ஏழு
2:29   هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ؕ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
2:29. அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின், அவன் வானத்தைப் படைக்க நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான்; அன்றியும், அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
2:196   وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِؕ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهٗ ؕ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖۤ اَذًى مِّنْ رَّاْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍۚ فَاِذَآ اَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْىِ‌ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْؕ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ  ؕ ذٰ لِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِىْ الْمَسْجِدِ الْحَـرَامِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்திசெய்யுங்கள், (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) பலிப் பிராணிகளில் (உங்களுக்கு) சாத்தியமானது (அதற்குப் பகரமாகும்); அந்தப் பலிப்பிராணி தனது இடத்தை அடைவதற்குமுன் உங்கள் தலை முடிகளை மழிக்காதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது அவருடைய தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடியதோ இருந்தால், (தலை முடியை இறக்கிக்கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும்; அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும்; அல்லது பலி கொடுத்தல் வேண்டும்; பின்னர் (பகைவர் பற்றிய அச்சம், நோய் போன்ற தடைகளை விட்டும்) அபயமுடையவர்களாக நீங்கள் ஆகிவிட்டால், (மக்கா சென்றபின், உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு, ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்துவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) பலிப்பிராணியிலிருந்து எது இயலுமோ அது அவரின் மீ(து கடமையான)தாகும்: (அவ்வாறு பலி கொடுக்கும் வசதியைப்) பெற்றுக் கொள்ளாதவர் ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்றல் வேண்டும்; இவை முழுமையான பத்தாகும்; இ(ந்தச் சலுகையான)து எவருடைய குடும்பம் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் - ஆகவே, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
2:261   مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) பன்மடங்காக்குகின்றான்; இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன்.
12:43   وَقَالَ الْمَلِكُ اِنِّىْۤ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ‌ؕ يٰۤاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِىْ فِىْ رُءْيَاىَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ‏
12:43. "நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்த (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் (கனவில்) கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்) கனவுக்கு விளக்கம் சொல்லுங்கள்" என்று (தம் பிரதானிகளை அழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
12:46   يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَ فْتِنَا فِىْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ ۙ لَّعَلِّىْۤ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏
12:46. (சிறையில் யூஸுஃபைக் கண்ட அவர்) "யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்த (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால், அக்கனவுக்குப் பலன் என்ன என்பதைக்) குறித்து எனக்கு அறிவிப்பீராக! மக்களிடம் நான் திரும்பிச் செ(ன்று சொ)ல்வதற்காக; (இதனை) அவர்கள் அறிந்துகொள்ளக்கூடும்" (என்று கூறினார்.)
12:47   قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًا‌ۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ‏
12:47. நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு, நீங்கள் அறுவடை செய்வதை, நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டுவையுங்கள்" என்று கூறினார்.
12:48   ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ‏
12:48. பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடைய வருடங்கள்) ஏழு வரும், நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றிலிருந்து அவைகளுக்காக நீங்கள் முற்படுத்தி வைத்தவற்றில் குறைவானவற்றைத் தவிர மற்றதை அவை (அந்தப் பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
15:44   لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ‏
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களிலிருந்து பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் உள்ளனர்.
15:87   وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ‏
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத்திரும்ப ஓதக்கூடிய (ஸூரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்தக்) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
17:44   تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
17:44. ஏழு வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளவைகளும் அவனைத் தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக்கின்றன; இன்னும், அவன் புகழைக் கொண்டு தஸ்பீஹ் (துதி) செய்யாத பொருள் (எதுவும்) இல்லை; எனினும், அவை துதி செய்வதை நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்கள்; நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை உடையவனாகவும் மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
23:86   قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ‏
23:86. "ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு (அரியாசனத்துக்கு) இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக!
41:12   فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا‌ ؕ وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ ‌ۖ  وَحِفْظًا ‌ؕ ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய காரியத்தை அறிவித்தான்: இன்னும், (உலகத்திற்கு) சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும், அதனைப் பாதுகாப்பாகவும் (ஆக்கினோம்); இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய இறைவனுடைய ஏற்பாடேயாகும்.
65:12   اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا‏
65:12. அல்லாஹ்தான் ஏழு வானங்களையும், இன்னும் பூமியிலிருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான்; அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டேயிருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் (தன்) ஞானத்தால் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காக (இவ்வாறு விளக்குகிறான்).
67:3   الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ ؕ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ‌ ؕ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ‏
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தான்; (மனிதனே!) அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்தக் குறையையும் நீ காணமாட்டாய்; பின்னும், (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஒரு பிளவை நீ காண்கிறாயா?
69:7   سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏
69:7. அவர்கள் மீது அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே, அந்தச் சமூகத்தினரை, அடிப்பாகங்களுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) கண்டிருப்பீர்.
71:15   اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۙ‏
71:15. "ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?"