உஹத் யுத்தம்
3:121   وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
3:121. (நபியே!) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று, நம்பிக்கையாளர்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தியதை (நினைவு கூர்வீராக!); அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:122   اِذْ هَمَّتْ طَّآٮِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا‌ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
3:122. (அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி)விட நாடியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் உதவி செய்பவனாக இருந்தான்; ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
3:139   وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
3:139. எனவே, நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள்தாம் மிக மேலானவர்கள்.
3:179   مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏
3:179. (நயவஞ்சகர்களே!) நல்லவரிலிருந்து தீயவரைப் பிரித்தறிவிக்கும்வரை, நீங்கள் எதன் மீது இருக்கிறீர்களோ அதன் மீது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டுவைப்பவனாக இல்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்துவைப்பவனாகவும் இல்லை; ஏனெனில், (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவர்களைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவீர்களாயின் உங்களுக்கு மகத்தான (நற்)கூலியுண்டு.