எட்டு
4:12   وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ‌ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ‌ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ‌ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏
4:12. இன்னும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதிபாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால், அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால்பாகம் தான்; (இதுவும்) அவர்கள் செய்திருக்கின்ற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர, உங்களுக்குப் பிள்ளை இல்லாதிருப்பின் நீங்கள் விட்டுச்சென்றதிலிருந்து, அவர்களுக்குக் கால்பாகம் தான், உங்களுக்குப் பிள்ளையிருந்தால் அப்போது, அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒருபாகம் தான், (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்; அனந்தரம்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ (இறந்து) - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒருபாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் கூட்டாளிகளாவார்கள்; (இதுவும்) அவர்களின் மரண சாசனமும், கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால், (மரண சாஸனம் வாரிசுகள் எவருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்; இது) அல்லாஹ்வின் கட்டளையாகும்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
6:143   ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ۚ مِنَ الضَّاْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ نَـبِّـــٴُـــوْنِىْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ۙ‏
6:143. "(கால்நடைகளில்) எட்டு வகைகள் உள்ளன; செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை; இரு ஆண் இனங்களையா? அல்லது இரு பெண் இனங்களையா? அல்லது இரு பெண் இனங்களுடைய கர்ப்பக்கோளறைகள் எதனைப் பொதிந்து கொண்டிருக்கின்றனவோ அதனையா அவன் தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் (இதனை) எனக்கு அறிவியுங்கள்!" என்று (நபியே!) நீர் கேட்பீராக!
18:22   سَيَـقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ‌ۚ وَيَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِالْغَيْبِ‌ۚ وَيَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ‌ؕ قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا يَعْلَمُهُمْ اِلَّا قَلِيْلٌ  فَلَا تُمَارِ فِيْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا وَّلَا تَسْتَفْتِ فِيْهِمْ مِّنْهُمْ اَحَدًا‏
18:22. (அவர்கள்) மூன்று பேர்தாம் - அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்; (இல்லை,) அவர்கள் ஐந்து பேர்தாம் - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய் என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்,) ஏழு பேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய் என்று சொல்கிறார்கள்; (நபியே!) "அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன்தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறியமாட்டார்கள்" என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும், அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
28:27   قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏
28:27. (அப்போது) அவர் (மூஸாவிடம்) கூறினார்: "நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலைசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துக்கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன்; ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்திசெய்தால் அது உம் விருப்பம்; நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை; அல்லாஹ் நாடினால் என்னை நல்லவர்களில் உள்ளவராகக் காண்பீர்."
39:6   خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَـكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ؕ يَخْلُقُكُمْ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْۢ بَعْدِ خَلْقٍ فِىْ ظُلُمٰتٍ ثَلٰثٍ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ‌ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ فَاَ نّٰى تُصْرَفُوْنَ‏
39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடிகளை இறக்கி இருக்கிறான்; உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப்பின் மற்றொரு படைப்பாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; ஆட்சி அவனுக்கே உரியது; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை; அவ்வாறிருக்க, (அவனைவிட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுகிறீர்கள்?
69:7   سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏
69:7. அவர்கள் மீது அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே, அந்தச் சமூகத்தினரை, அடிப்பாகங்களுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) கண்டிருப்பீர்.
69:17   وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ‏
69:17. இன்னும், வானவர்கள் அதன் கடைக் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை, (வானவர்) எட்டுப் பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.