ஏடு
13:38 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ
13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களுக்கு மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவர முடியாது: ஒவ்வொரு தவணைக்கும் ஓர் (பதிவு) ஏடு உள்ளது.
17:71 يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤٮِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا
17:71. (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் (நாளை நீர் நினைவூட்டுவீராக!) அந்நாளில் எவருடைய (செயல் குறிப்பு) அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
50:4 قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْۚ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ
50:4. (மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ, அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்: நம்மிடம் (யாவும் பதிக்கப்பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.