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள், தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றைவிட்டும் (உங்களைத்) தடுக்கின்றான்; நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசம் செய்கின்றான்.
17:26   وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا‏
17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடுப்பீராக! மேலும், ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்துவிடுவீராக!) வீணாக (பொருளை) விரயம் செய்யாதீர்.
24:22   وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப்பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்யவேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கிருபையுள்ளவன்.
30:38   فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
30:38. ஆகவே, உறவினருக்குரிய அவர்கள் உரிமையையும் கொடுத்துவிடுவீராக! (அவ்வாறே) ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் (அவரவர்க்குரியதை நீர் கொடுத்து வருவீராக!); எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள் (அவ்வாறு கொடுத்துவருபவர்கள் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.
35:18   وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
35:18. (மறுமைநாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன் வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும், பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமந்துகொள்ளப்படாது; எவர்கள், மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர்; எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கிறார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
42:23   ذٰ لِكَ الَّذِىْ يُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ‌ؕ قُلْ لَّاۤ اَسْــٴَــــلُـكُمْ عَلَيْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِى الْقُرْبٰى‌ؕ وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ
42:23. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயம் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (மேலும்) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
59:7   مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةًۢ بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ ؕ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏
59:7. (வெற்றி கொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை - அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும்; உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக்கொடுக்கக் கட்டளையிடப்பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்கினாரோ (அதை விட்டும்) விலகிக்கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.