சந்ததி
2:116   وَقَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا ۙ‌ سُبْحٰنَهٗ ‌ؕ بَل لَّهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلٌّ لَّهٗ قَانِتُوْنَ‏
2:116. இன்னும் கூறுகிறார்கள்: "அல்லாஹ் ஒரு குமாரனை ஏற்படுத்திக்கொண்டான்" என்று; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; அன்றியும், வானங்கள், பூமியில் உள்ளவையாவும் அவனுக்கே உரியவை; இவையனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.
2:233   وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ‌ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ ‌ ؕ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ‌ؕ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا ۚ لَا تُضَآرَّ وَالِدَةٌ ۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ ۚ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا ‌ؕ وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
2:233. (தங்களுடைய குழந்தைகளுக்கு, விவாகரத்து சொல்லப்பட்ட தம்மனைவியர்களைக் கொண்டே) பாலூட்டுவதைப் பூர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) சிரமம் கொடுக்கப்படமாட்டாது; தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும், தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்பட மாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது; இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை; மேலும், உங்களுடைய குழந்தைகளுக்கு (செவிலித்தாயைக் கொண்டு பாலூட்ட விரும்பினால்) நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்துவிட்டால் உங்கள் மீது குற்றமாகாது; அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
3:10   اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا‌ ؕ وَاُولٰٓٮِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۙ‏
3:10. நிச்சயமாக நிராகரிப்போருக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் ஒருபோதும் தடுக்கமாட்டாது; இன்னும், அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள் ஆவார்கள்.
3:47   قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது, எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: "அப்படித்தான், அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக் கூறுகிறான்; உடனே அது ஆகிவிடுகிறது."
3:116   اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا  ؕ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
3:116. நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டும் அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்றமுடியாது - அவர்கள் நரகவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
4:11   يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ‌ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ‌ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا‌ ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; அவர்கள் (இரு பெண்களாக அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட பெண்களாக இருந்தால் (இறந்த) அவர் விட்டுச்சென்றதிலிருந்து மூன்றில் இரண்டு (பாகம்) அவர்களுக்கு உண்டு; ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு பாதி (சொத்து) உண்டு; (இறந்த) அவருக்கு குழந்தைகள் இருக்குமானால் விட்டுச்சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு; ஆனால், அவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச் சேரும்; இவ்வாறு பிரித்துக்கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் தந்தையரோ, இன்னும் உங்கள் குழந்தைகளோ இவர்களில் யார் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையினால், இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:12   وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ‌ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ‌ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ‌ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏
4:12. இன்னும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதிபாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால், அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால்பாகம் தான்; (இதுவும்) அவர்கள் செய்திருக்கின்ற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான் - தவிர, உங்களுக்குப் பிள்ளை இல்லாதிருப்பின் நீங்கள் விட்டுச்சென்றதிலிருந்து, அவர்களுக்குக் கால்பாகம் தான், உங்களுக்குப் பிள்ளையிருந்தால் அப்போது, அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒருபாகம் தான், (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே தான்; அனந்தரம்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ (இறந்து) - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒருபாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் கூட்டாளிகளாவார்கள்; (இதுவும்) அவர்களின் மரண சாசனமும், கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால், (மரண சாஸனம் வாரிசுகள் எவருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்; இது) அல்லாஹ்வின் கட்டளையாகும்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:176   يَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْـكَلٰلَةِ‌ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَـيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ‌ ۚ وَهُوَ يَرِثُهَاۤ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ‌  ؕ فَاِنْ كَانَـتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ‌ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ؕ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اَنْ تَضِلُّوْا‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
4:176. (நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக்கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச்சென்ற (சொத்தி)லிருந்து பாதி உண்டு; (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவ(ள் விட்டுச்சென்றவைக)ளுக்கு வாரிசு ஆவான்; (சகோதரிகளான) அவர்கள் இரு பெண்களாக இருந்தால், அவன் விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டு பாகம் அவர்களிருவருக்கும் உண்டு; ஆண்களும் பெண்களுமான சகோதரர்களாக இருந்தால், இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்குகின்றான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்."
6:101   بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ ؕ وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன்; அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்; இன்னும், அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
6:137   وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَـتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ؕ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
6:137. இவ்வாறே, இணைவைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கிவைத்துள்ளன; (இணைவைப்பவர்களான) அவர்களை அழிப்பதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தைக் குழப்பமாக்குவதற்காகவுமே (இவ்வாறு அழகாக்கிவைத்தன). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்கமாட்டார்கள்; எனவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுகளையும் விட்டு விலகிவிடுவீராக!
6:140   قَدْ خَسِرَ الَّذِيْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَى اللّٰهِ‌ؕ قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ, இன்னும், அல்லாஹ் அவர்களுக்கு (உண்பதற்கு ஆகுமாக்கி)க் கொடுத்ததை அல்லாஹ்வின் மீது பொய்கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்கள்; அவர்கள் வழிகெட்டுவிட்டனர்; நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
6:151   قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
6:151. வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றை(யும், ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக்காண்பிக்கிறேன்: எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மைசெய்யுங்கள்; வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; மானக்கேடான காரியங்களை அதில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும் நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும், (நியாயமான) உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள்: இவற்றை நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) ஏவுகிறான்.
9:55   فَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ‌ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ بِهَا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ‏
9:55. அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
9:69   كَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ كَانُوْۤا اَشَدَّ مِنْكُمْ قُوَّةً وَّاَكْثَرَ اَمْوَالًا وَّاَوْلَادًا ؕ فَاسْتَمْتَعُوْا بِخَلَاقِهِمْ فَاسْتَمْتَعْتُمْ بِخَلَاقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ بِخَلَاقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِىْ خَاضُوْا‌ ؕ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
9:69. (நயவஞ்சகர்களே!) உங்களுக்கு முன்னிருந்தவர்களைப் போன்று நீங்களும் இருக்கிறீர்கள்; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பங்கைக்கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்குமுன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பங்கைக்கொண்டு சுகம் பெற்றதுபோன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பங்கைக்கொண்டு சுகம் பெற்றீர்கள்; அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள்; அத்தகையோர் இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்துவிட்டன; அவர்கள்தாம் நஷ்டவாளிகள்.
9:85   وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ‌ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّعَذِّبَهُمْ بِهَا فِى الدُّنْيَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ‏
9:85. இன்னும், அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
10:68   قَالُوْا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ الْـغَنِىُّ‌ ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
10:68. அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையைவிட்டும்) அவன் மிகத் தூய்மையானவன்; அவன் தேவையற்றவன்; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; (எனவே, அவன் சந்ததி ஏற்படுத்திக்கொண்டான் என்று கூறுகின்ற) - இதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
11:72   قَالَتْ يٰوَيْلَتٰٓى ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِىْ شَيْخًا ‌ؕ اِنَّ هٰذَا لَشَىْءٌ عَجِيْبٌ‏
11:72. அதற்கு அவர் கூறினார்: "ஆ, ஐயோ! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!"
17:11   وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَيْرِ‌ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا‏
17:11. மனிதன் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்,) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:31   وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْ‌ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا‏
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம்; அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்.
17:40   اَفَاَصْفٰٮكُمْ رَبُّكُمْ بِالْبَـنِيْنَ وَ اتَّخَذَ مِنَ الْمَلٰۤٮِٕكَةِ اِنَاثًا‌ ؕ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا‏
17:40. (மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்துவிட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண்மக்களை எடுத்துக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
17:64   وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا‏
17:64. இன்னும், "அவர்களிலிருந்து நீ எவரை (வழிசறுக்கச்செய்ய) சக்திபெற்றிருக்கிறாயோ, அவர்களை உன் கூப்பாட்டைக்கொண்டு வழி சறுக்கச்செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச்செய் - அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்துகொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!" (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றமேயன்றி வேறில்லை.
18:4   وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‏
18:4. அல்லாஹ், (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்).
18:39   وَلَوْلَاۤ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ اللّٰهُ ۙ لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ‌ ۚ اِنْ تَرَنِ اَنَا اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًا‌ ۚ‏
18:39. "மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது, (மாஷா அல்லாஹு, லா குவ்வத்த இல்லா பில்லாஹ்) 'அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை' என்று கூறியிருக்கவேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னை விடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்டபோதிலும் -"
19:15   وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக!
19:33   وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
19:33. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர் பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்றும் (அக் குழந்தை) கூறியது.
19:35   مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ‌ۙ سُبْحٰنَهٗ‌ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُؕ‏
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்: அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், 'ஆகுக!' என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
19:77   اَفَرَءَيْتَ الَّذِىْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ؕ‏
19:77. நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, "(மறுமையில்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
19:88   وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ‏
19:88. இன்னும், "அளவற்ற அருளாளன் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
19:91   اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا‌ ۚ‏
19:91. அவர்கள் அளவற்ற அருளாளனுக்கு ஒரு குமாரன் உண்டென்று வாதிடுவதினால் (அவை நிகழக் கூடும்).
19:92   وَمَا يَنْۢبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ؕ‏
19:92. ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அளவற்ற அருளாளனுக்குத் தேவையில்லாதது.
21:26   وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ‏
21:26. அவர்கள், "அளவற்ற அருளாளன் ஒரு குமாரனை(த் தனக்கென) எடுத்துக்கொண்டான்" என்று கூறுகிறார்கள்; ஆனால், அவனோ மிகவும் தூயவன்! எனினும், (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும், அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
23:91   مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ‌ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏
23:91. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடன் வேறு எந்தக் கடவுளுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வொரு கடவுளும், தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள்; (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
25:2   اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا‏
25:2. அவன் எத்தகையவன் என்றால், வானங்கள் பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான்.
28:9   وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌ ؕ لَا تَقْتُلُوْهُ ‌ۖ  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
28:9. இன்னும், (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி "(இக் குழந்தை) எனக்கும் உமக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது; இதை நீர் கொன்றுவிடாதீர்! நமக்கு இவர் பயனளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை (நம்) புதல்வராக்கிக்கொள்ளலாம்" என்று சொன்னாள்; இன்னும், அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
31:33   يٰۤاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِىْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْئًا‌ ؕ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ‌ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏
31:33. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்; இன்னும், அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்துகொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு உதவமாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எத்தகைய உதவியும் செய்கிறவனாக இல்லை; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்; ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை ஏமாற்றாதிருக்கட்டும்.
34:35   وَ قَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏
34:35. இன்னும், "நாங்கள் செல்வங்களாலும், மக்களாலும் மிகுந்தவர்கள்; ஆகவே, (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்" என்றும் கூறுகிறார்கள்.
34:37   وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِى الْغُرُفٰتِ اٰمِنُوْنَ‏
34:37. இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவர்கள் அல்லர்; ஆனால், எவர் நம்பிக்கை கொண்டு நற்செயலைச் செய்கின்றாரோ அத்தகையோருக்கு - அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு கூலி உண்டு; மேலும், அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
37:150   اَمْ خَلَقْنَا الْمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ‏
37:150. அல்லது, நாம் வானவர்களைப் பெண்களாக அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கப் படைத்தோமா?
37:152   وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
37:152. "அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான்" - (என்று கூறும்) நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
39:4   لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ يَّـتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰى مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ‌ ۙ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ‏
39:4. அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்தவற்றிலிருந்துதான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும், இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன்; அவனே (யாவரையும்) அடக்கியாளும் ஏகனான அல்லாஹ்.
42:49   لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏
42:49. அல்லாஹ்வுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி சொந்தமாகும்; தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:50   اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ ۚ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ؕ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏
42:50. அல்லது, அவர்களுக்கு அவன் ஆண் மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும், தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான்; நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
43:19   وَجَعَلُوا الْمَلٰٓٮِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا‌ ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ‌ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْــٴَـــلُوْنَ‏
43:19. அன்றியும், அளவற்ற அருளாளனின் அடியார்களாகிய வானவர்களை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்களை (நாம்) படைக்கும்போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
43:81   قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ‏
43:81. (நபியே!) நீர் கூறும்: "அளவற்ற அருளாளனுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால் (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"
57:20   اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
57:20. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக்கொள்வதும், பொருட்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது. ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது கூளமாகிவிடுகிறது. (உலகவாழ்வும் இத்தகையதே; எனவே, உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் (சொற்ப) சுகமே தவிர (வேறு) இல்லை.
58:17   لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
58:17. அவர்களுடைய சொத்துக்களும் அவர்களுடைய மக்களும், அல்லாஹ் விதிக்கும் வேதனையிலிருந்து யாதொன்றையும், அவர்களை விட்டுத் தடுத்துவிடவே மாட்டா; அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
60:3   لَنْ تَـنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ يَفْصِلُ بَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
60:3. உங்கள் உறவினரும், உங்கள் மக்களும் மறுமை நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்கமாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்றுநோக்கியவனாகவே இருக்கின்றான்.
63:9   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
63:9. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பைவிட்டும் உங்களைப் பராமுகமாக்கி விடவேண்டாம்; எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
64:14   ‌يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
64:14. நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்: எனவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்: (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாதும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
64:15   اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ‌ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏
64:15. உங்கள் பொருட்களும், உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால், அல்லாஹ்விடம்தான் மகத்தான (நற்)கூலி இருக்கிறது.
71:21   قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِىْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا‌ ۚ‏
71:21. நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறுசெய்து விட்டனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்."
71:27   اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏
71:27. "நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைப்பாயானால், உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (வேறு நல்லவர்கள் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்."
72:3   وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏
72:3. "மேலும், எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் மனைவியையோ, மகனையோ எடுத்துக் கொள்ளவில்லை."
90:3   وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏
90:3. தந்தையின் மீதும், பிறந்தோர் (ஆகிய சந்ததியினர்) மீதும் சத்தியமாக!
112:3   لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.