எலும்பு
2:259   اَوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ‌ۚ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ‌ۚ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ‌ؕ قَالَ كَمْ لَبِثْتَ‌ؕ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ؕ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ۚ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ‌ؕ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
2:259. அல்லது, ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரை (நீர் அறிவீரா?) அந்தக் கிராமமானது அடியோடு வீழ்ந்துகிடந்தது; (இதைப் பார்த்த அவர்), "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மடிந்த பின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச் செய்தான்; பின்னர், அவரை (உயிர்கொடுத்து) எழுப்பி, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறுபகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை! நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை (எந்த விதத்திலும்) மாறுதலடையவில்லை; ஆனால், உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்); இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்: அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர், அவற்றின் மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக் கூறினான்; (இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவானபோது, அவர் "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்!" என்று கூறினார்.
6:146   وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ‌‌ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ‌ ؕ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ‌‌ ۖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
6:146. (பிராணிகள் மற்றும் பறவைகளில் விரல்கள் பிளந்த) நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம்; இன்னும், மாட்டிலிருந்தும், ஆட்டிலிருந்தும் அவ்விரண்டினுடைய கொழுப்புகளையும் அவர்களின் மீது தடுத்திருந்தோம்; (எனினும்) அவ்விரண்டின் முதுகுகளோ அல்லது குடல்களோ சுமந்திருக்கின்றதையும், அல்லது எலும்புடன் கலந்திருப்பதையும் தவிர - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களை நாம் தண்டித்தோம்; நிச்சயமாக நாம் உண்மையாளராவோம்.
17:49   وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
17:49. இன்னும், "(இறந்து) எலும்புகளாகவும், மக்கிப்போனவையாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
17:98   ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏
17:98. அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து, "நாம் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கிப்போனவையாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்களே, அதற்காக அவர்களுடைய கூலி இதுதான்.
19:4   قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏
19:4. (அவர்) கூறினார்: "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது; என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய் விடவில்லை."
23:14   ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ‏
23:14. பின்னர், அந்த இந்திரியத் துளியை இரத்தக்கட்டியாகப் படைத்தோம்; பின்னர், அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத்துண்டாகப் படைத்தோம்; பின்னர், அந்தச் சதைத் துண்டை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர், நாம் அதனை வேறொரு படைப்பாக (மனிதனாக)ச் செய்தோம்; எனவே, படைப்பாளர்களில் மிக்க அழகானவனான அல்லாஹ் பெரும்பாக்கியமுடையவன்.
23:35   اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۙ‏
23:35. "நிச்சயமாக நீங்கள் மரணித்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர், நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?"
36:78   وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகிறான்: "எலும்புகள் அவை மக்கிப்போன நிலையில் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?" என்று அவன் கேட்கிறான்.
37:16   ءَاِذَا مِتْنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
37:16. "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா?" (என்றும் கேட்கின்றனர்.)
37:53   ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ‏
37:53. "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்படுவோமா?" (என்றும் கேட்டான்.)
56:47   وَكَانُوْا يَقُوْلُوْنَ ۙ اَٮِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
56:47. மேலும், அவர்கள் "நாம் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக்கொண்டும் இருந்தனர்.
75:3   اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ‏
75:3. மனிதன் - (மடிந்தபின் உக்கிப்போன) அவனது எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று எண்ணுகிறானா?
79:11   ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ‏
79:11. நாம் மக்கிப்போன எலும்புகளாக ஆகிவிட்டபோதிலுமா?