எரி - எரிபொருள் - எரி கொள்ளிகள்
2:24 فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوْا النَّارَ الَّتِىْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ
2:24. அப்படி நீங்கள் செய்யாவிட்டால் - அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள்; நிராகரிப்போர்க்கு அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
2:266 اَيَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۙ لَهٗ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِۙ وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ ۖۚ فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِيْهِ نَارٌ فَاحْتَرَقَتْؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்சையும் திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் கீழே நீரோடைகள் ஓடுகின்றன; அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன; (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது; அவருக்கு பலவீனமான சந்ததிகளே இருக்கின்றனர் - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக்காற்று அ(ந்தத் தோட்டத்)தைத் தாக்கி பின்னர், எரித்து(ச் சாம்பலாக்கி)விடுகின்றது; (இதை அவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்வதற்காக அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
3:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۙ
3:10. நிச்சயமாக நிராகரிப்போருக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் ஒருபோதும் தடுக்கமாட்டாது; இன்னும், அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள் ஆவார்கள்.
4:55 فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا
4:55. (அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் அதனை நம்பிக்கை கொண்டார்கள்; இன்னும், அவர்களில் சிலர் அதைவிட்டும் விலகிக்கொண்டார்கள்; கொழுந்துவிட்டெரியும் நரகமே போதுமானது.
8:50 وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
8:50. வானவர்கள் நிராகரிப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், அவர்களுடைய முகங்களிலும், பின்புறங்களிலும் அடிப்பார்கள். மேலும், "எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்றும் கூறுவார்கள்.
20:10 اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَى النَّارِ هُدًى
20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டுவரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டுபிடிக்கவோ செய்யலாம்" (என்று கூறினார்).
21:15 فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰٮهُمْ حَتّٰى جَعَلْنٰهُمْ حَصِيْدًا خٰمِدِيْنَ
21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை, அவர்களுடைய இக்கூப்பாடு நீங்காது இருந்தது.
21:68 قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ
21:68. (இதற்கு) அவர்கள், "நீங்கள் (இவரை ஏதாவது) செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
22:4 كُتِبَ عَلَيْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ يُضِلُّهٗ وَيَهْدِيْهِ اِلٰى عَذَابِ السَّعِيْرِ
22:4. அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப்பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ, அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரிநரகின் வேதனையின்பால் அவருக்கு வழிகாட்டுகிறான்.
22:9 ثَانِىَ عِطْفِهٖ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ ؕ لَهٗ فِى الدُّنْيَا خِزْىٌ وَّنُذِيْقُهٗ يَوْمَ الْقِيٰمَةِ عَذَابَ الْحَرِيْقِ
22:9. அவன் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மனிதர்களை) வழிகெடுப்பதற்காகத் தன் கழுத்தைத் திருப்பியவனாக (தர்க்கம் செய்கிறான்): அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; மறுமை நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.
22:22 كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِيْدُوْا فِيْهَا وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ
22:22. (இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும்போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, "எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்" (என்று சொல்லப்படும்).