எச்சரிக்கை செய்பவர்
6:48   وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
6:48. (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு சீர்திருத்திக் கொண்டனரோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
6:51   وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْۤا اِلٰى رَبِّهِمْ‌ لَـيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
6:51. இன்னும், எவர்கள் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ, அவர்களுக்கு அவனைத் தவிர பாதுகாப்பளிப்பவனோ, பரிந்துபேசுபவனோ வேறு யாரும் இல்லை என்று, (குர்ஆனாகிய) இதனைக் கொண்டு எச்சரிக்கை செய்வீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.
6:92   وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا‌ ؕ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ‌ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَ‏
6:92. (குர்ஆனாகிய) இது வேதமாகும்; இதனைப் பாக்கியம் செய்யப்பட்டதாகவும், தனக்கு முன்னுள்ள (வேதத்)தை மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கிவைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) தாய் நகர(மாகிய மக்கா) வாசிகளையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் (நாம் இதனை அருளினோம்); எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள்; இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
7:2   كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِىْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
7:2. இது வேதமாகும்; (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், நம்பிக்கையாளர்களுக்கு உபதேசமாகவும் உமக்கு இது அருளப்பட்டுள்ளது; எனவே, இதனால் உமது உள்ளத்தில் கலக்கம் ஏற்பட வேண்டாம்.
10:73   فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓٮِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ‏
10:73. அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றினோம்; மேலும், அவர்களை (முன்னவர்களுக்குப் பூமியில்) பின் தோன்றல்களாகவும் ஆக்கினோம்; நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை நாம் மூழ்கடித்தோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
11:25   وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏
11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பிவைத்தோம்; (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்."
14:44   وَاَنْذِرِ النَّاسَ يَوْمَ يَاْتِيْهِمُ الْعَذَابُ فَيَـقُوْلُ الَّذِيْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَـتَّبِعِ الرُّسُلَ‌ؕ اَوَلَمْ تَكُوْنُوْۤااَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَالَـكُمْ مِّنْ زَوَالٍۙ‏
14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்: "எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின்பற்றுகிறோம்" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்துகொண்டிருக்கவில்லையா?" (என்றும்.)
16:2   يُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ‏
16:2. அவன், தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் கட்டளையிலிருந்து "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) இறைவன், என்னைத் தவிர வேறு யாருமில்லை; ஆகையால், நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற வஹீயைக் கொண்டு மலக்குகளை இறக்கி வைக்கிறான்.
18:56   وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ ۚ وَيُجَادِلُ الَّذِيْنَ كَفَرُوْا بِالْبَاطِلِ لِـيُدْحِضُوْا بِهِ الْحَـقَّ‌ وَاتَّخَذُوْۤا اٰيٰتِىْ وَمَاۤ اُنْذِرُوْا هُزُوًا‏
18:56. இன்னும், நாம் தூதர்களை நன்மாராயம் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும், நிராகரிப்பாளர்களோ பொய்யைக்கொண்டு தர்க்கம் செய்கிறார்கள் - அதன் மூலம் சத்தியத்தை அழித்துவிடுவதற்காக; (எனினும்) என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
19:39   وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِىَ الْاَمْرُ‌‌ۘ وَهُمْ فِىْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
19:39. மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும், அவர்கள் (அது பற்றி) மறதியிலுள்ளவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
19:97   فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا‏
19:97. (நபியே!) நாம் இ(வ்வேதத்)தை உம்முடைய மொழியில் (அரபியில்) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு (நம்மை) அஞ்சுவோருக்கு நீர் நன்மாராயம் கூறவும், வீண் வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
21:45   قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْىِ ‌‌ۖ  وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا يُنْذَرُوْنَ‏
21:45. "நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் 'வஹீ' மூலம் தான்" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்கமாட்டார்கள்.
25:1   تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ‏
25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
25:56   وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًا‏
25:56. இன்னும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
26:214   وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏
26:214. இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
27:92   وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِيْنَ‏
27:92. இன்னும், குர்ஆனை ஓதிவரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே, எவர் நேர்வழியை அடைகிறாரோ, அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும், எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்."
28:46   وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَيْنَا وَلٰـكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
28:46. இன்னும், நாம் (மூஸாவை) அழைத்தபோது நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும், ஒரு கூட்டத்தினருக்கு - உமக்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத (இச்) சமூகத்தாருக்கு நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவை கூறப்படுகிறது).
29:50   وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيٰتٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ ؕ وَاِنَّمَاۤ اَنَا۟ نَذِيْرٌ مُّبِيْنٌ‏
29:50. "அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; "அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; நிச்சயமாக நான் வெளிப்படையாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
34:28   وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
34:28. இன்னும், (நபியே!) நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி (வேறெவ்வாறும்) அனுப்பவில்லை; ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
34:44   وَمَاۤ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍؕ‏
34:44. எனினும், (இதற்குமுன்) நாம் (உங்களை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
34:46   قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰى وَفُرَادٰى ثُمَّ تَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ لَّـكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيْدٍ‏
34:46. "நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்து (நின்று) பின்னர் சிந்தித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறும்; "உங்கள் தோழருக்குப் பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை."
35:18   وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
35:18. (மறுமைநாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன் வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும், பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவுகூட அவ்வாறு சுமந்துகொள்ளப்படாது; எவர்கள், மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர்; எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கிறார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.
35:24   اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ‏
35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்தச் சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
36:10   وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
36:10. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமேதான்; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
36:11   اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அளவற்ற அருளாளனுக்கு அஞ்சுகிறாரோ அவரைத்தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான (நற்)கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக!
36:70   لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது; நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது.
38:65   قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ‌‌ۖ  وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ‌ ۚ‏
38:65. (நபியே!) நீர் கூறுவீராக!: "நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே; அன்றியும், ஏகனும் (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லை."
38:70   اِنْ يُّوْحٰۤى اِلَىَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا۟ نَذِيْرٌ مُّبِيْنٌ‏
38:70. "நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை."
39:71   وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَنَّمَ زُمَرًا‌ ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَـكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ قَالُوْا بَلٰى وَلٰـكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ‏
39:71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக்கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்த உடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: "உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?" என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) "ஆம்! (வந்தார்கள்)" என்று கூறுவார்கள்; எனினும், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டது.
40:15   رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ‌ ۚ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ ۙ‏
40:15. (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது, தன் கட்டளையினால் வஹீயை இறக்கிவைக்கிறான்.
40:18   وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ كٰظِمِيْنَ ؕ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ ؕ‏
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்) வேளையில், அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) உற்ற நண்பனோ, ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
41:4   بَشِيْرًا وَّنَذِيْرًا‌ ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ‏
41:4. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால், அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதுமில்லை.
46:21   وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
46:21. மேலும், ஆது சமூகத்தாரின் சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறைத் தூதர்கள்) வந்திருக்கிறார்கள்; (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள்! நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!
46:29   وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ‌ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا‌ۚ فَلَمَّا قُضِىَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ‏
46:29. மேலும், (நபியே!) நாம் உம்மிடம் இந்தக் குர்ஆனைச் செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரைத் திருப்பியதும், அவர்கள் அங்கு வந்தபோது, "மௌனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; பிறகு, அது (ஓதி) முடிக்கப்பட்டபோது அச்சமூட்டி எச்சரிப்போராய்த் தம் இனத்தாரிடம் திரும்பிச் சென்றனர்.
50:2   بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَىْءٌ عَجِيْبٌ‌ۚ‏
50:2. எனினும், அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: "இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்."
51:50   فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
51:50. "ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்" (என்று நபியே! நீர் கூறுவீராக)!
51:51   وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏
51:51. "மேலும், அல்லாஹ்வுடன் வேறு கடவுளை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்" (என்றும் கூறும்).
67:8   تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ‌ؕ كُلَّمَاۤ اُلْقِىَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ نَذِيْرٌ‏
67:8. அது கோபத்தால் வெடித்துவிடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9   قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார். ஆனால், நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை' என்று சொன்னோம்."
67:26   قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ وَاِنَّمَاۤ اَنَا نَذِيْرٌ مُّبِيْنٌ‏
67:26. "இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்" என்று (நபியே!) நீர் கூறும்.
71:1   اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
71:1. நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அது பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" என (தூதராக) அனுப்பினோம்.
74:2   قُمْ فَاَنْذِرْۙ‏
74:2. நீர் எழுந்து (மக்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
74:36   نَذِيْرًا لِّلْبَشَرِۙ‏
74:36. (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது.
78:40   اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ  يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا‏
78:40. நிச்சயமாக, நெருங்கிவரும் வேதனையைப் பற்றி உங்களுக்கு நாம் எச்சரிக்கை செய்கிறோம்; மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை (அமல்களை) அந்நாளில் கண்டு கொள்வான்; மேலும், நிராகரிப்பவன் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
79:45   اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰٮهَاؕ‏
79:45. அதைப் பயப்படுவோருக்கு நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர்தாம்.