கப்ர் (புதைகுழி)
9:84 وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖ ؕ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ
9:84. அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
22:7 وَّاَنَّ السَّاعَةَ اٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا ۙ وَاَنَّ اللّٰهَ يَـبْعَثُ مَنْ فِى الْقُبُوْرِ
22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
35:22 وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
60:13 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ قَدْ يَــٮِٕـسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا يَــٮِٕـسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ
60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
80:21 ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ
80:21. பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
82:4 وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ
82:4. மண்ணறைகள் திறக்கப்படும் போது,
100:9 اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ
100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
102:2 حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ
102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.